25 ஆண்டுகள் பந்தம்.. பார்த்த உடனே கண் கலங்கிட்டாரு! இப்போவும் சூப்பரா ஓடும் திறனில் புல்லட்!
இந்தியர்கள் பலரின் விருப்பமான மோட்டார்சைக்கிளாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் மாடல்கள் இருக்கின்றன. இந்த நிறுவனம் ஏதோ நேற்றுதான் வாகன உற்பத்தியில் கால் தடம் பதித்தது என நினைத்துக் கொள்ள வேண்டாம். உலகின் மிகவும் பழைமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்களில் நம்முடைய ராயல் என்பீல்டும் ஒன்றாகும்.
பலர் இந்த நிறுவனத்தின் பைக் மாடலை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக பார்த்து வருவதைகூட நம்மால் பார்க்க முடிகின்றது. அந்த மாதிரியான ஓர் நபருக்கே பல ஆண்டுகள் கழித்து அவருடைய புல்லட் பைக் அவரின் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான அவர் கர்நாடகா மாநிலத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் ஆவார்.

அவர் பணியில் இருந்த நேரத்தில், அலுவலக வேலைக் காரணமாக கர்நாடகாவின் கிராமப்புறங்கள் பலவற்றிற்கு அவர் பயணிக்க வேண்டி இருந்தது. இந்த பயணங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவர் 1971 ஆம் ஆண்டில் ஓர் புல்லட்டை பைக்கை வாங்கி இருக்கின்றார்.
தன்னுடைய வங்கி பணியின் பெரும் பகுதியை இந்த பைக்கிலேயே அவர் கழித்தும் இருக்கின்றார். நாளடைவில் உயர் பதவி மற்றும் பணி இட மாறுதல்கள் அவருக்கு வந்திருக்கின்றன. அவ்வாறு, கடந்த 1991ஆம் ஆண்டில் அவரை மணிப்பாலுக்கு வங்கி நிர்வாகம் பணியிடம் மாறுதல் செய்திருக்கின்றது.

அந்த நேரத்திலேயே அவர் பிரீமியர் பத்மினி காரையும் வாங்கி இருக்கின்றார். இதுதவிர, அலுவலகம் தரப்பில் இருந்து எம்எம்540 மற்றும் அம்பாஸ்டர் கார் அவருக்கு அதிகாரப்பூர்வ வாகனமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அவர் ஆசை ஆசையாக வாங்கிய பைக்கை முழுமையாக கை விட வேண்டி இருந்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே மோட்டார்சைக்கிள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்ததைக் கண்டு அவருடன் சேர்ந்து பணிபுரியும் ஒருவர் தனக்கு அந்த பைக்கை விற்குமாறு கேட்டிருக்கின்றார். இந்த நிலையில், மீண்டும் பைக்கை விற்பனைச் செய்யும் எண்ணம் வந்தால், அந்த பைக்கை என்னிடமே விற்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அப்பைக் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

Source: Team-BHP காலங்கள் உருண்டோடின. இந்த சூழலில் கடந்த 1997ம் ஆண்டில் மீண்டும் அவர் பெங்களூருவில் வந்து செட்டில் ஆகி இருக்கின்றார். அப்போது பிரீமியம் பத்மினி மற்றும் சேத்தக் ஆகிய இரண்டு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். ஆகையால், புல்லட் பைக்கை அவர் மறந்தேவிட்டார் என கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே வங்கி ஊழியரின் மகனான அருண் என்பவருக்கு இந்த பைக் பற்றிய ஞாபகம் வந்திருக்கின்றது. மேலும், அந்த பைக்கையும் அவர் தேட தொடங்கி இருக்கின்றார். இந்த நிலையிலேயே பைக்கை விற்ற தந்தையின் ஊழியரை அருண் தொடர்புக் கொண்டிருக்கின்றார். அப்போது அவர் பைக் தொலைந்துபோய் பல ஆண்டுகள் ஆகின்றன என்பதை தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால், அதை அப்படியே விட அவருக்கு மனம் இல்லை. இந்த நிலையிலேயே பைக்குறித்து பலவழிகளில் தேட தொடங்கி இருக்கின்றார், அருண். இந்த நிலையிலேய ஆர்டிஓ ஏஜென்ட் ஒருவர் வாயிலாக புல்லட் பைக் வேறு ஒரு நபரின் பெயரில் பதியப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 2021 ஆம் ஆண்டில் அவர் அப்பைக்கிற்கான இன்சூரன்ஸை புதுப்பித்ததன் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் அவர்களுக்கு தெரிய வந்திருக்கின்றது.
மேலும், அவர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட்டபோது இந்த பைக்கை வாங்கியதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே நிகழ்ந்தவற்றை கூறி அவரிடம் இருந்து தன்னுடைய தந்தையின் பைக்கை அருண் பெற்று வந்திருக்கின்றார். இந்த பைக்கை சுமார் 25 ஆண்டுகள் கழித்து பார்த்ததனால் அவரின் தந்தை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில் அவர் கிளட்ச், கியர்பாக்ஸ், பிரேக் லிவர், ஃபூட் ரெஸ்ட் மற்றும் நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றை மட்டும் ரிப்பேர் செய்திருக்கின்றார். இதை மாற்றும் முன்னரும் அந்த பைக் நல்ல இயக்க நிலையில் இருந்ததாகவேக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அதை அவர்கள் புதியது போல் மாற்றி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பழயை வாகன காதலர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சற்று வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர். தன்னுடைய காணாமல் போன மோட்டார்சைக்கிளை அவர்கள் தேடி சென்று வாங்கி இருப்பது நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே எடுத்துச் செல்லும் வகையில் அமைந்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
