Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியா முழுக்க போகணும்... சைக்கிளை அட்டகாசமாக மாடிஃபிகேஷன் செய்த சிறுவன்... எப்படினு தெரிஞ்சா அசந்திருவீங்க
15 வயது சிறுவன் ஒருவர் தனது சைக்கிளை அட்டகாசமாக மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை மாடிஃபிகேஷன் செய்திருப்பது தொடர்பாக கடந்த காலங்களில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பல்வேறு செய்திகளை வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானவை. இதில், சில மாடிஃபிகேஷன்களுக்கு வாகனங்களுக்கு முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கும்.

அதே சமயம் இன்னும் சில மாடிஃபிகேஷன்கள் சௌகரியமான பயணத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்த வகையில் தனது சைக்கிளை தனித்துவமான வகையில் மாடிஃபிகேஷன் செய்த 15 வயது சிறுவனின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அப்படி அவர் என்ன மாடிஃபிகேஷனை அவர் செய்துள்ளார் என கேட்கிறீர்களா? அதைதான் இந்த செய்தியில் கூற போகிறோம்.

Madhurification Hangout என்ற பேஸ்புக் குழுவில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ''இன்று சாலையில் வித்தியாசமான ஒரு விஷயத்தை பார்த்தேன்'' என ஒருவர் கூறுவதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. அவர் பேசி கொண்டிருக்கும்போதே மஞ்சள் நிற சேத்தக் ஸ்கூட்டர் ஒன்று அவரை நெருங்கி வருகிறது. ஆதித் என்ற 15 வயது சிறுவன் அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்தார்.

இதன்பின் வீடியோவில் பேசி கொண்டிருந்த நபர், ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என ஆதித்திடம் கேட்கிறார். இதற்கு ஆதித், ஹெல்மெட் தேவையில்லை என பதில் கூறுகிறார். அவருக்கு ஏன் ஹெல்மெட் தேவையில்லை? என்பதற்கும் நமக்கு உடனடியாக விடை கிடைக்கிறது. அவர் ஓட்டி வந்த சேத்தக், உண்மையில் ஸ்கூட்டர் கிடையாது.

அது சைக்கிள் ஆகும். முன் பகுதியில் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை போல் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும்போது முன் பகுதி மட்டுமே தெரிவதால், அது அச்சு அசலாக பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை போன்ற தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. பக்கவாட்டு பகுதியையோ அல்லது பின் பகுதியையோ பார்க்கும்போதுதான், அது சைக்கிள் என்பது நமக்கு தெரியவருகிறது.

இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைக்கிளை பலர் ஆர்வமுடன் பார்ப்பதாக ஆதிக் கூறுகிறார். அத்துடன் இந்த வீடியோ எடுக்கப்பட்ட நாளில் கூட, காவல் துறையினர் ஆதித் ஸ்கூட்டரை ஓட்டி வருவதாக நினைத்து மூன்று இடங்களில் நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இது மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைக்கிள் என்பது தெரியவந்ததும், காவல் துறையினர் அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

15 வயதாகும் ஆதித்திற்கு பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆதித்தின் தந்தை மற்றும் உறவினர்கள் பலர் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்த ஸ்கூட்டரின் மீது அவருக்கு காதல் பிறந்து விட்டது. நம்மில் பலருக்கும் கூட பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்தான்.

நம்மில் பலர் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில்தான், இரு சக்கர வாகனம் ஓட்டி பழகியிருப்போம். ஆனால் ஆதித்திற்கு தற்போது 15 வயது மட்டுமே ஆகிறது. எனவே அவரால் சட்டப்பூர்வமாக இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. எனவே தனது சைக்கிளின் முன் பகுதியில், பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் முன் பகுதியை இணைக்கும் திட்டம் அவருக்கு தோன்றியுள்ளது.

இந்த பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் + சைக்கிள் மாடிஃபிகேஷனுக்கு அவர் 'Checy' என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்துள்ளார். இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைக்கிளில், இந்தியா முழுவதும் 'ட்ரிப்' அடிக்க ஆதித் திட்டமிட்டுள்ளார். அத்துடன் எலெக்ட்ரிக் மோட்டாரை இணைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். தொலை தூர பயணங்களுக்கு இது உதவி செய்யும்.
இந்த சைக்கிளின் அனைவரையும் கவரும் விஷயம் நிச்சயம் அதன் முன் பகுதியாகதான் இருக்கும். ஆனால் இதற்கு முன்பாகவும் சைக்கிளை இதுபோன்று ஸ்கூட்டர்களின் முன் பகுதியுடன் சிலர் மாடிஃபிகேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஆதித்தின் ஸ்கூட்டர் + சைக்கிள் மாடிஃபிகேஷன் தனித்துவமாக உள்ளதை மறுப்பதற்கில்லை.