ரயிலில் ஹாரன் சத்தம் இவ்வளவு வெரைட்டியா இருக்குதா? இவ்வளவு நாளா இதை கவனிக்கலயே!
ரயிலில் ஹாரன் ஒலி என்பது அதிக பவர் கொண்டதாக இருக்கும். நாம் ரயில் இன்ஜின் அருகே இருக்கும் போது டிரைவர் ஹாரன் அடித்தால் நாம் ஒரு நொடி பதறி விடுவோம். அந்த அளவுக்கு சத்தம் அதிகமாக இருக்கும். இப்படியாக ரயில் இன்ஜினில் இருந்து எழுப்பப்படும் ஹாரன் சத்தம் 11 விதமாக இருக்கிறது. ஒவ்வொரு சத்தத்திற்கும் ஒரு ஒரு அர்த்தம் இருக்கிறது. இதைப் பற்றிதான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
ஒருமுறை சிறிய சத்தம்: ரயில் இன்ஜினிலிருந்து ஒருமுறை மட்டும் சிறிய நேர அளவிலான சப்தம் எழுப்பப்படும். அப்படியாக எழுப்பப்பட்டால் ரயில் நேரடியாக சுத்திகரிப்புக்காக செல்ல போகிறது என அர்த்தம். இந்த ரயில் சென்று நிற்கும் இடத்தில் ரயிலை சுத்தம் செய்வார்கள். பின்பு அது அடுத்த டிரிப்புக்கு தயார் செய்யப்படும். இப்படியான நேரத்தில் தான் இந்த ஒரு முறை சத்தம் எழுப்பப்படும். இது ரயில் பயணம் கடைசி ஸ்டேஷனை சென்றடைந்த பின்பு அங்கிருந்து மீண்டும் கிளம்பும்போது எழுப்பப்படும் ஒலியாகும்.

இரண்டு சிறிய சத்தம்: ரயில் இன்ஜினில் உள்ள டிரைவர் இரண்டு முறை சிறிய அளவிலான நேரத்தில் சத்தம் எழுப்பினால் அவர் ரயிலின் பின்னால் உள்ள பெட்டியில் இருக்கும் கார்டிற்க்கு ரயில் புறப்பட போகிறது என சிக்னல் செய்கிறார் என அர்த்தம். இது ரயில் முதன்முறையாக கிளம்பும் ரயில் நிலையத்தில் மட்டுமே நம்மால் கேட்க முடியும். அதுவும் ரயில் கிளம்பும் நேரத்தில் மட்டுமே இது ஒலிக்கப்படும்.
மூன்று சிறிய சத்தம்: இதை அவ்வளவு சுலபமாக நாம் கேட்க முடியாது. இந்த சட்டம் அபாயத்திற்கான அறிகுறியாக இருக்கிறது. அதாவது ரயில் இஞ்சின் பைலட் தனது கண்ட்ரோலில் ரயில் இன்ஜின் இல்லை என்பதை ரயிலின் பின்னால் உள்ள கார்டுக்கு உணர்த்தும் ஒலியாகவும் இந்த ஒலியை கேட்டால் உடனடியாக கார்டு தன்னிடம் உள்ள வேக்கம் பிரேக் லிவரை இழுத்து ரயிலை நிறுத்தம் செய்ய வேண்டும்.

நான்கு சிறிய சத்தம்: இந்த ஹாரன் சுத்தமும் ஒரு விதமான அபாயத்திற்கான அறிகுறி தான். ஆனால் இது ரயிலின் கட்டுப்பாடு பைலட்டிடம் தான் இருக்கும். ஆனால் ரயில் பாதையில் ஏதாவது சிக்கல் இருக்கும். ரயில் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும். ரயில் தண்டவாளத்தில் ஏதாவது பிரச்சினையை கண்டறிந்தால் அதை கார்டிற்க்கு தெரிவிப்பதற்காக ரயிலில் பைலட் நான்கு முறை சிறிய அளவிலான நேரத்தில் ஹாரன் சத்தத்தை எழுப்புவார்.
நீண்ட ஹாரன்: இதை நாம் ரயிலில் செல்லும்போது அடிக்கடி கேட்டிருக்க முடியும் . இந்த நீண்ட ஹாரன் என்பது ஒரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நிற்காமல் தொடர்ந்து பிளாட்பார்மில் வேகமாக கடக்கிறது என்றால் அந்த பிளாட்பார்மை கடக்கும்போது ரயில் முழுமையாக ஹாரன் ஒலியை எழுப்பிக் கொண்டே தான் கடக்க வேண்டும். இதற்கு தான் இந்த நீட்டிக்கப்பட்ட அதிக நேரம் ஒலிக்கும் ஹாரன் பயன்படும்.

