எதிர்கால போக்குவரத்து முறையின் தொடக்கம்: இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

Written By:

இந்தியாவிலேயே முதல்முறையாக போக்குவரத்து காவல்துறையினருக்கு பதிலாக சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்காக ரோபோட் ஒன்றை பணியமர்த்தியுள்ளனர் இந்தூர் காவல்துறையினர்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

மத்திர பிரதேச மாநிலம் இந்தூர், வாகன நெரிசல் மிக்க நகரங்களின் பட்டியலில் இந்தியாவிலேயே முக்கியமான நகரங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்தூர் நகரின் பர்ஃபானி தாம் பகுதியில் உள்ள எம்ஆர்-9 சுற்றுச்சாலையின் சாலை சந்திப்பு ஒன்றில் 14 அடி உயரமுள்ள ஒரு ரோபோ போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

5 அடி உயர பீடத்தின் மீது மனிதன் போன்ற உருவத் தோற்றத்தில் 14 அடி உயரம் கொண்ட இந்த ‘ரோபோகாப்'-ன் கைகளில் டிராஃபிக் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வயிற்றுப்பகுதியில் டைமரும் உள்ளது.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

இந்தியாவிலேயே முதல் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த ரோபோவை கண்ட வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ரோபோவின் விஷேச அம்சங்கள்

ரோபோவின் விஷேச அம்சங்கள்

  • இந்த ரோபோவால் தன்னைத்தானே சுழற்றிக்கொள்ள முடியும்.
  • சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இதன் கைகளை திருப்பவும் முடியும்.
  • பொதுமக்களுடன் பேசும் வகையில் பப்ளிக் அட்ரசிங் சிஸ்டம் இதில் நிறுவப்பட்டுள்ளது.
  • இதில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

வை-பையில் கனெக்ட் செய்தால் காவல் உதவி மையத்துடன் இணைப்பு பெற்று, இதில் உள்ள கேமரா மூலம், விதிமீறலில் ஈடுபடுவோரை புகைப்படமாக எடுத்து அதனை கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்ப முடியும். விதிமீறலுக்கான ரசீதையும் இதனால் அளிக்க முடியும்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

இந்த டிராஃபிக் போலீஸ் ரோபோ குறித்து இந்தூர் டிஐஜி ஹரிநாராயணன் சாரி கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக போக்குவரத்தை செம்மைப்படுத்தும் பணியில் காவலர்களுக்கு பதிலாக ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றியடையும்பட்சத்தில் இதே போன்ற ரோபோக்களை நகரின் வேறு முக்கிய சாலை சந்திப்புகளிலும் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

இந்தூர் போக்குவரத்து காவல் பிரிவின் டிஎஸ்பி பிரதீப் சவுகான் கூறுகையில், "காவலர்களுக்கு பதிலாக ரோபோ பயன்படுத்துவது உளவியல் ரீதியாக பலன் தருகிறது, மற்ற சிக்னல்களைக் காட்டிலும் விதிமீறலில் ஈடுபடாமல் மக்கள் ரோபோவிற்கு மதிப்பு தர முயல்கின்றனர், இரண்டு காவலர்கள் செய்யவேண்டிய பணியை ரோபோ செய்வதால் ஆள் பற்றாக்குறை பிரச்சனையும் சரிசெய்யப்படுகிறது" என்றார்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

இந்தூரில் உள்ள வெங்டேஷ்வர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வெங்டேஷ்வர் கல்லூரியின் ரோபோடிக்ஸ் பிரிவு மாணவர்கள் இந்த ரோபோ தயாரிக்கும் பணியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

காவல்துறைக்காக இந்த ரோபோ தயாரிக்கப்படுகிறது என்ற ரகசியம், இதனை தயாரித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு தெரியாமலே இருந்துள்ளது. ஒவ்வொரு பிரிவாக தயாரித்து ரோபோ அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது சுவாரஸ்யமான தகவலாக இருந்தது.

இக்கல்லூரியின் ரோபோடிக்ஸ் பிரிவு பேராசியர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த ரோபோகாப்-பை 20 லட்ச ரூபாய் செலவில் தயாரித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

எனினும் இதே போன்று அடுத்த ரோபோவை ரூ.12 லட்சம் என்ற விலையில் தயாரித்து விடலாம் என்று இத்திட்டத்தை தலைமையேற்று நடத்திய விஷ்னு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் டிராஃபிக் போலீஸ் ரோபோ..!!

சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்களின் பணியை ரோபோ செய்யத்தொடங்கியிருப்பது, எதிர்கால நவீன கால போக்குவரத்து முறையின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

விரைவில் நாடு முழுவதும் இதே போன்ற ரோபோக்களை சாலைகளில் போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் காணலாம் என்ற நிலையில், பொதுமக்களும் இதற்கு கீழ்படிந்து பொறுப்புணர்வுடன் சாலை விதிகளை மதித்து நடக்கும் பட்சத்தில் சீரான ஒரு போக்குவரத்து நெறி மிகுந்த சமுதாயம் உருவாகும் நாள் தொலைவில் இல்லை.

இது தொடர்பான கருத்துக்களை நேயர்கள் பதிவிடலாம்.

English summary
Read in Tamil about india's first traffic robot.
Story first published: Thursday, June 22, 2017, 17:02 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos