வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!

இந்தியாவில் வெறும் 150 ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனையாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இது ஏதோ ஆஃபர் எல்லாம் கிடையாது. உண்மையிலேயே விமானத்தின் டிக்கெட் விலை ரூபாய் 150 தான். இப்படியாக 22 வழித்தடங்களில் ரூபாய் ஆயிரத்திற்கும் குறைவான டிக்கெட் விலையில் விமான சேவை நடந்து வருகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள பரபரப்பாக இல்லாத விமான நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்க மத்திய அரசு உதான் திட்டம் மூலம் குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு விமான சேவை வழங்கும். விமான நிறுவனங்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் நேரடியாக பயணிகளுக்கு பலனளிக்கும் வகையில் குறைந்த விலையில் விமான டிக்கெட்கள் விற்பனையாகி வருகின்றன.

150 rupees flight ticket

இப்படியாக இந்தியா முழுவதும் உள்ள 22 ரூட்களில் செயல்படும் விமானங்களில் ரூபாய் ஆயிரத்திற்கும் குறைவாக தான் டிக்கெட் விலை இருக்கிறது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லைலாபாரி மற்றும் தெஸ்பூர் ஆகிய இரு பகுதிகளையும் இணைக்கும் விமானத்தில் பயணிக்க பெரும் 150 ரூபாய் தான் விமான டிக்கெட் அடிப்படை கட்டணமாக இருக்கிறது.

அலையன்ஸ் ஏர் நிறுவனம்தான் இந்த விமான சேவையை நடத்தி வருகிறது. இந்த விமான டிக்கெட்டை பெற அடிப்படை கட்டணம் ரூபாய் 150 ஆக இருந்தாலும், இந்த டிக்கெட்டை புக் செய்யும் போது அடிப்பை அடிப்படை கட்டணத்துடன் சேர்ந்து விமான நிறுவனம் வசதிக்கான கட்டணம் என கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கிறது. என்ன இருந்தாலும் விமான டிக்கெட் ரூபாய் 500க்கும் குறைவான விலையில் தான் விற்பனையாகும்.

150 rupees flight ticket

இந்த இரு நகரங்களையும் வெறும் 50 நிமிட விமான பயணத்தில் கடந்து விட முடியும். இப்படியாக பல்வேறு ரூட்களில் அடிப்படை கட்டணம் ரூபாய் 150 முதல் ரூபாய் 199 வரை என்ற குறைவான விலையில் விமான டிக்கெட் தற்போது விற்பனையாகி வருகின்றன.

தமிழகத்திலும் இப்படியாக ஒரு விமான நிலையத்தில் குறைவான கட்டணத்தில் விமான ம் இயக்கப்படுகிறது. பெங்களூர் முதல் சேலம், கொச்சின் முதல் சேலம் ஆகிய இரு ரூட்டுகளிலும் அடிப்படை கட்டணம் ரூபாய் 150 முதல் ரூபாய் 199 என்ற விலையில் விமான டிக்கெட் விற்பனைக்கு வருகின்றன.

50 rupees flight ticket

இது மட்டுமல்லாமல் சில விமான ரூட்களில் ரூபாய் 500க்கும் குறைவான அடிப்படைக் கட்டணத்தில் விமான டிக்கெட் விற்பனையாகி வருகின்றன. இதன்படி இந்தியாவில் இம்பால் முதல் ஐசாவால், திம்மாபூர்-ஷிலாங், ஷிலாங்-லைலாபாரி ஆகிய ரூட்களில் பயணிக்க ஒரு டிக்கெட் ரூபாய் 500க்கும் குறைவான விலையில் தான் விற்பனையாகி வருகிறது. பெங்களூரு சேலம் விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 525 தான்.

கெளஹாத்தி -பாஷிகட் ரூட்டில் விமானத்தில் பயணிக்க டிக்கெட் கட்டணம் வெறும் ரூ999 தான். லைலாபாரி-கௌஹாத்தி ரூட்டில் பயணிக்க விமான கட்டணம் ரூ954 தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டை அதிகரிக்க வைப்பதற்காக இந்த ரூட்டுகளில் விமான கட்டணத்தை குறைத்துள்ளது. இந்த ரூட்டுகளில் மற்ற போக்குவரத்து ஆப்ஷன்களில் எவ்வளவு கட்டணம் வசூல் ஆகிறதோ அதே கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதன் மூலம் மக்கள் விமானத்தில் பயணிக்க வருவார்கள்.

இதற்காக உதான் திட்டத்தின் கீழ் ரீஜினல் கனெக்டிவிட்டி ஸ்கீம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி 50 நிமிடத்திற்கும் குறைவான விமான பயணம் உள்ள ரூட்டுகளை தேர்வு செய்து அந்த பகுதியில் குறைவான விலையில் டிக்கெட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகளை செய்தது. இந்த ரூட்டுகளில் விமானத்தை சேவை நடத்தும் நிறுவனங்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அரசு வழங்குகிறது.

விமான சேவை நிறுவனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய செலவு என்றால் விமானத்தை லேண்ட் செய்வதற்கான செலவும், விமானத்தை பார்க்கிங் செய்வதற்கான செலவும் அதிகமாக இருக்கும். இந்த கட்டணம் எல்லாம் டிக்கெட்டில் தான் சேர்த்து வசூலிக்கப்படும். இந்நிலையில் இந்த ரூட்டுகளில் விமான சேவை நடத்தும் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு லேண்ட் செய்வதற்கும் அதே நேரம் பார்க்கிங் செய்வதற்கும் கட்டணம் கிடையாது என அரசு அறிவித்துள்ளதால் இந்த சலுகை விலையில் டிக்கெட்களை பெற முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் பயணிக்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். இந்த கனவை நினைவாக்கும் தருணமாக இந்த நேரம் இருக்கிறது. மிக குறைவான விலையில் விமான டிக்கெட் கட்டணம் என்பது இருப்பதால் தங்கள் விமான கனவை பலர் பூர்த்தி செய்ய இது ஒரு நல்ல நேரம்தான். உடனடியாக நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட்களை புக்கிங் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2024, 10:31 [IST]
English summary
150 rupees flight ticket regional air connectivity scheme
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X