இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

உலகின் மிகப்பெரும் தொழிலதிபர்களும், பிரபலங்களும் கவர்ச்சிகரமான கார்களை வைத்திருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் ஒரு சிறுவனின் கார் கலெக்ஸனுக்கு முன்னால், அம்பானியின் கார் கலெக்ஸனே தோற்றுவிடும்.

By Arun

உலகின் மிகப்பெரும் தொழிலதிபர்களும், சினிமா, விளையாட்டு நட்சத்திரங்களும் கவர்ச்சிகரமான கார்களை வைத்திருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் வெறும் 16 வயதேயான ஒரு சிறுவனின் கார் கலெக்ஸனுக்கு முன்னால், அம்பானியின் கார் கலெக்ஸனே தோற்று விடும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். 'சூப்பர் ஸ்டார்' பாணியில் சொல்வதென்றால், ரஷீத் பெல்ஹாஸாவின் கார் கலெக்ஸனை பார்த்தால், அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

ரஷீத் பெல்ஹாஸா. சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனெனில் ரஷீத் பெல்ஹாஸா, ஒரு பிரபலமான யூ-டியூப் ஆர்டிஸ்ட் மற்றும் புகழ்பெற்ற சோசியல் மீடியா பர்சனாலிட்டி.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்று சொல்வார்களே. அப்படிப்பட்டவர்தான் ரஷீத் பெல்ஹாஸா. துபாயை சேர்ந்த ரஷீத் பெல்ஹாஸா, பிறப்பால் கோடீஸ்வர பரம்பரையை சேர்ந்தவர். துபாயில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களில், ரஷீத் பெல்ஹாஸாவின் குடும்பமும் ஒன்று.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

ரஷீத் பெல்ஹாஸாவுக்கு வயது ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை. வெறும் 16 வயதுதான் ஆகிறது. ஆனால் அவரது கேரேஜில் நிற்கும் கார்கள், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானம் உடையவை. அந்த கார்களின் பட்டியலை கேட்டால், நமக்கு மட்டுமல்ல, 'அம்பானிக்கே ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

ஃபெராரி எப்12 பெர்லினட்டா (விலை சுமார் 5 கோடி ரூபாய்)

ரஷீத் பெல்ஹாஸா என்ற நட்சத்திர சிறுவனிடம் இருக்கும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று ஃபெராரி எப்12 பெர்லினட்டா. இந்த கார் முழுவதும், தனித்துவமான முறையில், லூயிஸ் வுயிட்டன் பிரிண்ட் வ்ராப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு முறை துபாய் சென்றிருந்தபோது, ரஷீத் பெல்ஹாஸாவின் ஃபெராரி எப்12 பெர்லினட்டா காரை சென்று பார்வையிட்டார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஃபெராரி எப்12 பெர்லினட்டா காரில், 6.3 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 730 பிஎச்பி பவரையும், 690 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

காடிலாக் எஸ்கலேட் (விலை சுமார் 2 கோடி ரூபாய்)

ரஷீத் பெல்ஹாஸாவிடம் காடிலாக் எஸ்கலேட் கார் ஒன்றும் உள்ளது. இந்த எஸ்யூவி கார் சிகப்பு நிறத்தில்தான் வாங்கப்பட்டது. ஆனால் அதன்பின் தனித்துவமான கருப்பு, வெள்ளை பேட்டர்னில் வ்ராப்பிங் செய்யப்பட்டு விட்டது.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

காடிலாக் எஸ்கலேட் காரில் பொருத்தப்பட்டுள்ள 6.2 லிட்டர் வி8 இன்ஜின், அதிகபட்சமாக 426 பிஎச்பி பவரையும், 624 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த கார் ப்ளக்ஸ் ப்யூயல் இன்ஜின் ஆப்ஷனுடனும் கிடைக்கிறது.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

லம்போர்கினி அவெண்டெடார் (விலை சுமார் 6 கோடி ரூபாய்)

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி கார் நிறுவனத்தின் மிக மிக விலை உயர்ந்த கார்கள் பட்டியலில் அவெண்டெடாருக்கு இடம் உண்டு. இந்த காரின் பாடி கிராபிக்ஸ் மிரட்டலாக இருக்கும். பல்வேறு வேரியண்ட்களில், லம்போர்கினி அவெண்டெடார் கார் கிடைக்கிறது.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

லம்போர்கினி அவெண்டெடார் சூப்பர் காரின் ரெகுலர் வெர்ஷனில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 690 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இதை விட அதிக பவர்புல் வெர்ஷனும் உள்ளது. அந்த காரின் இன்ஜின் அதிகபட்சமாக 740 பிஎச்பி பவரையும், 690 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்த சிறுவனின் கார் கலெக்ஸனை பார்த்தால் ரஜினிக்கு மட்டுமல்ல.. அம்பானிக்கே 'ஒரு நிமிஷம் தலை சுத்தும்'

ரோல்ஸ் ராய்ஸ் வெய்ரித் (விலை சுமார் 5 கோடி ரூபாய்)

ரோல்ஸ் ராய்ஸ் வெய்ரித், 2 டோர் கொண்ட கூப் வகையை சேர்ந்த கார். இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிக விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 6.6 லிட்டர் வி12 இன்ஜின், 623 பிஎச்பி பவரை உருவாக்கும் திறனுடையது.

More from DriveSpark

Article Published On: Monday, June 11, 2018, 19:38 [IST]
English summary
16-year old’s car collection can make Ambani’s collection look puny; Even Salman Khan is a fan. Read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+