கண்டம் விட்டு கண்டம் இடைநில்லாமல் பறக்கும் நீண்ட தூர விமானங்கள்!

Written By:

உலகை சுருக்கிய விஷயங்களில் கம்ப்யூட்டருக்கு அடுத்தபடியாக, விமானங்களை கூறலாம். பல நாட்கள் பயணித்து சென்றடைந்த இடங்களை சில மணிநேரங்களில் சென்றடைய வைக்கும் விமான பயணம் அனைவருக்கும் விருப்பமானதும், சொகுசானதாகவும் அமைந்து வருகிறது.

இந்த நிலையில், உலகையே சுருக்கும் விதத்தில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை குறுகிய நேரத்தில் வழியில் எங்கும் நிற்காமல் பறந்து செல்லும் நான்- ஸ்டாப் விமானங்களை பற்றிய விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

19. ஏர் இந்தியா 191

19. ஏர் இந்தியா 191

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு பெரும்பாலும், ஐரோப்பிய அல்லது அரபு நாட்டு நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து வேறு விமானத்தில் செல்கின்றனர். ஆனால், இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்கும் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரிலுள்ள நெவார்க் இடையிலான 12,559 கிமீ தூரத்துக்கு இடைநில்லாமல் செல்லும் ஏர் இந்தியா 191 விமானம் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான அந்த போயிங் 777- 300 விமானம் இடையில் எங்கும் நிற்காமல், 15 மணி 58 நிமிடங்களில் சென்றடைகிறது. அடிக்கடி மும்பையிலிருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு இந்த நான்- ஸ்டாப் விமானம் மிகுந்த பயனை தருகிறது.

18. கத்தே பசிஃபிக் 825/829

18. கத்தே பசிஃபிக் 825/829

சீனாவின் ஹாங்காங் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ நகருக்கு இடையிலான 12,562 கிமீ தூரத்துக்கு இடைநில்லாமல் செல்லும் போயிங் 777-300 விமானத்தை கத்தே பசிஃபிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானம் 14 மணி, 50 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கிறது.

17. காந்தாஸ் 94 மற்றும் யுனைடைட் 98

17. காந்தாஸ் 94 மற்றும் யுனைடைட் 98

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையிலான 12,771 கிமீ தூரத்தை போயிங் 787-9 விமானம் 15 மணி, 30 நிமிடங்களில் கடக்கிறது. ஆஸ்திரேலியாவின் காந்தாஸ் விமான நிறுவனத்தின் 94 என்ற எண் கொண்ட விமானமும், யுனைடைட் ஏர்லைன்ஸின் 98 என்ற எண் கொண்ட விமானமும் இந்த நகரங்களை இணைக்கின்றன.

16. கத்தார் 733

16. கத்தார் 733

உலகின் பணக்கார நாடான கத்தாரின் தோஹா நகரிலிந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு இடையிலான 12,758 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்கிறது கத்தார் 733 விமானம். இந்த தூரத்தை கத்தார் விமான நிறுவனத்தின் போயிங் 777-200 விமானம் 15 மணி, 16 நிமிடங்களில் கடக்கிறது.

15. சவுத் ஆப்ரிக்கன் 204

15. சவுத் ஆப்ரிக்கன் 204

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இடையிலான 12,845 கிமீ தூரத்தை சவுத் ஆப்ரிக்கன் 204 விமானம் 14 மணி, 57 நிமிடங்களில் கடக்கிறது. சவுத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் 340- 300 விமானம் இந்த தூரத்தை இடைநில்லாமல் கடக்கிறது.

Photo credit: Wiki Commons/PretoriaTravel

14. சைனா சதர்ன் 300

14. சைனா சதர்ன் 300

சீனாவின் குவான்ஸோ நகருக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் இடையிலான 12,871 கிமீ தூரத்தை சைனா சதர்ன் 300 விமானம் 14 மணி, 17 நிமிடங்களில் கடக்கிறது. சைனா சதர்ன் ஏர்லைன்ஸின் போயிங் 777-300 விமானம்தான் இந்த தூரத்தை இடைநில்லாமல் கடக்கிறது.

Photo credit: Wiki Commons/Chinatravelsavvy

 13. எமிரேட்ஸ் 221

13. எமிரேட்ஸ் 221

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த துபாய் நகரலிருந்து, அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு இடையிலான 12,932 கிமீ தூரத்தை எமிரேட்ஸ் 221 எண் கொண்ட ஏர்பஸ் 380- 800 விமானம் 15 மணி, 17 நிமிடங்களில் கடக்கிறது. உலகின் மிகப்பெரிய விமானமான இந்த விமானம் பயணிகள் சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.

