கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

Written By:

பெரு நகரங்களில் இப்போது சொகுசு கார்களால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அபாயகரமான எண்ணிக்கையில் சென்று கொண்டிருக்கிறது. டெல்லியில் உள்ள மியாவாலி என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் மீது கண்மூடித்தனமான வேகத்தில் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

 கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

இதில், ஸ்கூட்டரில் சென்ற அதுல் அரோரா என்ற 17வயது வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் தலையில் பலத்த காயமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விபத்துக்கு காரணமான மெர்சிடிஸ் பென்ஸ் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் டிரைவர் குறித்து அடையாளம் காண்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற அதுல் அரோரா தனது நண்பரை அவரது வீட்டில் விட்டு விட்டு வரும்போது இதுபோன்ற பயங்கர விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.

கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

மேலும், ஹெல்மெட் அணியாமல் அவர் வந்ததால்தான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததுள்ளார். வாகன சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பொறுப்பு நம் கையில் உள்ளது.

கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வதை மறவாதீர்கள். எந்த நேரத்திலும் விபத்து நிகழலாம். எனவே, உங்களது உயிரை காக்கும் கவசமாக ஹெல்மெட் பயன்படும்.

கண்மூடித்தனமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி வாலிபர் பலி!

அதேநேரத்தில், சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட சொகுசு கார் வாங்குவோர்க்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டிய சூழலும் உருவாகி வருகிறது. விபத்துக்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இந்த விஷயத்தில் கார் நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் கார் வாங்கும் உரிமையாளர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: The Mercedes driver fled immediately after the accident, and no arrests have been made so far.
Story first published: Tuesday, March 7, 2017, 11:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more