தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் சத்தமே இல்லாமல் தற்போது கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 46 டோல்கேட்கள் இயங்கி கொண்டுள்ளன. இதில், 22 சுங்க சாவடிகளில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மேலும் 15 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

இந்த 15 டோல்கேட்களிலும் 3 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஞாயிற்று கிழமை (செப்டம்பர் 1) முதலே அமலுக்கும் வந்து விட்டது. தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள 15 டோல்கேட்களின் பட்டியலை பின்வரும் ஸ்லைடர்கள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

1. நல்லூர் (சென்னை-தடா சாலை)

2. பாளையம் (கிருஷ்ணகிரி-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை)

3. வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்)

4. எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி)

5. கொடை ரோடு (திண்டுக்கல் பைபாஸ்-சமயநல்லூர்)

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

6. மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை)

7. மணவாசி (திருச்சி-கரூர்)

8. விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை)

9.பொன்னம்பலபட்டி (திருச்சி-திண்டுக்கல்)

10. நத்தக்கரை (சேலம்-உளுந்தூர்பேட்டை)

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

11. புதூர்பாண்டியபுரம் (மதூரை-தூத்துக்குடி)

12. திருமாந்துரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்)

13.வாழவந்தான்கோட்டை (தஞ்சாவூர்-திருச்சி)

14. வீரச்சோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை)

15. விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கப்பள்ளி)

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

இவை அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் பராமரிக்கப்படுபவை (National Highways Authority of India - NHAI) ஆகும். இந்த 15 டோல்கேட்களையும் நீங்கள் கடக்க வேண்டுமென்றால், இனி 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

52 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க வேண்டுமென்றால், கார், ஜீப் மற்றும் இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கு முன்பு ஒரு டிரிப்பிற்கு 55 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இலகு ரக கமர்ஷியல் வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவற்றுக்கு முன்பு ஒரு டிரிப்பிற்கு 90 ரூபாய்தான் கட்டணமாக இருந்தது.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

இது தற்போது 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் பஸ் மற்றும் லாரி ஆகிய வாகனங்களுக்கான கட்டணம் 190 ரூபாயில் இருந்து 195 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்று-ஆக்ஸில் கமர்ஷியல் வாகனங்களுக்கு முன்பு 205 ரூபாய் மட்டுமே கட்டணமாக இருந்தது. இது தற்போது 215 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டோல்கேட் கட்டணங்கள் உயர்ந்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழி வகுத்து விடும் என்பதால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு முன் அறிவிப்பு எதுவும் செய்யப்படாமல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...

எனவே இந்த கட்டண உயர்விற்கு மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இது நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2019, 17:02 [IST]
English summary
User Fee Increased At 15 Toll Gates In Tamil Nadu. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+