2,500 கிமீ தூரத்தை 40 மணிநேரத்தில் பைக்கில் கடந்த கோவை கல்லூரி மாணவர்!

By Saravana

கோயம்பத்தூர்: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், 2,500 கிமீ தூரத்திற்கு மோட்டார்சைக்கிளில் பிரச்சார பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் துளசிமணி.

இவர் கோவையிலுள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக பயணத் திட்டத்தை வகுத்தார். அதன்படி, கடந்த 1ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர், ஜூன் 3ந் தேதி உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை அடைந்தார்.

பைக் பயணம்

மொத்தம் 2,511 கிமீ தூரத்தை 40 மணிநேரத்தில் அவர் மோட்டார்சைக்கிளில் கடந்தார். தனது பயணத்தின்போது வழியெங்கும் சாலை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்து, சாலை விழிப்புணர்வு பற்றி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அவரை டெல்லி தமிழ் சங்கம் பாராட்டியுள்ளது. அதேபோன்று, கோயம்பத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதனும் துளசிமணியை கவுரவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சார்பிலும் துளசிமணிக்கு பாராட்டுகள்!!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A local engineering college student has travelled to Agra from Kanyakumari covering more than 2,500 KM in 40 hours by motorcycle, to create awareness on road safety. S Thulasimani of Karpagam Engineering College started his journey on June 1 and reached Agra on June 3, covering 2,511 km, a release from the Intelligent wing of the police said today.
Story first published: Monday, June 15, 2015, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X