135 சீட்டர், ஃபுல் ஏசி, விமானம் போல தயாராகும் எலெக்ட்ரிக் பஸ்! டிக்கெட் விலையும் கம்மி!
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி இந்தியாவல் ஒரே நேரத்தில் 135 பேர் பயணிக்ககூடிய விமானம் போன்ற வசதி கொண்ட எலெக்ட்ரிக் பஸ்ஸை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பொது போக்குவரத்து என்பது தற்போது அதிகரித்து வருகிறது. மக்கள் பலர் குறைவான விலையில் பயணம் செய்ய விரும்புகின்றனர். உள்ளூர் பயணத்திற்கு பஸ்கள் சிறந்த ஆப்ஷனாக இருந்தாலும் பஸ்களில் அதிக பயணிகள் பயணிக்க முடிவதில்லை குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் பஸ்ஸில் ஏறினால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு அதிக பயணிகள் பயணிக்ககூடிய அதே நேரத்தில் அதிக வசதிகளை கொண்ட பஸ்ஸை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய அரசு டாடா நிறுவனத்துடன் சேர்ந்து நவீன அம்சங்களுடன் தற்போது உள்ள பஸ்களை விட 30 சதவீதம் குறைவாக டீசல் செலவாகும் வகையில் அதே நேரம் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்ஸை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள பஸ் பயணங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் தற்போது சாலை வசதி நன்றாக இருப்பதாகவும் போனால் போக்குவரத்து சிஸ்டம் அதற்கு ஏற்றார் போல் இல்லை எனவும் இதை சரி செய்தால் மக்கள் பிரச்சனை குறையும் எனவும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசியுள்ளார்.

மத்திய அரசும் டாடா நிறுவனமும் சேர்ந்து உருவாக்கும் இந்த பஸ்ஸில் 135 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். இந்த பஸ் ஏசி வசதியுடன் வடிவமைக்கப்படுகிறது. இந்த பஸஅறாில் சொகுசான பயணத்திற்கு ஏற்றார் போல எக்ஸிக்யூட்டிவ் சேர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் டிவி வசதி, பயணிகள் தங்கள் லேப்டாப்பை வைக்க வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் எலெக்ட்ரிக் பஸ்களாக உருவாககப்படுகிறது.
இந்த பஸ்கள் ஃபிளாஷ் சார்ஜிங் முறையில் மிக விரைவாக சார்ஜ் ஏறும் திறன் கொண்டதாக இருகு்கிறது. இந்த பஸ்ஸில் விமானத்தில் இருப்பது போல பழங்கள், உணவுகள், குளிர்பானங்களை விற்பனை செய்ய பணியாளர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ளதை போல இந்த பஸ்ஸில் வசதிகளை பயணிகளால் பெற முடியும்.
டாடா நிறுவனம் கர்நாடக மாநிலம் தார்வாத் பகுதியில் உள்ள தனது ஆலையில் இந்த பஸ்ஸை கட்டுமானம் செய்யும் பணியைதுவங்கிவிட்டது. இந்த பஸ்ஸில் சைமென்ஸ், மற்றும் ஹிட்டாச்சி நிறுவனங்களின் தொழிற்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பஸ் பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் காரை விட்டுவிட்டு இந்த பஸ்ஸில் பயணிக்க விரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸை இயக்குவதற்கு ஒரு கி.மீக்கு ரூ35-40 வரை அரசு செலவு செய்ய வேண்டியது வரும். இந்த பஸ் முழு சார்ஜில் 40 கி.மீ தான் பயணிக்கும். ஆனால் ஒவ்வொரு 40 கி.மீ க்கும் ஒரு ஃபிளாஷ் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும். இங்கு 40 நொடிகள் சார்ஜ் போட்டாலே அடுத்து 40 கி.மீ பயணிக்கும் அளவிற்கு இந்த பஸ்ஸில் சார்ஜ் ஏறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் பஸ்கள் சார்ஜ் ஏறும் போது வெடிக்கும் அபாயம் இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். இதை மத்திய அரசு விளக்க வேண்டும். இந்த பஸ் மக்களுக்கு தேவையாக இருந்தாலும் இதன் பாதுகாப்பு விஷயம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது இந்த பயன்பாட்டிற்கு வரும் முன்னர் இது குறித்த போதிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