 12. கத்தார் 713

12. கத்தார் 713

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து, அமெரிக்காவின் ஹஸ்டன் நகருக்கு இடையிலான 12,947 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்கிறது கத்தார் ஏர்லைன்ஸின் 713 எண் கொண்ட விமானம். இந்த வழித்தடத்தில் போயிங் 777-200 விமானம் பயன்படுத்தப்படுகிறது.

 11. எதிஹாட் 161

11. எதிஹாட் 161

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபியிலிருந்து, அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு இடையிலான 12,984 கிமீ தூரத்தை 14 மணி, 10 நிமிடங்களில் கடக்கிறது எதிஹாட் 161 விமானம். இந்த வழித்தடத்தில் போயிங் 777-200 விமானம் பயன்படுத்தப்படுகிறது.

10. கத்தே பசிஃபிக் 831

10. கத்தே பசிஃபிக் 831

சீனாவின் ஹாங்காங் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் இடையில் இயக்கப்படும், கதே பசிஃபிக் 831 எண் கொண்ட போயிங் 777-300 விமானம் 12,984 கிமீ தூரத்தை 14 மணி, 39 நிமிடங்களில் கடக்கிறது.

Photo credit: Wiki Commons/Aero Icarus

09. எமிரேட்ஸ் 225

09. எமிரேட்ஸ் 225

துபாயிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு இடையிலான 13,034 கிமீ தூரத்தை எமிரேட்ஸ் 225 எண் கொண்ட ஏர்பஸ் ஏ380- 800 விமானம் 15 மணி, 37 நிமிடங்களில் கடக்கிறது.

08. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 137

08. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 137

சீனாவின் ஹாங்காங் நகரிலிருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு இடையிலான 13,066 கிமீ தூரத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 137 எண் கொண்ட போயிங் 777-300 விமானம் 15 மணி, 8 நிமிடங்களில் இடைநிற்காமல் கடக்கிறது.

07. எதிஹாட் 183

07. எதிஹாட் 183

அபுதாபியிலிருந்து சான் பிரான்சிஸ்கோ இடையிலான எதிஹாட் நிறுவனத்தின் 183 எண் கொண்ட போயிங் 777-300 விமானம் 13,122 கிமீ தூரத்தை 15 மணி, 13 நிமிடங்களில் கடக்கிறது.

06. எமிரேட்ஸ் 211

06. எமிரேட்ஸ் 211

துபாயிலிருந்து, அமெரிக்காவின் ஹஸ்டன் நகருக்கு இடையிலான 13,138 கிமீ தூரத்தை எமிரேட்ஸ் நிறுவனத்தின் 211 எண் கொண்ட ஏர்பஸ் ஏ380 -800 விமானம் 16 மணி, 19 நிமிடங்களில் கடக்கிறது.

05. சவுதியா 41

05. சவுதியா 41

சவுதி அரேபியாவிலுள்ள ஜெத்தா நகரிலிருந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடையிலான 13,404 கிமீ தூரத்தை சவுதியா 41 எண் கொண்ட போயிங் 777-300 விமானம் 15 மணி, 56 நிமிடங்களில் கடக்கிறது.

04. எமிரேட்ஸ் 215

04. எமிரேட்ஸ் 215

துபாயிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடையிலான 13,413 கிமீ தூரத்தை எமிரேட்ஸ் 215 என்ற எண் கொண்ட ஏர்பஸ் ஏ380- 800 விமானம் 15 மணிநேரத்தில் கடக்கிறது.

03. எதிஹாட் 171

03. எதிஹாட் 171

அபுதாபியிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு இடையிலான 13,497 கிமீ தூரத்தை எதிஹாட் 171 என்ற எண் கொண்ட போயிங் 777- 200 விமானம் 15 மணி, 39 நிமிடங்களில் கடக்கிறது.

02. டெல்டா 201

02. டெல்டா 201

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் அட்லான்டா நகருக்கு இடையிலான 13,597 கிமீ தூரத்தை இடைநில்லாமல் 16 மணி, 35 நிமிடங்களில் கடக்கிறது. இந்த தடத்தில் டெல்டா நிறுவனம் போயிங் 777-200 விமானத்தை பயன்படுத்துகிறது.

01. காந்தாஸ் ப்ளைட் 8

01. காந்தாஸ் ப்ளைட் 8

உலகிலேயே இடைநில்லாமல் அதிக தூரம் பயணிக்கும் விமான வழித்தடங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து, அமெரிக்காவின் டல்லாஸ் நகரங்களுக்கு இடையிலான விமான வழித்தடம்தான். இந்த நகரங்களுக்கு இடையிலான 13,822 கிமீ தூரத்தை காந்தாஸ் ப்ளைட் 8 என்ற எண் கொண்ட ஏர்பஸ் ஏ380-800 விமானம் 16 மணிநேரத்தில் பறந்து கடக்கிறது.

Photo credit: Wiki Commons/Phil Vabre

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Wednesday, June 3, 2015, 13:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark