ஏல உலக வரலாற்றையே புரட்டி போட்ட ஃபெர்ராரி கார்.. இத வாங்கினவரு முகேஷ் அம்பானிய விட தீவிர கார் காதலரா இருப்பாரோ

ஏல உலகத்தையே மிரள செய்யும் அளவிற்கு பழைய விண்டேஜ் கார் ஒன்று யாரும் எதிர்பார்த்திராத மிக மிக அதிக விலைக்கு ஏலம் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன கார்? எவ்வளவு தொகைக்கு அது ஏலம் போயிருக்கின்றது? இதுபோன்று சுவாரஷ்யமான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலகின் முன்னணி சூப்பர் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஃபெர்ராரி (Ferrari)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான 250 ஜிடிஓ (250 GTO)-வே ஏல உலகையே மிரட்டிவிடும் அளவிற்கு அதிக விலைக்கு ஏலம் போய் இருக்கின்றது. ஃபெர்ராரி 250 ஜிடிஓ வாகன உலகின் அரிய வகை கார் மாடலாக இந்த கார் பார்க்கப்படுகின்றது.

1962 ferrari 250 gto

உலகிலேயே ஒரு சிலரிடத்தில் மட்டுமே இந்த கார் பயன்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஓர் யூனிட்டே சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. அது ஓர் 1962 மாடல் ஃபெர்ராரி 250 ஜிடிஓ ஆகும். இது 51.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தற்போது ஏலம் போயிருக்கின்றது.

இது மிக மிக அதிக தொகை ஆகும். இதனால்தான் முந்தைய கார் ஏலங்களையே இந்த சம்பவம் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. சொல்லப்போனால், உலகின் அதிக விலைக்கு ஏலம்போன கார்களின் பட்டியலில் இந்த நிகழ்வு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. 135 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டு மெர்சிடிஸ் 300 எஸ்எல்ஆர் அன்லென்ஹாட் கூபே முதலாம் இடத்தில் உள்ளது.

1962 ferrari 250 gto engine

இந்த ஏல நிகழ்வு சென்ற 2022 ஆம் ஆண்டிலேயே அரங்கேறியது. இதன் இப்போதைய மதிப்பு 144 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே, இந்த ஆண்டை அலங்கரிக்கும் விதமாக அண்மையில் ஃபெர்ராரி 250 ஜிடிஓ-வுக்கான ஏல பணிகள் ஆர்எம் சோதேபிஸ் நிறுவனத்தின் வாயிலாக தொடங்கப்பட்டன.

இந்த கார் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகும் என பலரால் நம்பப்பட்டது. ஆனால், இறுதியில் 51.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அது இறுதிப் பெற்றது. இருப்பினும், இதன் ஏல நிகழ்வு மிகவும் கார-சாரமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

1962 ferrari 250 gto interior

ஃபெர்ராரி 250 ஜிடிஓ சூப்பர் காரில் 3765, 4 லிட்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 390 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த கார் பல்வேறு உலக போட்டிகளில் பங்கு பெற்று சாதனைப் படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், நர்பர்ஜிங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இரண்டாம் இடத்தையும், 24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ் போட்டியிலும் பங்குபெற்று சாதனை படைத்தது. இந்த காரை வெறும் சாதாரணமான வாகனமாக கருத முடியாது. டூரிங், விண்டேஜ் ரேசிங் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

1962 ferrari 250 gto rear profile

இதுதவிர, இந்த காரை டிஸ்பிளேவிற்காகவும் பயன்படுத்த முடியும். இதுபோன்று இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று இந்த கார் சாதனைப் படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சிறப்புமிக்க காரையே பெயரிடப்படாத ஓர் கார் ஆர்வலர் வாங்கி இருக்கின்றார். ஆனால், அவரின் பெயர் மற்றும் வேறு எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் சூப்பர் மற்றும் அரிய வகை விண்டேஜ் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஏல சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் 429 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கே இந்த கார் ஏலம் போயி இருக்கின்றது. இது உண்மையிலேயே மிக மிக அதிக தொகை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 17:05 [IST]
English summary
1962 ferrari 250 gto sold via suction 51 7 million dollers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X