ரூ. 62,000 வரை சில்லறை காசுகளாக சேமித்து சகோதரிக்கு ஹோண்டா ஸ்கூட்டர் வாங்கி தந்த அன்பு தம்பி..!!

Written By:

சிறியவர்களாக இருந்தபோது நம்மில் பலர் எண்ணிக்கையில் அடங்கா சில்லரை காசுகளை சேர்த்து வைத்து நமது சொந்த தேவைகளுக்கும், ஆசைக்கும் ஏற்றவாறு செலவழித்திருப்போம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

பெரும்பாலும் பெண் குழந்தைகள் உடை, பொம்மை மற்றும் ஆண் பிள்ளைகள் என்றால் கிரிக்கெட் மட்டை, பந்து போன்றவற்றை வாங்க அந்த சில்லரை காசுகளை பயன்படுத்தி இருப்போம்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

ராஜஸ்தான் ஜெய்பூரில் 13 வயது சிறுவன் யாஷ் தன்னோட சில்லறை காசு சேமிப்புகளைக் கொண்டு தனது சகோதரிக்கு புதிய ஸ்கூட்டர் வாங்கி பரிசளித்துள்ளான்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

சேமிக்கும் பணத்தை அதை சேமித்தவர் தான் பயன்படுத்துவார். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் 13 வயதில் தனது சகோதரிக்காக இந்த சிறுவன் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Recommended Video
[Tamil] 2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India - DriveSpark
சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

கடந்த தீபாவளி அன்று இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கையில் கனமான பையுடன் தனது சகோதரியை கூட்டுக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் ஷோரூம் படியேறினான் சிறுவன் யாஷ்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

ஷோரூம் வேலையாட்கள் சிறுவனிடம் அணுக, அதற்கு அவன் சகோதரிக்காக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

இதை சற்று சிரிப்புடன் பார்த்த ஊழியர்கள், இருவரும் ஸ்கூட்டர் வாங்குவதில் தீவிரம் காட்டுவதை பின்பு உணர்ந்துக்கொண்டனர்.

Trending On Drivespark:

108 போக்குவரத்து விதிமீறல்கள் செய்த பைக் ரைடருக்கு ரூ.10,800 அபராதம்; தீவிரமாகும் 'ஆப்ரேஷன் சீட்டா'

2018 ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் வெளியீடு

ரூ. 98,340 விலையில் சுசுகியின் புதிய சுசுகி இன்ட்ரூடர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

புதிய ஸ்கூட்டரை தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணம் சில்லறைகளாக செலுத்தப்படும் என கையில் இருந்த பையை திறந்துக்காட்டினான்.

Trending On Drivespark:

2018 ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் வெளியீடு

எக்ஸ்க்ளூசிவ்: ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

மிக மிக சவாலான விலையில் புதிய ரெனோ கேப்டூர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

மொத்த ரூ. 62,000. அனைத்தும் ரூ.10 சில்லறை நாணயங்களாக அந்த பையில் இருந்தன. இதைப்பார்த்து ஊழியர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தே போயினர்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

பிறகு சிறுவனது சகோதரி, ஸ்கூட்டரை தேர்வு செய்தார். அதற்கான முழு பணத்தையும் சில்லறை காசுகளாக ஷோரூம் நிர்வாகம் பெற்றுக்கொண்டது.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

இதுப்பற்றி பேசிய ஷோரூம் டீலர் சந்தோஷ் குமார், பல வாடிக்கையாளர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் சில்லறைகள் காசுகள் கொண்டு ஸ்கூட்டருக்கு கட்டணம் செலுத்துவது இதுதான் முதல்முறை என்று கூறினார்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

இந்த சம்பவம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த சிறுவன், எப்போது காசு கிடைத்தாலும் அதை சேமித்துவிடுவேன். பணம் நோட்டாக கிடைத்தாலும் அதை சில்லறைகளாக மாற்றிவிடுவேன்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

என்னோடு சேர்ந்து எனது சகோதரியும் இந்த சேமிப்பிற்காக உதவினார். நாங்கள் இரண்டு பேரும் அதிகப்பட்சமா ரூ. 1500 வரை கூட சேமித்துள்ளோம் என்று கூறியுள்ளான் சிறுவன் யாஷ்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக சிறுவன் யாஷிற்கு பல வலைதள வாசிகள் தங்களது பாராட்டுதலை அதிகளவில் தெரிவித்து வருகின்றனர்.

சில்லறை காசில் ஸ்கூட்டர் வாங்கி அக்காவிற்கு பரிசளித்த தம்பி

இந்த செய்தியை படிக்கும் சிலர், பணமதிப்பிழப்பிற்கு பிறகு பலர் சில்லறை காசுகளை சேமிப்பதை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது என்பன போன்ற கமெண்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் படத் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: 13 Year Old Boy Buys New Honda Scooter With Coins Worth Rs 62000 to his Sister. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos