ஒரு தந்தைக்கு இதுக்கு மேல என்ன வேண்டும்!! 30 வருஷம் பழைய பைக் இது என சொன்னால் நம்ப முடியுதா?
குஜராத்தில் தந்தையின் முதல் பைக்கை அவரது மகன் பட்டி, டிங்கரிங் பார்த்து புதியதுபோல் மாற்றி அவருக்கு பரிசளித்துள்ளார். பார்ப்போரை கண்கலங்க வைத்த இந்த சம்பவத்தை பற்றியும், இந்த கதையில் ஹீரோவாக ஜொலிக்கும் அந்த பழைய பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் எதாவது ஒரு வாகனம் அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு பிணைப்புடன் இருக்கும். 1990ஆம் காலக்கட்டங்களில் அனைவரது வீடுகளிலும் கார்கள் இல்லை, ஆனால் குறைந்தது ஒரு பைக் இருந்தது. அந்த பைக்கை வீட்டின் குடும்ப தலைவர் பயன்படுத்துவார். தந்தையின் பைக்கை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு அந்த பைக் பெரிய பொக்கிஷம் போல் காட்சிதந்தது.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அந்த பைக்கை உரிமையாளர் விற்க முயன்றாலும், அவரது குழந்தைகள் அதனை தடுக்க பெரிதும் போராடுவதை 1980, 90ஆம் காலக்கட்டங்களில் பரவலாக பார்க்க முடிந்தது. அந்த காலக்கட்டத்தில் பயன்படுத்திய பைக்கை சிலர் பொக்கிஷம் போல் ஒரு ஓரத்தில் ஓரங்கட்டி வைத்துள்ளனர். மிகவும் சிலர் மட்டுமே அரிதாக 20, 30 வருடங்கள் பழமையான பைக்குகளை இப்போதும் பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு, ஓரங்கட்டப்பட்ட பழைய கவாஸாகி மோட்டார்சைக்கிளை அதன் உரிமையாளரின் மகன் ரீ-ஸ்டோர், அதாவது முழுவதுமாக பட்டி, டிங்கரிங் பார்த்து, புதியதுபோல் மாற்றி மீண்டும் பரிசாக அவரது தந்தைக்கு கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக துருப்பிடித்து ஒரு ஓரத்தில் நின்றிருந்த பைக்கை மீண்டும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் பார்த்ததும், அவரது தந்தைக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

இந்த சம்பவத்தில், ரீ-ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பது கவாஸாகி 4எஸ் சாம்பியன் பைக் ஆகும். இந்த பைக்கில் கிட்டத்தட்ட அனைத்தையும் புதியதாக மாற்றியுள்ளனர். ஏனெனில், பைக் துருப்பிடித்து இருந்தது மட்டுமின்றி, பைக்கில் சில பாகங்களும் இல்லாமல் இருந்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள பதிவின்படி, பைக்கை ரீ-ஸ்டோர் செய்தவரின் தந்தையின் முதல் இதுவாகும்.
கல்லூரிகளுக்கு அவரது தந்தை இந்த கவாஸாகி பைக்கில்தான் சென்று வந்துள்ளார். தற்போது அந்த பைக்கை மீண்டும் ஷோரூம் கண்டிஷனில் பார்த்ததும், என்ன செய்வது என்றே தெரியாமல் ஒரு நிமிடம் ஷாக்காகிய அவரது தந்தை, பின்னர் மகனை கட்டி தழுவி தனது பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். பின்னர், ரீ-ஸ்டோர் செய்யப்பட்ட பைக்கில் அப்பாவையும், அம்மாவையும் ஜாலியாக ஒரு ரைடு சென்றுவர வைத்துள்ளார் இந்த நபர்.

இந்த கவாஸாகி 4எஸ் சாம்பியன் பைக் தொடர்பான படங்கள் யாகின் சாப்ரியா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதேபோன்று மேலும் சில கிளாசிக் பைக்குகளின் படங்களையும் காணலாம். ஏனெனில், யாகின் சாப்ரியா ஆனது கிளாசிக் பைக்குகளை ரீ-ஸ்டோர் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற மெக்கானிக் நிறுவனம் ஆகும்.
கவாஸாகி 4எஸ் சாம்பியன் மோட்டார்சைக்கிளை பொறுத்தவரையில், இது 1990ஆம் காலக்கட்டத்தில் இந்தியாவில் பிரபலமாக இருந்த பைக்குகளுள் ஒன்றாகும். பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து இந்த பைக்கை கவாஸாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கியது. குழாய் ஃப்ரேமில் உருவாக்கப்பட்ட இது, அந்த சமயத்தில் எடை குறைவான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக இருந்தது. இதனால், நகர்புற சாலைகளில் ஹேண்டில் செய்வது எளியதாக இருந்த காரணத்தினாலேயே பலரும் இந்த கவாஸாகி பைக்கை வாங்கினர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளம் வயதில் பயன்படுத்திய பைக்கை நீண்ட வருடங்கள் கழித்து பார்த்தால், நிச்சயமாக எவரொருவருக்கும் கண்ணீர் வந்துவிடும். இவ்வாறான பழமையான பைக்குகளை ரீ-ஸ்டோர் செய்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவற்றிற்கான பாகங்களை இப்போது பெறுவது மிகவும் சவாலான காரியம் ஆகும். ஏனெனில், பைக்கை உருவாக்கிய நிறுவனம் எப்போதோ பார்ட்ஸை உருவாக்குவதை நிறுத்தி இருக்கும்.


Click it and Unblock the Notifications









