12,000 குதிரைசக்தி திறன் வாய்ந்த இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின்!!

Written By:

இந்தியாவின் சக்திவாய்ந்த மின்சார ரயில் எஞ்சினின் முதல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் இணைந்து WAG-12 என்ற இந்த புதிய ரயில் எஞ்சினை இந்திய ரயில்வே துறை உற்பத்தி செய்கின்றது. பீகார் மாநிலம் மாதேப்புராவில் உள்ள தொழிற்சாலையில் இந்த ரயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

இந்த மின்சார ரயில் எஞ்சின் 12,000 குதிரை சக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. WAG-12 மின்சார ரயில் எஞ்சின். தற்போது நம் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சினாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

முதல்கட்டமாக 5 ரயில் எஞ்சின்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பீகாரில் உள்ள மாதேப்புரா ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. பின்னர், 795 ரயில் எஞ்சின்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

பீகார் மாநிலம் மாதேப்புராவில் இந்த ரயில் எஞ்சினுக்கான உற்பத்தி ஆலையும், உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரிலும், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலும் பராமரிப்பு பணிமனைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

இந்த ரயில் எஞ்சின்களில் ஏபிபி டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் நார்-பிரேம்ஸி பிரேக்கிங் சிஸ்டமும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த மின்சார ரயில் எஎஞ்சின் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

சரக்கு ரயில்களில் இணைக்கப்பட இருக்கும் இதன்மூலமாக, சரக்கு ரயில்களின் வேகம் வெகுவாக அதிகரிக்கும். ஒரு ரயில் எஞ்சின் ரூ.30 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் முதல் தரிசனம்!

வரும் 2020ம் ஆண்டில் 35 எஞ்சின்களும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 100 எஞ்சின்கள் வீதம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மொத்தம் 800 எஞ்சின்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதல் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காக ஆலையிலிருந்து சோதனை ஓட்டத்திற்காக வெளியே சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Eastern Railway Testing 12000 HP Electric Locomotive.
Story first published: Thursday, March 1, 2018, 17:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark