நிலவுக்கு ராக்கெட் விடும் இதே நாட்டில் தான் இதுவும் நடக்குது!! தந்தைக்காக 14 வயது பெண் செய்த செயல்!

ஒடிசாவில் காயமடைந்த தந்தையை மிதிவண்டியில் 50கிமீ தொலைவிற்கு அழைத்து செல்லும் இளம்பெண் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளார். இளம்பெண்ணின் இந்த செயலை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

50கிமீ தொலைவிற்கு பைக்கில் செல்லவே நம்மில் சிலர் யோசிப்போம். அப்படியிருக்க, 3-சக்கர சைக்கிளில், அதுவும் ஒருவரை ஏற்றிக் கொண்டு செல்வது என்பது கடினமான காரியம். ஆனால், ஓர் இளம்பெண் தனது தந்தைக்காக இந்த செயலை இருமுறை செய்துள்ளார். ஆனால், இதற்கு நாம் தலைக்குணிய தான் வேண்டும்.

girl pedalled 50hm on rickshaw

ஒடிசா மாநிலம், பாட்ரக் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு சுஜாதா சேதி என்ற இளம்பெண் தனது காயமடைந்த தந்தை சாம்புனாதாவை 3-சக்கர ரிக்‌ஷாவில் கிட்டத்தட்ட 50கிமீ தொலைவிற்கு அழைத்துவந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். நடிகான் கிரமத்தை சேர்ந்தவரான சுஜாதா சேதி தனது தந்தையை சிகிச்சைக்காக முதலில் அழைத்து சென்றது என்னவோ வேறு மருத்துவமனைக்கு தான்.

உள்ளூர் கலவரத்தில் காயமடைந்த தனது தந்தையை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி, நடிகான் கிராமத்தில் இருந்து 14கிமீ தொலைவில் தாம்நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சுஜாதா சேதி இந்த சைக்கிளில் அழைத்து சென்றார். ஆனால், அங்கு மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையில் பாட்ரிக் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து செல்ல வேண்டியதாகி போனது. தாம்நகர் மருத்துவமனையில் இருந்து, பாட்ரிக் மருத்துவமனை சுமார் 35கிமீ தொலைவில் உள்ளது.

girl pedalled 50hm on rickshaw

இந்த போக்குவரத்திற்காக ஆவது ஆம்புலன்ஸ் கிடைத்ததா என பார்த்தால், இல்லை. இதனால், வேறு வழியின்றி அடுத்த நாளே மீண்டும் தந்தையை வைத்து 3-சக்கர சைக்கிளில் மிதிக்க தயாராகினார் சுஜாதா சேதி. பாட்ரிக் மருத்துவமனையிலும் ஒரு வாரம் கழித்து வருமாறு கூறிவிட்டதாக சுஜாதா சேதி கூறியிருக்கிறார். வாகனத்தை வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு பணம் இல்லாததால் மீண்டும் வீட்டிற்கும் தனது தந்தையை சைக்கிளில் அழைத்து செல்ல முயன்றதாக பரிதாபமாக கூறுகிறார் சுஜாதா சேதி.

ஆனால், அதற்குள்ளாக இவரது இந்த அவலநிலை ஒடிசாவில் உள்ள சில ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து, இந்த விஷயம் அந்த பகுதி முழுவதும் பரவியது. மருத்துவமனையில் இருந்து 2 கிமீ தொலைவில் சுஜாதா தேவி சென்ற கொண்டிருந்த போது, சில ஊடகவியலாளர்கள் அவரது அவலநிலையை சாலையில் கண்டு விசாரிக்க துவங்கியுள்ளனர்.

girl pedalled 50hm on rickshaw

இதுகுறித்து, பாட்ரிக் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி சாந்தனு பாட்ராவிடம் ஊடகவியலாளர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு அவர், மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவமனை கொண்டிருக்கவில்லை என பதிலளித்து உள்ளார். இந்த விஷயம் பூதகரமாகி விட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஷயம் பூதகரமாகியதை அடுத்து இளம்பெண்ணும், அவரது தந்தையையும் ஆம்புலன்ஸில் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், தவறு நடந்த பின் சரி செய்வதை விட நடப்பதற்கு முன்பே சரி செய்வது நல்லது. வீட்டிற்கும் மீண்டும் சைக்கிளை 35கிமீ தொலைவிற்கு மிதித்து இருந்தால், மொத்தமாக 80கிமீ தொலைவிற்கு இந்த பெண் 2 நாட்களில் சைக்கிளை மிதித்து இருப்பார். நிலவிற்கு ராக்கெட் விடுவது எல்லாம் அர்த்தமற்றதாகி விடும்.

Article Published On: Friday, October 27, 2023, 16:08 [IST]
English summary
14 year old girl pedalled 50 km on cycle rickshaw here all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X