ஒரு லிட்டருக்கு 176 கி.மீ ஓடும் பைக் இன்ஜின்! அலகாபாத் பல்கலை., முன்னாள் மாணவர் கண்டுபிடிப்பு!
ஒரு லிட்டர் பெட்ரோலில் 176 கி.மீ மைலேஜ் தரும் பைக் ஒன்றை அலகாபாத் பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் ஒருவர் குறைவான விலைில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என பலர் பேசி வருகின்றனர். இவர் கண்டுபிடித்த இன்ஜின் என்ன? இது எப்படி செயல்படுகிறது. இது எப்படி அதிக மைலேஜ் தருகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அலகாபாத் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் ஷைலேந்திர சிங் கவுர். இவர் தான் 176 கி.மீ மைலேஜ் தரும் இன்ஜினை வடிவமைத்துள்ளதாக லைவ் இந்துஸ்தான் தளம் செ்தி வெளியிட்டுள்ளது. இவர் அந்த பல்கலைகழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்தார். பின்னர் இவருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கடந்த 2007ம் ஆண்டு வரை அங்கு வேலை செய்தார்.

அதன் பிறகு இவர் மோதிலால் நேரு நேசினல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் 6 மாதம் பேராசிரியர் அனுஜ் ஜெயினிடம் பணியாற்றினார். பின்னர் ஐஐடி-பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் லேப்பில் பணியாற்றினார். இவர் டாடா மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றிய போதே வாகனங்களுக்கான இன்ஜினில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்துள்ளார். இவர் வீடு, நிலம், கடை எல்லாம் தனது ஆய்விற்காக விற்றுள்ளார்.
தற்போது வாடகைக்கு இருக்கும் வீட்டில் பெரும் பகுதியை இவர் ஆய்விற்காக பயன்படுத்தியுள்ளார். இவர் வீடே ஒரு ஒர்க் ஷாப் போல இருக்கும் என கூறுப்படுகிறது. இவர் கடந்த 2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டிவிஎஸ் நிறுவனத்தின் பைக்கை தனது ஆய்விற்காக பயன்படுத்தினார். இவரது ஆய்வில் வெறும் 50 மில்லி லிட்டர் பெட்ரோலில் இந்த இன்ஜின் 35 நிமிடங்கள் ஓடியுள்ளது. இதை வைத்து கணக்கு பார்த்தால் ஒரு லிட்டருக்கு 176 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என அவர் கூறுகிறார்.

இந்த சாதனையை இவர் செய்வதற்கு இந்த இன்ஜினை 6 ஸ்டோக் இன்ஜினை உருவாக்கியுள்ளார். வழக்கமான தற்போது பயன்படுத்தும் இன்ஜின்கள் 4 ஸ்டோக் இன்ஜின்களாக உள்ளன. அதாவது இன்டேக், கம்பிரஷன், பவர், எக்ஸாஸ்ட் ஆகிய 4 ஸ்டோக் கொண்டு இந்த இன்ஜினில் சுழற்சி ஏற்படுகிறது. எரிபொருளை பயன்படுத்தி இந்த பவரை எடுக்கிறார்கள்.
இவர் 6 ஸ்டோக் இன்ஜினை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மார்கெட்டில் ஏற்கனவே மார்கெட்டில் பல்வேறு விதமாக இருக்கிறது. 4 ஸ்டோக் இன்ஜினில் உள்ள எக்ஸாஸ்ட் புகையுடன் காற்றை கலந்து வெளியாகும் வகையில் ஒன்றும், பல்வேறு பிஸ்டன்கள் கொண்ட இன்ஜினில் ஒரு பிஸ்டன் அசைவில் மற்றொரு பிஸ்டன் என்ற வகையில் என பல 6 ஸ்டோக் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகளை நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன.

சில தொழிற்நுட்பங்கள் அதிக செலவு வைக்கும், சில தொழிற்நுட்பங்கள் நடைமுறையில் தேவையான பவரை தராது. அல்லது நீண்ட காலம் உழைக்கும் தன்மையுடன் இருக்காது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. இவர் தயாரித்துள்ள 6 ஸ்டோக் என் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் இந்த தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இன்ஜினை வைத்து பைக்க தயாரித்து ஓட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த இன்ஜினிற்காக 2 காப்புரிமைகளை அவர் பெற்றுள்ளதாகவும்,மேலு்ம சில காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த இன்ஜினை வைத்து அவர் பைக்கை ஓட்டிய போது 120 கி.மீ மைலேஜை ரியல் வேர்ல்டில் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு சாத்தியம் தற்போது உள்ள பைக்கில் உள்ள 4 ஸ்டோக் இன்ஜினிற்கு பதிலாக இவரது 6 ஸ்டோக் இன்ஜினை பயன்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை.
இது தற்போது வரை அவரது தனிப்பட்ட கண்டுபிடிப்பாக தான் இருகு்கிறது. இது குறித்த ஆய்வு தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதை சோதனை செய்து தற்போது உள்ள இன்ஜினிற் மாற்று என உறுதியானால் மட்டுமே இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் இதை ஒரு புரோட்டோடைப் இன்ஜினாக மட்டுமே கருதுவார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் இன்ஜினிற்கான தேடல் அதிகமாக இருக்கிறது. எந்த விதத்திலும் பவரை குறைக்கவிடாமல் அதே நேரத்தில் அதிக திறனை வெளிப்படுத்தும் இன்ஜின் இருந்தால் நிச்சயம் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









