வாகனம் ஓட்டும்போது போலீசை கண்டதும் 'நல்லவர்' வேஷம் போடும் புண்ணியவான்கள்!

Written By:

வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பு கவசங்களை அணிந்து செல்வது மட்டுமின்றி, சாலை விதிகளை மதித்து செல்வதும் அவசியம். அது நமக்கும், சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் தரும் செயலாக அமையும்.

ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கவசங்களை அணிவதும் இல்லை; சாலை பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதும் இல்லை. ஆனால், போலீசை கண்டால் மட்டும், நல்லவர் வேஷம் பூண்டு விடுவர். இதுபோன்ற காட்சிகளை இந்தியாவில்தான் அதிகம் காண முடியும். அதுபோன்று இந்தியர்கள் செய்யும் சில பாவனை காட்டும் செயல்களை ஸ்லைடரில் காணலாம்.

 01. சீட் பெல்ட்

01. சீட் பெல்ட்

சீட்பெல்ட் அணியாமல் சென்று உயிரை விட்டவர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி படிக்கிறோம். ஆனாலும், படித்தவர்கள் பலர், போலீசை கண்டால் மட்டுமே சீட் பெல்ட்டை எடுத்து அவசரமாக அணிந்து கொள்வர். தனது பாதுகாப்பை பற்றி கூட கவலை படாமல் போலீசுக்காக இவர்கள் செய்யும் நாடகம் சில வேளைகளில் அவர்களது உயிருக்கே வேட்டு வைத்துவிடும் என்பதை அவர்கள் உணரும் தருணம் எப்போது?

 02. இது நமக்கில்லை...

02. இது நமக்கில்லை...

சீட் பெல்ட் அணிவது என்பது ஓட்டுனருக்கான விஷயமாகவே நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. ஆனால், காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து செல்வது உயிருக்கு பாதுகாப்பை தரும். அனைத்து இருக்கைகளுக்கும் இப்போது கார் தயாரிப்பாகளார் சீட் பெல்ட் கொடுக்கப்படுகிறது. எனவே, நம் உயிரை காத்துக் கொள்வதற்கு சீட் பெல்ட் அனைவரும் அணிந்து செல்வது உத்தமமாகும்.

03. ஹெல்மெட் அலட்சியம்

03. ஹெல்மெட் அலட்சியம்

ஹெல்மெட் இல்லாமல் வருவோர் ஒரு பக்கம் என்றால், ஹெல்மெட் வைத்திருந்தும் அதனை சரியான முறையில் அணியாமல் பலர் வண்டி ஓட்டுகின்றனர். டேங்க் மீது வைத்துக் கொண்டு வருவர். எதிரில் சிக்னல் அல்லது போலீஸ் நடமாட்டம் இருந்தால், உடனே தலையில் சட்டி கவிழ்ப்பது போன்று கவிழ்த்துக் கொண்டு சிறிது தூரம் சென்றதும் மீண்டும் தலையிலிருந்து பெட்ரோல் டேங்கிற்கு ஹெல்மெட் இடமாறிவிடும்.

04. இதுவும் பிரச்னை

04. இதுவும் பிரச்னை

காரில் பயணிகள் எப்படி சீட் பெல்ட் அணிவதில்லையோ அதுபோன்று, டூ வீலர்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பலரும் ஹெல்மெட் போடுவதில்லை. இதுவும் கீழே விழுந்தால் தலையில் அடிபடுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை மறவாதீர்.

05. சரியான ஹெல்மெட்

05. சரியான ஹெல்மெட்

டூ வீலர் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவருக்கான பிரத்யேக ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். பலர் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட் அல்லது கிரிக்கெட் ஹெல்மெட்டுகளை மாட்டிக் கொண்டு செல்வதை காணலாம். முறையான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்டை போடுவதே சாலச் சிறந்தது. மேலும், சரியான அளவில் தரமான ஹெல்மெட்டை வாங்கி அணிந்துகொள்வதும் அவசியம்.

 06. ட்ரிப்பிள்ஸ்

06. ட்ரிப்பிள்ஸ்

டூ வீலர்களில் மூன்றுபேர் அமர்ந்து செல்வதை அடிக்கடி காணமுடியும். வேறு எந்த நாட்டிலும் அதிகம் காண முடியாத இந்த விஷயம் நம் நாட்டில்தான் அதிகம். சாலையில் மூன்று பேருடன் தாறுமாறாக ஓட்டிச் செல்வர். ஆனால், சிக்னலில் போலீசை கண்டதும், ஒருவர் இறங்கி ஓடிவந்து சிக்னலை தாண்டி ஏறிக் கொண்டு செல்வதை கண்டிருக்கலாம். இதுவும் விபத்துக்கு வழிகோலும் விஷயம் என்பதை அவர்கள் உணரும் காலம் எப்போது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

07. ஓவர் லோடு

07. ஓவர் லோடு

குறிப்பிட்ட அளவு எடை அல்லது பயணிகளை ஏற்றிச் செல்லும் விதத்திலேயே வாகனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதற்கான சாலை விதிகளும் உள்ளன. ஆனால், நம் நாட்டில் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களில் ஓவர் லோடு என்பது சர்வசாதாரணமான விஷயம். ஓவர்லோடுக்காக அபராதம் போன்றவை இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

08. சிக்னல் ஜம்ப்

08. சிக்னல் ஜம்ப்

பல சிக்னல்களில் நீங்கள் தினசரி காணும் விஷயம்தான் இது. போலீஸ் உள்ள சிக்னல்களில் வாகனங்கள் சரியாக நிற்கும். அதுவே, சிக்னலில் போலீஸ் இல்லையெனில், சிவப்பு விளக்கு போட்டிருந்தாலும், சர்வ சாதாரணமாக சிக்னலை தாண்டி செல்பவர்கள் அதிகம். பல விபத்துக்களுக்கு இந்த சிக்னல் ஜம்ப் முக்கிய காரணம் என்பதை தினசரி சமூக வலைதளங்களில் வரும் செய்திகளே அத்தாட்சி.

09. இடதுபக்க ஓவர்டேக்

09. இடதுபக்க ஓவர்டேக்

நம் நாட்டு சாலை விதிகளின்படி வலது பக்கம் மட்டுமே வாகனங்களை முந்த வேண்டும். ஆனால், நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் பெரும்பாலும் இடதுபக்கம் முந்துவதே பல வாகன ஓட்டிகளின் வழக்கமாக உள்ளது. வாகன விபத்துக்களுக்கு காரணங்களில் இடதுபக்கம் முந்துவதும் முக்கியமானதாக இருக்கிறது.

10. மொபைல்போன் சம்பாஷனை

10. மொபைல்போன் சம்பாஷனை

கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசும் வியாதி பலரிடம் இருக்கிறது. ஆனால், போலீஸ் நடமாட்டம் இருந்தால் பெட்டி பாம்பாக அவர்கள் மாறுவது வியப்பு தரும் விஷயம். மொபைல்போனில் பேசிக்கொண்டே வாகன ஓட்டும்போது கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துக்கு வழிகோலுகிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் பலர், போலீசை கண்டதும் நல்லவர்களாக மாறிவிடுவர்.

11. ஓவர்ஸ்பீடு

11. ஓவர்ஸ்பீடு

ஸ்பீடு லிமிட் உள்ள விரைவு சாலைகளில் முடிந்தவரை வாகனத்தை வேகமெடுத்து ஓட்டுவர். ஆனால், எதிரில் போலீஸ் இருப்பது தெரிந்தால் உடனே நல்லவர் வேஷம் பூண்டு விடுவர்.

12. மது போதையில் டிரைவிங்

12. மது போதையில் டிரைவிங்

மது போதையில் கார் அல்லது வாகனம் ஓட்டுவது பலர் வீரபராக்கிரம செயலாக நினைக்கின்றனர். ஆனால், உயிரை பறிக்கும் விபத்துக்கள் மதுபோதையில் டிரைவிங்கின்போதே நடக்கிறது. இப்போது பல மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக விரைவான சேவையை வழங்கும் டாக்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. எனவே, மது அருந்தினால், அதுபோன்ற டாக்சியை பயன்படுத்துவது உயிருக்கு நல்லது.

13. நடைபாதையில்தான் எல்லாம்..

13. நடைபாதையில்தான் எல்லாம்..

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் நடைபாதையில் டூ வீலரை ஓட்டிச் செல்வது மற்றும் முக்கிய சாலைகளின் நடைபாதையில் காரை பார்க்கிங் செய்வது என்பது நம்மவர்களுக்கு பிடித்தமான விஷயம். அவர்களுக்கு பாதசாரிகள் மற்றும் பிறரை பற்றி அக்கறை எல்லாம் இருக்காது. கண்ணை மூடிக்கொண்டு செல்வார்களோ அல்லது பார்க்கிங் செய்வார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

14. தகுதியில்லாத வாகனங்கள்

14. தகுதியில்லாத வாகனங்கள்

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள், இயக்குவதற்கு தகுதியில்லாத வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் நலம். மேலும், பலர் தகுதிச்சான்றை வாங்குவது கிடையாது. இதுபோன்ற வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதோடு, புகையால் பாதிக்கப்படுவது என்னமோ பொதுமக்கள்தான்.

15. பைக் வீலிங்

15. பைக் வீலிங்

பொது போக்குவரத்து சாலைகளில் கார்களை தாறுமாறாக ஓட்டிச் செல்வது, பைக்கில் வீலிங் செய்வது போன்றவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற, சாகசங்களால் ஏராளமான விபத்து ஏற்பட்டு பலரின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்திய கதைகள் இங்கே ஏராளம். ஆனால், போலீசை கண்டதும் இவர்கள் நல்லவர் கோலம் பூண்டுவிடுவதும் அபத்தமாக இருக்கிறது.

 16. சட்டத்திற்கு புறம்பானது...

16. சட்டத்திற்கு புறம்பானது...

கார் அல்லது பைக்குகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக பல ஆக்சஸெரீகளை பொருத்துகின்றனர். கண்ணை பறிக்கும் லோக்கல் எல்இடி பல்புகள், அதிக சப்தத்தை அளிக்கும் புகைப்போக்கி குழாய், அச்சுறுத்தும் ஹாரன் போன்றவையும் சாலையில் செல்லும் பிறருக்கு தொந்தரவு தரும் விஷயங்கள். சில சமயங்களில் விபத்துக்கும் இவை வழிகோலுகின்றது.

17. பாதுகாப்பு முக்கியம்...

17. பாதுகாப்பு முக்கியம்...

போலீசுக்கோ, ஆர்டிஓ., அலுவலருக்கோ பயந்து நல்லவர் வேஷம் போடுவதை நிறுத்திவிட்டு, உங்கள் உயிர் மீது உண்மையான அக்கறையுடன் செயல்படுவது அவசியம். போக்குவரத்து விதிமீறல்களால் சாலையில் செல்லும் அனைவரின் உயிருடனும் விளையாடுவதை நிறுத்திக் கொள்வது அவசியம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
So here are a few things that we do while driving or riding, keeping police in mind but not safety:

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark