11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!

தனது பாட்டியின் உயரை காப்பாற்ற பென்ஸ் காரை ஓட்டி சென்றுள்ள 11 வயது பள்ளி மாணவன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அவர் அப்படி என்ன செய்தார் என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வயதினை எட்டாத வரையில் யாவாராயினும் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்த குறிப்பிடத்தக்க வயது நாட்டிற்கு நாடு வேறுபடக்கூடும்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

ஆனால் எப்படியிருந்தாலும் 11 வயது சிறுவன் காரை இயக்குவதற்கு எந்தவொரு நாட்டு சட்டம் இடம் அளிப்பதில்லை. ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் சம்பவத்திற்கு இத்தகைய சட்டங்களை பார்த்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

பிஜே ப்ரூவர்-லே என பெயர் கொண்ட அந்த சிறுவன் கடந்த வாரத்தில் தான் தனது 12வது வயதை அடைந்திருந்தான். கே-கார்ட் என்ற திறந்தவெளி காரை ஓட்டிய அனுபவம் உள்ளவன். மேலும் சொந்தமாகவும் இத்தகைய திறந்தவெளி கார் ஒன்றை அவன் வைத்துள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

அதில் சுற்றியிருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவரும் பிஜே, அவ்வாறு ஒருமுறை தனது அருகில் உள்ள சொந்தகாரர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த சமயத்தில் அவனுக்கு முன்பாக வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்ற அவனது பாட்டி ஏஞ்சலா ப்ரூவர்-லே ஒரு சாலையோரத்தில் சோர்வாக அமர்ந்து கொண்டிருப்பதை காண்கிறான்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

உடனே அருகில் சென்று பார்த்தவனுக்கு பேரதிர்ச்சியாக, கண்கள் சொருகிய பார்வையுடன் இருந்த அவனது பாட்டியின் இரத்த குளுக்கோஸ் அளவு 40 மி.கி-க்கும் குறைவாக சென்று கொண்டிருந்தது. இதனால் ஏஞ்சலா மிகவும் நடுஞ்கி கொண்டே அமர்ந்து இருந்துள்ளார்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

உடனே என்ன செய்வது என முதலில் குழம்பிய பிஜே, பிறகு தனது கோ-கார்ட் வாகனத்தை வீட்டில் நிறுத்திவிட்டு தனது பாட்டியின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து வந்துள்ளான். இதுகுறித்து ஏஞ்சலா கூறுகையில், நான் வாகன நிறுத்து கம்பத்தின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தேன்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

என்னால் சுத்தமாக எழ முடியவில்லை. பிறகு சிறிது நேரத்தில் எனது வலதுப்பக்கமாக பார்த்தால் எனது பென்ஸ் கார் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. யார் காரை ஓட்டுவது என்று சற்று உற்றுப்பார்த்தால், பிஜே காரை இயக்கி வந்து கொண்டிருந்தான் என கூறினார்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

பி.ஜே.-விடம் ஓட்டுநர் உரிமம் இல்லை, இருப்பினும், கோ-கார்ட் போன்ற வாகனங்களை இயக்கியுள்ளதால் அவனுக்கு கார் ஓட்டத் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவனது தாத்தாவின் கார்களை வீட்டு முற்றத்திற்கு நகர்த்தியுள்ள அனுபவமும் அவனுக்கு உண்டு.

தனது பேரன் காரை இயக்க பின்னால் இருந்தபடி தன்னால் முடிந்த வழிமுறைகளை ஏஞ்சலா கூறியுள்ளார். அதேபோல் அந்த 11 வயது சிறுவனும் சாலை ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த கற்களுக்கு அருகிலும் சில இடங்களில் புற்கள் மீதும் பாதுகாப்பாக காரை ஓட்டி சென்றதாக அவனது பாட்டி தெரிவித்துள்ளார்.

11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!6

அதன்பின் ஒருவழியாக கார் வீட்டை அடைந்தவுடன் பாட்டிக்கு தேவையான சில குளுக்கோஸ் மாத்திரைகளை கொடுத்துள்ளான். இந்த சம்பவம் குறித்து புகைப்படத்துடன் ஏஞ்சலா பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "இந்த குழந்தைக்கு வெறும் 11 வயது மட்டும் தான் ஆகுவதை உங்களிடம் முதலில் கூறி கொள்கிறேன்!!

ஆனால் உண்மையில் அவன் அவனது அம்மாவை விட சிறப்பாகவே காரை ஓட்டுகிறான்" என்று கூறியுள்ளவர், எஸ்யூவி, கேம்ரி, டிரக் அல்லது கமரோ உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு வாகனத்தை எடுத்து வராமல் ஏன் பென்ஸ் காரை எடுத்துவந்தாய் என்று வீட்டிற்கு வந்த பிறகு பிஜே-விடம் ஏஞ்சலா கேட்டுள்ளார்.

அதற்கு அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு, என் கைக்கு அதன் சாவி தான் முதலில் சிக்கியது என கூறியதாக தெரிவித்துள்ள ஏஞ்சலா, உண்மையில் அவன் இல்லை என்றால் நான் இல்லை. நன்றி பி.ஜே !! " எனவும் அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

Image Courtesy: 11Alive

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
11-year-old boy drives car to save grandmother's life, hailed as hero
Story first published: Tuesday, September 8, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X