டயர் வெடித்ததால் மற்றொரு பயங்கரம்... 11 பேர் உயிரை பலிவாங்கிய சாலை விபத்து!

By Saravana

தர்மபுரி அருகே டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் டயர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். பெங்களூரிலிருந்து ஊட்டி சுற்றுலா வந்தவர்கள்தான் விபத்தில் சிக்கிய அந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கோடை காலத்தில் கார் வைத்திருப்போர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம்.

இந்தநிலையில், ஆந்திராவில் இதே போன்று டயர் வெடித்ததால், மற்றுமொரு எஸ்யூவி விபத்தில் சிக்கிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்த தகவல்கள், காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே குடும்பம்

ஒரே குடும்பம்

விசாகப்பட்டினம் அருகேயுள்ள பட்சிராஜபுலம் என்ற ஊரிலிரந்து துனி என்ற இடத்திற்கு எஸ்யூவி ஒன்றில் சீனிவாஸ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணித்துள்ளனர்.

 விபத்து

விபத்து

தேசிய நெடுஞ்சாலை எண் 16ல் நக்கப்பள்ளி என்ற இடத்தில், அவர்களது எஸ்யூவி கார் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென அவர்களது கார் டயர் வெடித்தது. இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை தாண்டி எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதோடு, மற்றொரு ட்ரெயிலர் லாரி மீது மோதி அந்த எஸ்யூவி சுக்குநூறாகியது.

11 பேர் பலி

11 பேர் பலி

காரில் சென்ற சீனிவாஸ் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர். அத்துடன், எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த 40வயது மதிக்கத்தக்க ஒருவரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

 காரணம்

காரணம்

முதல்கட்ட விசாரணையில் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், அளவுக்கு அதிகமானோர் பயணித்ததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

டயரில் காற்றழுத்தம்

டயரில் காற்றழுத்தம்

விபத்தில் அந்த எஸ்யூவி கார் உருக்குலைந்தது. மேலும், அதில் பயணித்த சிலரும் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார் 2 மணி நேரம் போராடி இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.

காரணம்

காரணம்

வாகனத்தை ஆய்வு செய்தபோது, டயரில் காற்றழுத்தமும் சரியான அளவில் இல்லையென தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இதுபோன்று டயர் வெடித்து எஸ்யூவி கார்கள் விபத்தில் சிக்குவது வாகன உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 கோடையில் பராமரிப்பு

கோடையில் பராமரிப்பு

கோடையில் சுற்றுலா மற்றும் வெளியூர் பயணங்கள் செல்வோர் டயரில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட அளவு

பரிந்துரைக்கப்பட்ட அளவு

வெளியூர் கிளம்பும்போது காரின் டயர்களில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா என்பதை சோதித்து விடுங்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே காற்றுழுத்ததை வைப்பது அவசியம். சிலர் தாங்களாகவே பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் அல்லது குறைவாக வைப்பதும் இதுபோன்ற விபத்துக்கு வழிகோலும்.

நிதானம்

நிதானம்

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மிக கவனமாகவும், நிதான வேகத்தை கடைபிடிப்பதும் அவசியம். ஒருவேளை, நிதான வேகத்தில் சென்றால் காரை கட்டுப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தோசைக்கல் டயர்

தோசைக்கல் டயர்

டயரின் ட்ரெட் போதிய அளவு இல்லையென்றால், புதிய டயரை மாற்றிவிடுங்கள். தோசைக்கல் டயர் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து உண்டு.

ஓய்வு தேவை

ஓய்வு தேவை

இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காரை 15 நிமிடங்கள் நிறுத்தி ஓய்வு கொடுங்கள். டயரில் உள்ள வெப்பம் குறையும்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
11 Killed In Road Accident In Andhra.
Story first published: Tuesday, April 12, 2016, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X