172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

172 சிறுவர்கள் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

இந்தியாவில் உரிய வயதை எட்டாமல், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவது என்பது சட்ட விரோதமானது. ஆனால் நாட்டின் பல்வேறு இடங்களில், சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இத்தகைய சிறுவர்களால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

எனவே அத்தகைய சிறுவர்களை பிடிப்பதற்காக ஐதராபாத் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனையை நடத்தினர். இதில், 172 சிறுவர்கள் பிடிபட்டனர். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறியதற்காகவும், லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கியதற்காகவும் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

ஐதராபாத் நகரின் மேற்கு/மத்திய மண்டலத்தில் 69 சிறுவர்களும், கிழக்கு மண்டலத்தில் 60 சிறுவர்களும் பிடிபட்டுள்ளனர். அதே சமயம் தெற்கு மண்டலத்தில் 43 சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தி ஹான்ஸ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

கடந்த ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்கள் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த சோதனை தொடரலாம் என ஐதராபாத் போக்குவரத்து போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

முன்னதாக லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குவது எவ்வளவு அபாயகரமானது? என்பது குறித்து பிடிபட்ட சிறுவர்களிடம் போக்குவரத்து போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர். ஒரு வேளை சாலை விபத்து நடந்தால், அதன் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

உரிய வயதை எட்டும் முன்பே வாகனம் இயக்கிய இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழியை எடுத்து கொள்ளும்படியும் அந்த சிறுவர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். இந்த நேரத்தில் சிறுவர்களின் பெற்றோர்களுக்கும், போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

இதில், ''சிறுவர்கள் வாகனங்கள் இயக்குகிறார்களா? என்பதை பெற்றோர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உரிய வயதை எட்டும் முன் அவர்கள் வாகனங்களை இயக்கவில்லை என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்'' என போக்குவரத்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

முன்னதாக உரிய வயதை எட்டாமல் வாகனங்களை இயக்கும் சிறுவர்களுக்கு எதிராக, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதமும் இதேபோன்றதொரு நடவடிக்கையை ஐதராபாத் போக்குவரத்து போலீசார் எடுத்தனர். அப்போது வாகனங்களை இயக்க தங்கள் பிள்ளைகளை அனுமதித்தற்காக 45 பெற்றோர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

என்றாலும் இதுபோன்றதொரு நடவடிக்கை தற்போது எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பிடிபட்ட சிறுவர்களுக்கு போக்குவரத்து போலீசார் சிறப்பு கவுன்சிலிங் வழங்கினர். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின் படி, உரிய வயதை எட்டாமல் வாகனங்களை இயக்கும் சிறுவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

மிக தீவிரமான வழக்கு என்றால், சிறுவர்களுக்கு இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்தே வழங்கப்படலாம். அதே சமயம் உரிய லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

இந்தியாவின் மோட்டார் வாகன சட்டம், 18 வயதுக்கு குறைவான யாரையும் டிரைவிங் லைசென்ஸ் பெற அனுமதிப்பது கிடையாது. எனினும் 50 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு மட்டும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

அதேபோல் ரேஸிங் டிராக் போன்ற இடங்களில் சிறுவர்கள் வாகனங்களை இயக்க முடியும். ஆனால் அதற்கென உள்ள லைசென்ஸை பெற்ற பிறகுதான் இதனையும் செய்ய முடியும். எப்படி இருந்தாலும் பொது சாலைகளில் சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது என்பது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

172 சிறுவர்கள் மீது வழக்கு... தண்டனை என்னவென்று தெரிந்தால் இனி இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள்

ஆனால் இந்த விதிமுறைகள் எதனையும் பெரும்பாலானவர்கள் பின்பற்றுவது கிடையாது. சமீப காலமாக இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த பிரச்னை ஐதராபாத் நகரில் மட்டுமல்லாது இந்தியா முழுக்கவே இருந்து வருகிறது. போக்குவரத்து போலீசாருடன் பெற்றோர்களும் மனது வைத்தால் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரலாம்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 30, 2019, 9:29 [IST]
English summary
172 Minors Booked For Under-age Driving In Hyderabad. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+