சோலார் பைக்கை உருவாக்கி 13வயது பள்ளி மாணவர் சாதனை!

முற்றிலும் சூரியசக்தியால் இயங்கும் பைக்கை உருவாக்கி 13 வயது பள்ளி மாணவர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

மரபுசாரா எரிசக்தி துறையில் முழுமையான முன்னேற்றம் அடையாத சூழ்நிலையே தற்போது உலகில் நிலவி வருகிறது. மரபுசாரா எரிசக்தி பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு செலவீனம் என்பது நடப்பு எரிசக்தி ஆதாரங்களைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதால் இத்துறை போதிய வளர்ச்சியை எட்டாமல் உள்ளது.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

எதிர்கால மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியசக்தி பெரும்பங்கை வகிக்கப்போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மின்சாரம் மட்டுமல்லாது ஆட்டோமொபைல் துறையிலும் சூரியசக்தி ஆற்றல் முக்கிய பங்கை வகிக்கப்போகிறது.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

தற்போது தான் சூரியசக்தியை நோக்கி ஆட்டோமொபைல் துறை மெல்ல நகர்ந்து வருகிறது. ஆயினும் சூரியசக்தியால் இயங்கும் வாகனங்களை வாங்கக்கூடிய விலையில் உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட முழுமையான அளவில் வெற்றிபெறவில்லை, இன்னமும் அதற்கான முயற்சி கடினமாக மேற்கொள்ளப்பட்டே வருகிறது.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

நிலைமை இப்படியிருக்க ஹரியானாவைச் சேர்ந்த 13 வயதே ஆன அவ்னீத் குமார் என்ற பள்ளி மாணவர் ஒருவர் முற்றிலும் சூரியசக்தியால் இயங்கும் பைக் ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

ஹரியானாவில் உள்ள ரேவரி என்ற நகரத்தைச் சேர்ந்த மாணவன் அவ்நீத் குமார் உருவாக்கியுள்ள பைக் முற்றிலும் சூரியசக்தி ஆற்றலிலேயே இயங்குகிறது. சோலார் பேனல் ஒன்று இந்த பைக்கின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே பைக் இயக்கத்துக்கான ஆற்றலைத் அளிக்கிறது.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

பைக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ள இளம் விஞ்ஞானி அவ்நீத் இது குறித்து கூறுகையில், பைக்கை அடுத்து முற்றிலும் சூரியசக்தியால் இயங்கும் கார் ஒன்றினை உருவாக்குவதே அடுத்த இலக்கு என கூறினார்.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

இந்தியாவின் மலிவு விலை கார் என கூறப்படும் டாடா நேனோவைக் காட்டிலும் விலை குறைவாக இருக்கும் வகையில் சோலார் காரை உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

மாணவர் அவ்நீத் உருவாக்கியுள்ள இந்த சோலார் பைக் புகை மாசை ஏற்படுத்தாத விலை குறைவான பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பெரிய அளவில் தொழிற்சாலைகளில் வைத்து தயாரிக்கப்படும் போது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோலார் பைக்கை உருவாக்கிய 13வயது பள்ளி மாணவர்!

மாணவர் அவ்நீத்தின் வயதில் இருக்கக்கூடிய பெரும்பாலனவர்கள் பைக் ஓட்டக்கூட கற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள், விளையாட்டுப் பருவமான இந்த 13 வயதில் இச்சிறுவன் நிகழ்த்தியிருப்பது நிச்சயம் மகத்தான ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 1, 2017, 11:14 [IST]
English summary
13-year old boy from Haryana has built a bike running on solar energy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+