19 வயசு பொண்ணு வாங்குன காரை பாத்தீங்களா? யாருமே இப்படி யோசிச்சிருக்க மாட்டாங்க!
இந்தியாவில் 19 வயது பெண் ஒருவர் சொந்தமாக மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை சொந்தமாக வாங்கியுள்ளார். சிறு வயதுடையவர்கள் பெரும்பாலும் ஃபேன்ஸியான வாகனங்களை வாங்குவார்கள் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இந்த பெண் ரக்கட் எஸ்யூவியை வாங்கியுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் அனன்யா ராம்தே, 19வயதான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வாங்கிய கார் குறித்த பதிவை செய்துள்ளார். இவர் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை சொந்தமாகமாக வங்கியுள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பொதுவாக இளம் வயதினர். ஸ்லீக்கான அல்லது ஸ்போர்ட்டியானசெடான் அல்லது சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற காரையே அதிகம் வாங்க விரும்புவார்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அனன்யா வாங்கியது 2024 மாடல் கார் ஆகும். இதில் பாடி கிராஃபிக்ஸ் மற்றம் கிரில் பகுதியில் உள்ள டிசைனை பார்க்கும் போது நமக்கு தெளிவாக தெரகிறது.
இது ஒரு ரக்கட்டான எஸ்யூவி கார், இதில் நவீன கார்களில் உள்ளதை போல சில சொகுசு அம்சங்கள் இருக்காது. இந்த கார் ரக்கட்டான லிஃப் ஸ்பிரிங் சஸ்பென்சன் செட்டப்பை கொண்டுள்ளது. கேபின் பகுதியும் பேசிக்கான வடிவமைப்பை கொண்டதாக இருகு்கிறது. இந்தகாரை ஒரு இளம் பெண் வாங்க தேர்வு செய்துள்ளது ஆச்சரியமாக இருகு்கிறது. இதை பெரும்பாலும் பெரியவர்கள் பிஸ்னஸ் பயன்பாடு கொண்டவர்கள், ஆஃப்ரோடு ரைடிங் செய்பவர்கள் அதிகம் தேர்வு செய்வார்கள்.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்த தனது பொலிரோ கார் கடந்த 6ம் தேதி தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தகார் ரூ7.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார்் பி4, பி6, பி6(ஓ), பி8 ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதில் புதிதாக வந்த பி8 வேரியன்ட் ரூ9.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஃபேஸ்லிஃப்ட் காின் டிசைனில் பொலிரோ காரின் ரக்கல் லுக் மற்றும் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் கலர் பேலட் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஸ்டெல்த் பிளாக், ராக்கி பேட்ஜ், டிசாட் சில்வர், டைமண்ட் ஒயிட், ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. ஆனால் 2024 மாடல் காரில் 2 விதமான கலர் ஆப்ஷனவ்கள் மட்டுமே உள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், வழங்கப்பட்டுள்ளது. கிரில் பகுதி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பரில் ஃபாக் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் சில முக்கிய மாற்றங்களை நீங்கள் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இதில் லெதர் சீட்டுகள் 7 இன்ச் ஆண்ட்ராய்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,யூஎஸ்பி சி சார்ஜிங் போர்ட், ஸ்டீயரிங் வீல் கண்ட்ரோல், ரிமோட் மீ, ரிமோட் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள்கள் உள்ளன.
இதில் இன்ஜின் மாற்றங்கள் எதுவும் இல்லை. இதில் 1.5 லி எம்ஹாக் 75 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 75 எச்பி பவரையும் 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கெண்டது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லேடர் ஃபிரேம் சேஸிஸில் இணணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறு வயது பெண் பொலிரோ காரை விரும்பியது ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதனால் பலர் இவரது பதிவை லைக் செய்து கருத்திட்டு வருகின்றனர். இது இளைஞர்கள் மத்தியில் மாறி வரும் மனநிலையை பிரதிபலிக்கிறது.


Click it and Unblock the Notifications









