இவ்வளவு சின்ன வயசுல இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரு!! 17-வயது இளம்பெண்ணின் வாழ்க்கை ஓவர்-நைட்டில் சேஞ்ச்டு!

அஸ்ஸாம் (Assam) மாநிலத்தில் 17 வயது மட்டுமே ஆன ஓர் இளம்பெண் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் லக்சரி காரை பரிசாக வென்றுள்ளார். இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் பிரபலமாகி உள்ள இவர், வெறும் ரூ.100ஐ செலவு செய்ததன் மூலமாக இவ்வளவு பெரிய பரிசுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

பல்வேறு கொண்டாட்டங்களுடன் தீபாவளி சமீபத்தில் நடந்து முடிந்தது. தீபாவளி சமயத்தில் புது வாகனங்களை வாங்க நம்மில் பெரும்பாலானோர் விரும்புவது உண்டு. ஆனால், பண்டிகை சமயத்தில், கடவுள் பரிசாக வழங்கியது போல் புது வாகனம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு உணர்வுதான் வெறும் 17 வயது மட்டுமே ஆன ஓர் இளம்பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

girl won luxury mercedes car

திஷா தாஸ் என பெயர் கொண்ட இந்த இளம்பெண் அஸ்ஸாம் மாநிலத்தின் பார்பெடா என்ற நகரத்தில் உள்ள ஓர் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். பெற்றோருக்கு ஒரே குழந்தையான திஹா தாஸ் சமீபத்தில் வாங்கி இருந்த ஓர் பரிசு கூப்பனுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. பார்பெடா நகரின் புத்தக & அறிவியல் கண்காட்சி வருகிற 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது.

இப்படியொரு கண்காட்சி நடைபெறுவதை மாணவ, மாணவியரிடம் தெரிவிக்கும் விதமாக பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இதில் பரிசு விழும் அதிர்ஷ்டசாலிக்கு முதல் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்ற மாணவர்களை போல், திஷா தாஸும் தனது சேமிப்பு பணத்தில் இருந்து 2 பரிசு கூப்பன்களை வாங்கியுள்ளார்.

girl won luxury mercedes car

அதில் ஒரு பரிசு கூப்பனுக்கு, அறிவிக்கப்பட்ட முதல் பரிசான மெர்சிடிஸ்-பென்ஸ் கார் கிடைத்துள்ளது. இதனால், ஓவர் நைட்டில் திஷா தாஸ் மற்றும் அவரது குடும்பம் பணக்காரர்கள் ஆகியிருப்பது மட்டுமின்றி, பார்பெடா நகரத்தில் திஷா தாஸ் ஃபேமஸாகி உள்ளார். திஷா தாஸுக்கு பரிசாக கிடைத்திருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஏ-கிளாஸ் என்ற லக்சரி செடான் கார் ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் குறைவான மெர்சிடிஸ் கார் இதுவாகும். லிமௌசைன் 200 என்ற ஒரேயொரு பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் ஏ-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.45.80 இலட்சமாக உள்ளது. ஆனால், ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் ரூ.50 இலட்சத்தை நெருங்கிவிடும்.

girl won luxury mercedes car

காஸ்மோஸ் பிளாக், மொண்டெயின் கிரே, போலார் வெள்ளை மற்றும் இரிடியம் சில்வர் என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமௌசைன் காரை வாங்கலாம். திஷா தாஸுக்கு காஸ்மோஸ் பிளாக் பெயிண்ட் ஆப்ஷனில் இந்த லக்சரி கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் செடான் காரில் 1.3 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. விற்பனையில் இந்த மெர்சிடிஸ் காருக்கு பிஎம்டபிள்யூவின் 2 சீரிஸ் கிரான் கூபே போட்டியாக விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 17 வயது மட்டுமே ஆன இளம்பெண்ணிற்கு கிட்டத்தட்ட ரூ.50 இலட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார் பரிசாக கிடைத்திருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். ஆனால், பரிசாக பெற்ற காரை திஷா தாஸால் இப்போதைக்கு ஓட்ட முடியாது. ஏனெனில், இந்தியாவில் கார் ஓட்டுவதற்கான குறைந்தப்பட்ச வயது வரம்பு 18 ஆகும்.

Source: Hindi News18

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 18:48 [IST]
English summary
17 year old girl won luxury mercedes benz a class car check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X