ஒரு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன்: ரயிலில் உள்ள இன்ஜின் பைலட் முதன்முறை நீண்டாததாகவும் அடுத்த முறை சிறிய நேர அளவிலான ஹாரனை அடிப்பார். ரயிலின் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் பின்னால் உள்ள காட்டு பைப் சிஸ்டத்தை செட் செய்ய வேண்டும் அவர் அந்த சிஸ்டத்தை செட் செய்வதற்காக இந்த சிக்னல் ஒலி எழுப்பப்படும். இதைக் கேட்டதும் கார்டு பைப் சிஸ்டத்தை செட் செய்வார் அதன் பின்பே இஞ்சினை பைலட்டால் ஸ்டார்ட் செய்ய முடியும்.
இரண்டு நீள மற்றும் இரண்டு சிறிய ஹாரன்: இன்ஜின் பைலட் தன்னிடம் உள்ள ஹாரனை இரண்டு முறை நீளமான நேர அளவிலும் இரு முறை குறுகிய நேர அளவிலும் அடிப்பார். இதற்கு அவர் இன்ஜினின் கண்ட்ரோலை பின்னால் உள்ள கார்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். முன்னால் உள்ள இன்ஜினின் கண்ட்ரோலை பின்னால் உள்ள கார்டு எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இது மிக அரிதாக நடக்கும் சம்பவம் தான்
இரண்டு பாஸ்களுடன் இரண்டு நீண்ட நேர ஹாரன்: இந்த மாதிரியான சத்தம் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது மட்டும் தான் கேட்க முடியும். ரயில் ஒரு ரயில்வே கிராசிங் பகுதியை கடக்க போகிறது என்றால் இப்படியான சட்டத்தை எழுப்புவார்கள். இரண்டு நீண்ட ஹாரன் இருக்கும் அதில் இடையே இரண்டு பாஸ்கள் இருக்கும்.
இரண்டு சிறிய ஹாரன் ஒரு நீண்டகாரன்: இப்படியான சூழ்நிலை இருந்தால் ரயில் ஆபத்தில் இருக்கிறது என அர்த்தம் இரண்டு விதமான சூழ்நிலைகளில் இந்த மாதிரியான ஹாரன் அடிக்கப்படலாம். ஒன்று ரயிலில் உள்ள பயணி யாராவது செயினை பிடித்து இழுத்தால் ரயில் நிற்கும்போது இப்படியான ஹாரன் அடிப்பார்கள்.
இதன் மூலம் ரயிலில் உள்ள டிடிஆர் உள்ளிட்ட ரயில்வே பணியாளர்கள் ரயில் நிற்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியும். அல்லது ரயிலில் பின்னால் உள்ள கார்டு வேக்கம் பிரேக்கை இழுத்து ரயிலே நிப்பாட்டினால் இப்படியான ஹாரனை அடிப்பார்கள்.
ஆறு முறை சிறிய ஹாரன்: ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது ஆறு முறை சிறிய ஹாரன் அடித்தால் ரயில் ஆபத்தில் இருக்கிறது என அர்த்தம். இரயில் ஏதோ ஒரு விதமாக ஆபத்தில் இருந்தால் இப்படியான காரனை அடிப்பார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ரயிலை யாராவது கடத்திவிட்டாலோ அல்லது ரயிலுக்குள் யாராவது கொள்ளையர்கள் புகுந்து விட்டாலோ அது ரயில் இன்ஜின் பைலட்டிற்கு தெரிய வரும் நிலையில் இப்படியான ஹாரன் களை அடிப்பார்கள்.


Click it and Unblock the Notifications
