ஆகாஷ் அம்பானி போகணும் வண்டியை நிப்பாட்டு.. ஷாக்கான மற்றொரு பெரும் பணக்காரர்! 12கோடி ரூபா காருக்கே இந்த நிலமையா

உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ஒருவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் நாட்டில் உச்சப்பட்ச பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஓர் மாநிலத்தின் முதலமைச்சருக்கு வழங்கப்படும் அளவிற்கே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இசட் பிளஸ் பாதுகாப்பே அவர்களுக்கே வழங்கப்படுகின்றது. இதுபோதாதென்று, அவர்களின் கான்வாயில் மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் முதலமைச்சரின் கான்வாயையே மிஞ்சும் அளவிற்கு அந்த கான்வாய் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், முதலமைச்சர்களின் கான்வாயின்போது மற்ற வாகனங்களின் போக்குவரத்து எப்படி நிறுத்தப்படுமோ, அதுபோலவே முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினர்களின் கான்வாயின்போதும் மற்றவர்களின் வாகனங்கள் சாலையில் செல்வது தடுத்து நிறுத்தப்படும்.

அந்தவகையிலேயே சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் கான்வாயின்போது பொதுமக்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அப்போதே ஓர் சுவாரஷ்யமான நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. அந்த வழியாக வந்த மற்றொரு பெரும் பணக்காரரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகாஷ் அம்பானியின் கான்வாய் முழுமையாக சென்று முடியும் வரை அந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

Akash ambani s convoy stops lamborghini revuelto super car

தடுத்து நிறுத்தப்பட்ட அந்த வாகனத்தின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 12 கோடி ஆகும். லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Reveulto) காரே ஆகாஷ் அம்பானியின் கான்வாய்க்காக தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது. எம்ஜி குளோஸ்டர் (MG Gloster) காரில் வந்த காவலர்களே அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனால், சில நிமிடங்கள், அதவாது, கான்வாயில் அணிவகுத்து வந்த அனைத்து வாகனங்களும் சென்று முடியும் வரை லம்போர்கினி ரெவல்டோ சூப்பர் கார் காத்திருந்தது. மேலும், அவை அனைத்தும் கடந்த பின்னரே அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. 'ஆகாஷ் அம்பானி வந்த வாகனத்தைவிட அதிக விலைக் கொண்ட காரில் வந்தும் அவருக்கு இந்த நிலைமையா'.. என சமூக வலைதளத்தில் பலரும் இந்த வீடியோவைப் பார்த்த பின்னர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பு: வீடியோவில் 6.47இல் இருந்து பார்க்கவும். ஆகாஷ் அம்பானி ஃபெர்ராரி புரோசாங் (Ferrari Purosangue) காரிலேயே வந்தார். அந்த காரின் மதிப்பு ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். அதேவேளையில், இதுபோன்று அதிக விலைக் கொண்ட மற்றும் இதைவிட அதிக விலைமிக்க சொகுசு கார் மாடல்களை அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றார். எண்ணிக்கையில், சொல்ல வேண்டும் என்றால் 200க்கும் அதிகமான கார்கள் இந்த குடும்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றிரண்டு கார் மாடல்களை இந்த கான்வாயில் காண முடிந்தது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga SUV), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) மற்றும் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) உள்ளிட்ட கார் மாடல்களையே கான்வாயில் காண முடிந்தது.

அதேநேரத்தில், இதில் பென்ட்லீ பென்டேகாவில் ஈஷா அம்பானி பயணித்ததாகக் கூறப்படுகின்றது. மற்ற அனைத்து கார்களிலும் அம்பானி குடும்பத்தினரின் பாதுகாவலர்களே பயணித்தனர் என்பது கவனிக்கத்தகுந்தது. அம்பானி குடும்பத்தினர் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக சில தனித்துவமான ஆடம்பர கார்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடி குண்டுகளால் பாதிக்கப்படாத கார்களையும் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு (Mercedes Benz S680 Guard) புல்லட் ப்ரூஃப் கார் மாடல்கூட அவர்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த கார் விஷ வாயு தாக்குதலில் இருந்தும்கூட பயணிகளைப் பாதுகாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று அதிக பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்ட கார்கள் ஐந்துக்கும் அதிகமாக எண்ணிக்கையில் அம்பானி குடும்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றுடனேயே ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணிக்கும்போது மிக நீளமான வரிசையில் பாதுகாப்புக்காக கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 5:00 [IST]
English summary
12 crore rs lamborghini revuelto stopped by aakash ambani s security convoy
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+