ஒரு ரூபாய் 2 ரூபாய் கிடையாது, சொலையா ரூ2000 கோடிக்கு மேல லாபம்! இது வேற வெலவல் ஐடியாபா!
இந்தியாவில் டீசல் இன்ஜின் ரயில் எரிபொருளில் 15 சதவீதம் மெத்தனாலை கலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ஆண்டுக்கு 2280 கோடி மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள ரயில்வே போக்குவரத்து துறையை கட்டமைத்து அதற்குரிய தொழில்நுட்ப வசதிகளை வழங்குவது ஆர்டிஎஸ்ஓ எனப்படும் அமைப்புதான். ரயில்வேக்கு உள்ள உள்ள இந்த அமைப்பு இந்திய ரயில்வே சந்திக்கும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு கண்டுபிடிப்பது தான் பணியாக செய்து வருகிறது.

இந்தியாவில் தற்போது டீசல் இன்ஜின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இதனால் பெட்ரோல் உடன் எத்தனாலை கலக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது. விரைவில் இந்தியாவில் இ -20 எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆர்டிஎஸ்ஓ அமைப்பு இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும். ரயில்வே இன்ஜினில் இப்படியான டீசல் தேவையை குறைக்க என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் நடத்திய ஆய்வில் இந்திய டீசல் இன்ஜின் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் டீசல்களில் 15 சதவீதம் மெத்தனாலை கலக்கலாம் என முடிவு செய்தனர்.

அதற்கான அதிகாரிகள் தரப்பில் ஆய்வுகளும் நடத்தப்பட்டது. அதன்படி தற்போது ஆர்டிஎஸ்ஓ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்தியாவில் உள்ள டீசல் இன்ஜின் ரயில்களில் பயன்படுத்தப்படும் டீசல்களில் 15 சதவீதம் மெத்தனாலை கலப்படம் செய்ய தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளனர்.
இதனால் இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூபாய் 2250 கோடி மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 1.6 பில்லியன் லிட்டர் டீசல் ரயில்வே இன்ஜினிற்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் 15,200 கோடி ரூபாய் இந்திய ரயில்வே செலவிடப்படுகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள டீசல் இன்ஜின் எம்டி 15 ரக டீசலில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
தற்போது இந்த இன்ஜினிற்குள் பயன்படுத்தப்படும் டீசல் என்பது 71% டீசல் 15 சதவீதம் மெத்தனால் மற்றும் 14 சதவீதம் அடிட்டிவ் எனப்படும் இந்திய ஆயில் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தயாரிப்பு இதில் கலக்கப்படுகிறது. இப்படியான கலவை கொண்ட எரிபொருளை 4500 எச்பி டீசல் இன்ஜின் மூலம் ஆர்டிஎஸ்ஓ பரிசோதனை செய்தது.
இந்த பரிசோதனையில் மெத்தனால் கலக்காத டீசல் இன்ஜின் இயங்கினால் எவ்வளவு பவரை இன்ஜின் வெளிப்படுத்துகிறது? மெத்தனால் கலந்த பிறகு எவ்வளவு பவர் இன்ஜின் வெளிப்படுத்துகிறது? என சோதனை செய்யப்பட்டதில் இரண்டு பவரிலும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதே நேரம் மெத்தனால் கலந்த டீசலை பயன்படுத்தும் போது சிலிண்டரின் உள்ள வெப்பத்தின் அளவு வெறும் டீசலை பயன்படுத்தும் போது உள்ள அளவைவிட குறைவாக இருப்பது தெரிய வந்து மெத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தினால் அது இன்ஜினின் உதிரி பாகங்களுக்கு பாதுகாப்பாகவும் நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மாசுவும் குறையும் எனவும் தெரிகிறது.
எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்துவதால் இன்ஜினிலிருந்து வெளியேறும் புகை என்பது கருப்பாக இல்லாமல் கண்ணாடி போன்ற நிறத்தில் வெளியாகிறது. இதில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தன்மை மிகவும் குறைவு தான். வெறும் டீசலை மட்டும் பயன்படுத்தினால் இவ்வளவு சுத்தமான மாசு வெளியேறாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆக மொத்தம் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தாமல் அதே நேரம் செலவையும் குறைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ஆண்டிற்கு ரூபாய் 2200 கோடிக்கும் அதிகமான பணம் நிச்சயம் ஆவதால் இதை வேறு வழியில் பயணிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்காக செலவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதில் சில குறிப்பிட்ட பகுதிகளில் டீசல் இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல இந்தப் பகுதிகள் எல்லாம் மின்மயமாக்கப்பட்ட பகுதிகளாக மாறிவரும் நிலையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் இன்ஜினை வைத்து பல கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியதே!


Click it and Unblock the Notifications








