திருடுபோன லம்போர்கினி கார் பற்றி துப்பு கொடுத்தால் 1,00,000 டாலர்கள் ரொக்கப் பரிசு

Written By:

அமெரிக்காவில், திருடு போன லம்போர்கினி அவென்டெடார் கார் பற்றி துப்பு கொடுப்பவருக்கு 1,00,000 டாலர்கள் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லம்போர்கினி அவென்டெடார் கார், உலகின் மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக உள்ளது. இந்த காருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றன. இதனால், இந்த கார்களுக்கு அதிக மவுசும், மதிப்பும் இருக்கின்றன.

இந்தநிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2015 லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் ஒன்று திருடு போயுள்ளது. அதை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2015 லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் காரின் மதிப்பு 4,40,000 அமெரிக்க டாலர்களாகும். இவ்வளவு விலை உயர்ந்த கார் திருடு போனதால், அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்கள் என்ற பரிசு, வழங்கபட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

100000 US Dollars Cash Reward is waiting For those who Recovers 2015 Lamborghini Aventador Roadster Car

Photo credit: http://www.motorauthority.com

லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் காரை கண்டுபிடிக்கும் நோக்கத்தில், இந்த காரின் உரிமையாளர்கள், பிங்கெர்டன் என்ற டிடெக்டிவ் ஏஜென்சியையும் அணுகி, முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த 2015 லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர், க்வீன்ஸ் என்ற பகுதியில் இருந்து திருடபட்டிருக்கலாம் என்றும், இதை திருடியவர்கள், இதனை ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவிற்கு கொண்டு சென்றிக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

அல்லது, இந்த கார் தற்போது கண்டெய்னர்களின் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும், இந்த காரை யார் கண்டுபிடித்து, அந்த 1,00,000 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையை வெல்ல போகின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அனைவரிடமும் வந்துள்ளது.

English summary
100000 US Dollars Cash Reward is waiting For those who Recovers 2015 Lamborghini Aventador Roadster. A 2015 Lamborghini Aventador Roadster car was stolen in New York. This car is worth $440,000. If anyone shares information about its whereabouts, they can get 100000 Dollars as Prize Money.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark