16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

வாங்கி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் புதிது போல் பராமரிக்கப்பட்டு வரும் டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis) காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இது மிகவும் பிரபலமான எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா குவாலிஸ் இந்திய சந்தையில் கடந்த 2000ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த உடனேயே வாடிக்கையாளர்களின் மனதை டொயோட்டா குவாலிஸ் கொள்ளையடித்து விட்டது.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

ஆனால் சிறிது காலத்திலேயே குவாலிஸ் எம்பிவி காரை விற்பனையில் இருந்து விலக்குவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்தது. குவாலிஸ் காரை விற்பனையில் இருந்து விலக்கி விட்டு புதிய காரை கொண்டு வர உள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்தபோது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும், கார் ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

இந்த அதிருப்திக்கு மத்தியில் கடந்த 2004ம் ஆண்டு டொயோட்டா குவாலிஸ் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நான்கே ஆண்டுகளில், டொயோட்டா குவாலிஸ் சந்தையில் இருந்து விலக்கப்பட்டது. எனினும் குவாலிஸ் காருக்கு பதிலாக புதிய இன்னோவா (Toyota Innova) காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

டொயோட்டா இன்னோவா காரும் வாடிக்கையாளர்களை கவரவே செய்தது. இன்னோவா க்ரிஸ்ட்டா என்ற பெயரில் தற்போதும் கூட அது விற்பனையில் இருந்து வருகிறது. ஆனால் குவாலிஸ் மீதான இந்தியர்களின் பாசம் இன்னமும் மாறவில்லை. குவாலிஸ் காரை டொயோட்டா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி விட்டாலும் கூட, இன்னமும் பலர் அதனை புதிது போல் வைத்துள்ளனர்.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

அப்படி பல ஆண்டுகளுக்கு பிறகும் கூட, ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்து வந்ததை போல், கொள்ளை அழகுடன் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு டொயோட்டா குவாலிஸ் கார் பற்றிய தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இந்த டொயோட்டா குவாலிஸ் கார் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக உள்ளது. குவாலிஸ் ரசிகர்கள் அதன் அழகில் சொக்கி போவார்கள் என்பது உறுதி.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

தாஜிஸ் பி என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்து காரை காட்டுவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது. இந்த டொயோட்டா குவாலிஸ் ஃபாரூக் என்பவருக்கு சொந்தமானது ஆகும். கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் இந்த கார் தற்போது உள்ளது.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான், பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் இருந்து இந்த குவாலிஸ் காரை வாங்கினார். இது 2004ம் ஆண்டு மாடல் ஆகும். தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த அதே கருப்பு வண்ணத்தைதான் இந்த கார் பெற்றுள்ளது. பெயிண்ட்டை பாதுகாக்கும் வகையில், அதன் உரிமையாளர் செராமிக் கோட்டிங்கை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

ஹெட்லேம்ப்கள், பனி விளக்குகள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகிய அனைத்தும் அசலானவைதான். இது சுமார் 16 ஆண்டுகள் ஆன கார் என்பதை நம்புவதற்கே கடினமாக இருக்கும் வகையில், மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, காருடன் வந்த சக்கரங்கள் மாற்றப்பட்டு, புதிய 16 இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

இது பார்ப்பதற்கே அருமையாக உள்ளது. மேலும் தனது வேலைகளை எளிதாக்கி கொள்வதற்காக காரின் பின் பகுதியில், ரியர் பார்க்கிங் சென்சாரையும் இந்த காரின் உரிமையாளர் பொருத்தியுள்ளார். அதே சமயம் காரின் உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை காரின் கவர்ச்சியை கூட்டி காட்டுகின்றன.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

இந்த காரின் டேஷ்போர்டு மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை பார்ப்பதற்கு புத்தம் புதிது போல் தோற்றமளிக்கின்றன. அதே சமயம் அனைத்து இருக்கைகளும் லெதர் போன்ற சீட் கவர்களை பெற்றுள்ளன. ஃப்ளோர் மேட்களும் கூட இருக்கையின் நிறத்திலேயே இருக்கின்றன. காரின் வெளிப்புறத்தை போலவே உட்புறமும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

இந்த கார் 1.28 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் ஓடியுள்ளதாக ஓடோ மீட்டர் காட்டுகிறது. ஆனால் வாங்கி சுமார் 16 ஆண்டுகள் ஆன கார் என்பதால், இன்னும் அதிக கிலோ மீட்டர்கள் ஓடியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் இந்த காரின் இன்ஜின் இன்னும் புதிது போன்ற உணர்வையே தருகிறது. இது டீசல் வெர்ஷன் கார் ஆகும்.

இந்த காரில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவர் மற்றும் 151 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. டொயோட்டா குவாலிஸ் காரை இன்னமும் புதிது போல் பராமரித்து வரும் அதன் உரிமையாளருக்கு நமது வாழ்த்துக்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
16 Year-old Toyota Qualis MPV Looks Like A Brand New Car. Read in Tamil
Story first published: Monday, September 14, 2020, 13:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X