மனைவிக்காக ஆல்டோவை பெட்ரூமாக மாற்றிய நபர்.. சொகுசு கப்பல்கூட இப்படி இருக்காது! செம்ம டேலண்டான ஆளா இருப்பாருபோல

இந்தியாவில் வசதி குறைவானவர்களாலும் கார் வாங்க முடியும் என்றால், அது மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் ஆல்டோ (Alto)-வாலேயே சாத்தியமானது. பலருக்கு இதுவே முதல் கார் மாடலாகவும் இருக்கின்றது. அந்த அளவிற்கு மலிவு விலையில் நாட்டில் விற்பனைக்கு வந்த ஓர் கார் மாடலே ஆல்டோ ஆகும். குட்டியான தோற்றத்திற்கும், பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும் இந்தியர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பை இந்த கார் மாடல் பெற்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே ஓர் நபர் கேரவனாக மாற்றி இருக்கின்றார்.

மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தை மகிழ்ச்சி உடன் கழிக்கும் விதமாக இந்த காரை அவர் சொகுசு பங்களாவிற்கு இணையான கேரவனாக மாற்றி இருக்கின்றார். கேரவனாக மாற்றப்பட்டு இருக்கும் அந்த ஆல்டோ சுமார் 15 வயது மதிப்புமிக்கது என கூறப்படுகின்றது. ஆமாங்க, 15 ஆண்டுகள் பழைய ஆல்டோ காரையே அழகிய உட்புறத்தைக் கொண்ட கேரவனமாக மாற்றி இருக்கின்றனர்.

Maruti alto turned caravan

ஆல்டோவிற்கு அழகான உட்புறத்தை வழங்குவதற்காக அக்காரின் உட்பக்கத்தை முழுமையாக மாற்றி அமைத்து இருக்கின்றனர். குறிப்பாக காரின் அனைத்து இருக்கைகளும் கூண்டோடு அகற்றப்பட்டு இருக்கின்றது. அந்த இருக்கைகளுக்கு பதிலாக புதிய மெத்தைப் போன்ற இருக்கைகளை அதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கையை முன் பக்கத்தில் இருந்து பின் பக்கம் பார்க்கும்படி திருப்பிக் கொள்ள முடியும்.

இதுமட்டுமில்லைங்க, முழுமையாக படுக்கையை போல இந்த இருக்கைகளையும் மடித்து வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் ஓர் கணவன், மனைவி மற்றும் குட்டி குழந்தை என மூவர் சொகுசாக படுத்துக் கொள்ள முடியும். படுக்கை செட்-அப் மட்டுமில்லைங்க சமையலறை செட்-அப்பும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Maruti alto caravan

இதுதவிர, பலதரப்பட்ட ஸ்டோரேஜும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ரூஃபில் பாக்ஸ்-ம் வழங்கப்பட்டு உள்ளது. அத்தனை மாற்றங்களையும் தந்தை-மகன் இருவரும் இணைந்தே செய்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே ஜகதீசா டிஎச்எம் யுட்யூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஓய்வெடுக்கும் போது பயணிகள் பொழுதை போக்கும் விதமாக டிவி ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் கைகளில் இருக்கும் பட்சத்தில் ஹோட்டலுக்காக செய்யப்படும் தேவையில்லா செலவு தவிர்க்கப்படும். தங்குமிடங்களை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், பயணங்களின் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இந்த காரில் வீட்டின் ஃபீலை வழங்கும் விதமாக செடி மற்றும் மறைப்பு திரைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த காரில் படுத்துறங்கும்போது வீட்டின் படுக்கை அறையில் படுத்துத் தூங்கும் அனுபவம் தாராளமாக கிடைக்கும். ஆனால், இருவர் மட்டுமே படுத்தால் மட்டுமே தாராளமான இட வசதியுடன் படுக்க முடியும்.

இதுபோன்ற அரிய வசதிகளையே ஆல்டோவில் குடும்பமாக சேர்ந்து வழங்கி இருக்கின்றனர். இந்தியாவில் ஓர் வாகனம் இதுபோன்று கேரவனாக மாற்றப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்று பல வாகனங்கள் சொகுசு பங்களாவிற்கு இணையாக மாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஆனால், குட்டியான ஆல்டோவை முழுக்க முழுக்க படுக்கை அறை வசதிக் கொண்டதாக மாற்றி இருக்கும் சம்பவம் முற்றிலும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குட்டி ஆல்டோ கார் படுக்கை அறை வசதிக் கொண்ட கேரவனாக மாற்றப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாற்றம் பலரின் மனதைக் கவரும் அமைந்துள்ளது. ஆனால், போலீஸ் இந்த வாகனத்தை எப்போது வேண்டுமானாலும் பறிமுதல் செய்யலாம். கார் மாடிஃபிகேஷனுக்காக அல்ல. காரின் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதைக் கொண்டிருப்பதே காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2024, 5:00 [IST]
English summary
15 year old maruti alto turned into budget caravan here is more details
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+