கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சி.ஐ. பிலிப் (C.I. Philip). இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 100 வயதாகும் சி.ஐ. பிலிப், 50 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பிரீமியர் பத்மினி (Premier Padmini) கார் ஒன்றை தற்போதும் ஓட்டி வருகிறார். யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வைரல் வீடியோ (Viral Video) பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், 100 வயதிலும் சி.ஐ. பிலிப் கார் ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. சி.ஐ. பிலிப் ஓட்டி வரும் பிரீமியர் பத்மினி கார், கடந்த 1973ம் ஆண்டு வாங்கப்பட்டதாகும். அதாவது இந்த கார் வாங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. அந்த கால கட்டத்தில் பிரீமியர் பத்மினி காருக்கு மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' இருந்து வந்தது. சி.ஐ. பிலிப் சுமார் 5 ஆண்டுகள் காத்திருந்துதான், பிரீமியர் பத்மினி காரை டெலிவரி எடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அவர் வாங்கிய உடனேயே, இந்த பிரீமியர் பத்மினி காரை தங்களுக்கு விற்பனை செய்ய முடியுமா? என பலரும் அவரிடம் கேட்டுள்ளனர்.

Premier Padmini

1973ம் ஆண்டில், பிரீமியர் பத்மினி காரின் விலை 19 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஆனால் நிறைய பேர் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கி, அதாவது 24 ஆயிரம் ரூபாய்க்கு, பிரீமியர் பத்மினி காரை வாங்கி கொள்ள தயாராக இருந்தனர். ஆனால் சி.ஐ பிலிப் இதற்கு ஒப்பு கொள்ளவில்லை.

இதனால் இன்றளவும் அவரிடம் இந்த கார் இருந்து வருகிறது. தற்போது தினமும் 2-3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சி.ஐ. பிலிப் பிரீமியர் பத்மினி காரை ஓட்டி வருகிறார். சி.ஐ. பிலிப் கடந்த 1973ம் ஆண்டு டிரைவிங் லைசென்ஸ் வாங்கினார். அப்போதில் இருந்து பல முறை அவர் டிரைவிங் லைசென்ஸை புதுப்பித்துள்ளார்.

100 Year-Old Grandpa Driving Premier Padmini

இடைப்பட்ட வருடங்களில் எத்தனையோ புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், பிரீமியர் பத்மினி தவிர வேறு எந்த காரையும் சி.ஐ. பிலிப் ஓட்டியதில்லை என்பது சற்று ஆச்சரியமான விஷயம். சி.ஐ. பிலிப் தினமும் காலை சுமார் 7 மணியளவில் எழுவதை வழக்கமாக வைத்துள்ளார். காலை உணவை முடித்த பிறகு, பிரீமியர் பத்மினி காரில் அவர் ஒரு ரவுண்டு சென்று விடுவார். அதற்கு பிறகுதான் மற்ற வேலைகளை எல்லாம் அவர் செய்வாராம். சர்ச் போன்ற இடங்களுக்கு பிரீமியர் பத்மினி காரில் செல்வதை சி.ஐ. பிலிப் வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் அவர் வேகமாக எல்லாம் செல்வதில்லை. மிதமான வேகத்தில் மட்டுமே காரை ஓட்டுகிறார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 100 வயதில் ஆரோக்கியமாக இருப்பதே ஆச்சரியம். ஆனால் சி.ஐ. பிலிப் இந்த வயதில் கார் ஓட்டுகிறார் என்பது அதை விட ஆச்சரியம். இது போன்ற மனிதர்கள் உண்மையிலேயே நமக்கு உத்வேகம் அளிக்க கூடியவர்களாக உள்ளனர் என்பதில் துளியும் மாற்று கருத்தில்லை.

ஆனால் கேரளாவில் முதியவர்கள் கார் ஓட்டுவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாமணி என்ற 73 வயது மூதாட்டி, பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4) மற்றும் ஜாகுவார் எஃப்-டைப் (Jaguar F-Type) போன்ற கார்களை எல்லாம் ஒட்டி வருவது குறித்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சி.ஐ. பிலிப் தற்போது ஓட்டி வரும் பிரீமியர் பத்மினி கார், ஒரு காலத்தில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு இணையாக பிரபலமாக இருந்து வந்தது. பிரீமியர் பத்மினி காரை மையமாக வைத்து, திரைப்படங்கள் எல்லாம் கூட எடுக்கப்பட்டுள்ளன. சி.ஐ. பிலிப் போல் ஒரு சிலர் இன்றளவும் பிரீமியர் பத்மினி காரை நல்ல கண்டிஷனில் பராமரித்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 17:01 [IST]
English summary
100 year old grandpa driving premier padmini viral video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+