100 ஆண்டுக்கு முன் ஒருத்தரு எழுதுன லெட்டருக்கு இவ்வளவு பவரா? ரயில் டாய்லெட் பற்றி பலருக்கும் தெரியாத கதை இது!
இன்று இந்தியாவில் அனைத்து ரயில்களிலும் கழிவறை வசதி இருக்கிறது.ஆனால் இப்படி ரயில்களில் டாய்லெட் வசதி கொண்டு வருவதற்குப் பின்னால் உள்ள கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் பயணம் என்றால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். நீண்ட தூரப் பயணத்திற்குச் சொகுசான அதே நேரத்தில் குறைவான விலையில் பயணிக்க வேண்டும் என்றால் ரயில் ஒன்று தான் ஒரே வழி. தினமும் இந்தியாவில் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கின்றனர். பஸ்சில் இல்லாத ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றால் அதில் முக்கியமானது டாய்லெட் வசதி தான்.

ஒரு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டி முதல் ஏசி பெட்டி வரை டாய்லெட் வசதி இருக்கும். ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு இயற்கை அழைப்பு வந்தால் இதைத் தாராளமான பயன்படுத்திக்கொள்ளலாம். ரயில்களில் இப்படியாக டாய்லெட் வசதி ஏற்படுத்தியதற்குப் பின்னால் ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. இதைப் பற்றி விரிவான காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது. 1853ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி இந்தியாவில் ரயில் சேவை முதன் முறையாகத் துவங்கப்பட்டது. இந்த சேவை துவங்கப்பட்டு 56 ஆண்டுகள் வரை ரயில் பெட்டிகளில் டாய்லெட் வசதியில்லை. இந்தியாவின் முதல் ரயில் மும்பையிலிருந்து தானேவிற்கு இயக்கப்பட்டது.
இந்த காலகட்டங்களில் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்படும் போது பயணிகள் ரயிலிருந்து கீழே இறங்கி ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மலம், ஜலம் கழித்து வந்தனர். இது பயணிகளுக்கு பெரும் அசௌகரியமாக இருந்தது. குறிப்பாகப் பெண்கள் இதன் காரணமாகவே ரயில் பயணங்களைத் தவித்தனர். ரயிலில் தொடர்ந்து பயணம் செய்பவர்கள் இந்த பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில் 1909ம் ஆண்டு இந்திய ரயில்வே நிர்வாகத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அகில் சந்திரா சென் என்பவர் எழுதியிருந்தார். அவருக்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை வைத்து இந்த கடிதத்தை எழுதியிருந்தார். அவர் ஒரு முறை ரயிலில் பயணிக்கும் போது அவருக்கு வயிற்றுப் பிரச்சனை இருந்தது. இந்நிலையில் ரயில் மேற்கு வங்க மாநிலம் அகமத்பூர் ஸ்டேஷனில் இறங்கி கழிவறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
அந்த நேரம் பார்க்க கார்டு விசில் அடிக்க ரயில் கிளம்பிவிட்டது. ரயில் கிளம்புகிறதே என எண்ணி அவர் கையில் வைத்திருந்த தண்ணீரையும் வேட்டியையும் தூக்கிக்கொண்டு ஓட துவங்கிவிட்டார். இதனால் பேலன்ஸ் இழந்த அவர் கீழே விழுந்ததோடு ரயிலையும் தவறவிட்டுவிட்டார். அதன் பின்னர் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த அவர் ரயில்வே துறைக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினர்.
ஷஹிப்கன்ஜ் டிவிஷனல் அவ்வகலத்திற்கு அந்த கடிதத்தை எழுதினார். அதில் ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதி தான் கழிவறையிலிருந்து வரும் முன்னரே விசில் அடித்த கார்டை கண்டித்தும் ரயிலில் கழிப்பறைகள் இல்லாதது குறித்துக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் அந்த கடிதத்தில் இது முறையற்றது எனவும், கார்டு தான் ஓடி வருவதை பார்த்தும் ரயிலில் நிறுத்தாதது குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
ரயில்வே நிர்வாகத்தினர் இந்த விஷயத்தை முக்கியமான பிரச்சனையாகக் கருதினர். பின்னர் ரயில்களில் டாய்லெட்கள் அமைக்கும் யோசனையைக் கொண்டு வந்தனர். அதன்பின்னர் 1909ம் ஆண்டு முதன் முறையாக 50 மைல்களுக்கு மேல் பயணிக்கும் ரயில்களில் டாய்லெட் வசதி கொண்டு வரப்பட்டது. அன்று முதல் ரயில் பெட்டிகள் வடிவமைக்கும் போதே டாய்லெட் வசதியுடன் கொண்ட ரயில் பெட்டிகளை வடிவமைக்கத் துவங்கிவிட்டனர். இதற்கெல்லாம் காரணமாக இருந்த அந்த கடிதம் இன்றும் பத்திரமாக டில்லி ரயில்வே மியூசியத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் இந்த வசதி எல்லாம் பயணிகளுக்கு 1909ம் ஆண்டே கிடைத்துவிட்டாலும் ரயிலை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை 2016ம் ஆண்டு தான் முதன் முறையாக ரயில் இன்ஜின்களில் டாய்லெட் வசதி கொண்டு வரப்பட்டது அதற்கு முன்னர் வரை ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு பாத்ரூம் வசதி கிடையாது. ஆனால் இன்று இன்ஜின்களிலேயே அந்த வசதி வந்துவிட்டது. இன்று இன்ஜின்களில் லோகோ பைலட்களுக்காக ஏசி பொருத்தப்படும் வசதி கூட வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








