டட்சன் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்!
டட்சன் பிராண்டில் முதல் ஹேட்ச்பேக் காரான கோ நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்னர் டட்சன் பிராண்டில் முதல் கார் வெளியிடப்பட்டது. 1986ல் டட்சன் பிராண்டில் கார் உற்பத்தி நிறுத்தப்படும் வரை, பல மில்லியன் கார்கள் டட் என்று அழைக்கப்பட்ட டட்சன் பிராண்டில் உலக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்று பட்ஜெட் கார்களுக்கான பிராண்டாக வெளிக்காட்டப்படும் டட்சன் பிராண்டு பாரம்பரியம் பெருமைமிக்க கார் பிராண்டுகளில் ஒன்று. அதன் ஃபேர்லேடி, ரோட்ஸ்டெர் மாடல்கள் அழகான டிசைனுக்கு பெயர்பெற்றவை. எனவே, டட்சன் பிராண்டில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு பாரம்பரிமிக்க பிராண்டையே தேர்வு செய்துள்ளதை எண்ணி பெருமைபட வேண்டிய விஷயம்.
சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஸ்காட் ஃபிஷர் என்பவர் தனது 1967ம் ஆண்டு டட்சன் ரோட்ஸ்டெர் காரில் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மொத்தம் 60,913 கிமீ தூரத்தை தனது டட்சன் ரோட்ஸ்டெர் விண்டேஜ் காரில் வலம் வந்துள்ளார். டட்சன் ரோட்ஸ்டெர் காரில் ஸ்காட் ஃபிஷரின் பயணத்தின் ஹைலைட்ஸ் அடங்கிய வீடியோ தொகுப்பை கீழே காணலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/aWsakWm8eTo" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications