போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

12 வயது சிறுமி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டிய நிலையில், போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

குடிபோதையில் கண் மூடித்தனமாக வாகனங்களை இயக்கிய நபர்களால் சாலை விபத்து என்பது போன்ற செய்திகள் தற்போது தினசரி நிகழ்வுகளாகி விட்டன. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பல்வேறு நாடுகளிலும் இந்த பிரச்னை நிலவி வருகிறது.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

இந்த சூழலில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அலமோகோர்டோ நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளார்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

அவருடன் காரில் மேலும் 3 சிறுமிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், வேதனையான மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் 12-13 வயதுக்கு இடைப்பட்டவர்கள்தான்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

தோழிகளான இவர்கள் 4 பேரும் காரில் குடிபோதையில் அதிவேகத்தில் பயணித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சிறுமிகள் பயணித்த காரை அவர்கள் விரட்டி சென்றுள்ளனர்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

போலீசார் சேஸ் செய்வதை அறிந்ததும், காரை ஓட்டிய சிறுமி இன்னும் வேகமாக சென்றுள்ளார். இதனால் அந்த கார் போலீசாரின் 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இறுதியாக வேக வரம்பு தொடர்பான பலகை ஒன்றில் மோதி கார் நின்றது.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

அதுவரை காருக்குள் இருப்பது சிறுமிகள்தான் என்பது போலீசாருக்கு தெரியாது. காரில் இருந்த சிறுமிகள் குடிபோதையில் வெளியே வருவதை கண்டதும் போலீசாரே அதிர்ச்சியடைந்து விட்டனர். காரை ஓட்டிய சிறுமியிடம் விசாரித்ததில் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

தனது தாத்தாவின் காரை அந்த சிறுமி திருடி கொண்டு வந்துள்ளார். பின்னர் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அதிவேகத்தில் பயணித்துள்ளார். அப்போதுதான் அவர் போலீசாரிடம் சிக்கி கொண்டார். இவர்களுக்கு எப்படி மது கிடைத்தது என்பது தெரியவில்லை.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

ஆனால் காரை ஓட்டிய சிறுமியின் குடும்பத்தினர், தங்கள் வீட்டில் மதுவை வைத்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக KRQE செய்தி வெளியிட்டுள்ளது. இதில், சிறுமிகள் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

குடிபோதையில் கார் ஓட்டுவதே விபத்துக்களுக்கு முக்கிய காரணம். எனவே சாலை விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றால் குடிபோதையில் வாகனம் இயக்குவதை உடனே நிறுத்தி விடுங்கள். ஆனால் இது மட்டும் போதுமா? என்றால் நிச்சயம் கிடையாது.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

சாலை விபத்துக்களில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு இன்னும் சில விஷயங்களை செய்ய வேண்டும். இவை விபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன், உங்களின் சௌகரியமான பயணத்திற்கும் உதவி செய்யும்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

நீங்கள் எங்கு செல்வதாக இருந்தாலும், காரில் பிரேக் ஒழுங்காக வேலை செய்கிறதா? என்பதை முதலில் சரி பார்த்து கொள்ளுங்கள். பிரேக் சரியாக வேலை செய்யவில்லை என சிறிய சந்தேகம் எழுந்தால் கூட உடனே சர்வீஸ் சென்டருக்கு விரைந்திடுங்கள்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

அதேபோல் நீங்கள் பயணத்தை தொடங்கும் முன்பாக டிரைவர் இருக்கையை உங்களுக்கு சௌகரியமான வகையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் டிரைவர் இருக்கையில் சௌகரியமாக அமரும் வரை எக்காரணத்தை கொண்டு பயணத்தை தொடங்க வேண்டாம்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

அத்துடன் காரை ஸ்டார்ட் செய்யும் முன்பாக ரியர் வியூ மிரர்களை உங்கள் பார்வைக்கு உகந்த வகையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் விபத்துக்களை தவிர்ப்பதில் ரியர் வியூ மிரர்களின் பங்கு முக்கியமானது. ரியர் வியூ மிரர்களை துடைத்து சுத்தமாக வைத்து கொள்வதும் சிறந்தது.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

அதேபோல் பயணத்தை தொடங்கும் முன்பாக விண்டு ஸ்க்ரீனையும் துடைத்து சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். மற்றொரு முக்கியமான விஷயம் டயர்கள். பயணத்தை தொடங்கும் முன் டயர்களை பரிசோதிப்பதும் அவசியமானது. டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரியுங்கள்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

இதுதவிர அனைத்து கியர்களும் சரியாக இயங்குகின்றனவா? என்பதையும் பரிசோதித்து கொள்ளுங்கள். கியர்கள் மக்கர் செய்கிறது என்றால், சர்வீஸ் செய்ய வேண்டும் என அர்த்தம். மற்றொரு முக்கியமான விஷயம் சீட் பெல்ட்.

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

உங்கள் காரில் சீட் பெல்ட் ரிமைண்டர் இருக்கிறது என்றால் பிரச்னையில்லை. ஒரு வேளை இல்லாவிட்டால், மறக்காமல் சீட் பெல்ட் அணிவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். மேற்கண்ட டிப்ஸ்கள் விபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன், காரின் நீண்ட ஆயுளுக்கும் உதவி செய்யும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2019, 19:00 [IST]
English summary
12 Year Old Kid Stole Car, Police Chases Down. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+