பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் ஆப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

இந்தியாவில் பஸ்கள் மீது பல்வேறு புகார்கள் இருக்கின்றன. விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்துவது மற்றும் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்புவது போன்றவை இதற்கு உதாரணங்கள் ஆகும். இவை பஸ் பயணிகள் மட்டுமல்லாது, சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதுதவிர பயணிகளுக்கு ஒரு சில கண்டக்டர்கள் டிக்கெட் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பயணிகளிடம் இருந்து பணத்தை பெற்று கொண்ட பிறகும், டிக்கெட் வழங்காமல் ஒரு சில கண்டக்டர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

இதுபோல் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்த காரணத்தால் அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது மற்றும் மிகவும் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பியது ஆகிய காரணங்களுக்காக தற்போது 104 பஸ்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

ஏர் ஹாரன்களை பயன்படுத்தியதற்காக 60 பஸ்களுக்கும், காதை கிழிக்கும் வகையில் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பியதற்காக 44 பஸ்களுக்கும் என மொத்தம் 104 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். இந்த 104 பஸ்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 1.22 லட்ச ரூபாயை அதிகாரிகள் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

இதுதவிர பயணிகளுக்கு டிக்கெட் வழங்காத காரணத்தால் 55 பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 3 குற்றச்சாட்டுகள் தவிர பஸ்கள் மீது இன்னும் பல்வேறு புகார்கள் இருக்கின்றன. மிகவும் அபாயகரமான முறையில் பஸ்களை இயக்குவது, மற்ற பஸ்களுடன் போட்டி போட்டு கொண்டு அதிவேகத்தில் செல்வது ஆகியவை இதில் முக்கியமானவை.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் ஒரு சில பஸ்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் எத்தனை பஸ்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? என்ற விபரம் வெளியாகவில்லை. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பஸ்களை நிறுத்தாத காரணத்திற்காகவும் அதிரடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

ஒரு சில பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இவர்கள்தானே என்ற அலட்சியத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்கின்றனர். எனவே இந்த தவறை செய்யும் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீதும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள்தான் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனை பெயரளவிற்கு வெறும் ஒரு நாள் மட்டும் மேற்கொள்ளப்பட்டவுடன் நிறுத்தப்படாது எனவும், இந்த சோதனை தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில்தான் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் மட்டுமல்லாது, அரசு பஸ்களையும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு பஸ் பயணிகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மேற்கண்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்களின் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இந்த விதிமுறை மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!

வரும் நாட்களில் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் பொதுமக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக இலவச பயணம் என்பதால் ஒரு சில அரசு பஸ்களில் பெண் பயணிகளை கண்டக்டர்கள் மரியாதை குறைவாக நடத்துவது வரும் காலங்களில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப்படும் என நம்பலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
159 buses fined for traffic violations
Story first published: Thursday, September 22, 2022, 9:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X