ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக காவல் துறை தரப்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

இதுதவிர சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகளும், காவல் துறையும் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை அபராதம் உள்ளிட்ட வழிகளின் மூலம் போலீசார் தண்டித்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

இந்த சூழலில் விஜயவாடா நகரில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவான போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாதது தொடர்பாகதான் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை விஜயவாடா போலீசார் பதிவு செய்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

இதன்படி கடந்த ஜனவரியில் இருந்து ஹெல்மெட் அணியாதது தொடர்பாக மொத்தம் 2.80 லட்சம் இ-செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் 40 சதவீதம் பேர் மட்டுமே அபராத தொகைகளை முறையாக செலுத்தியுள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக அம்மாநில அரசு இதுவரை எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

எனவே தற்போதைய நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இருந்தபோதும் தற்போது வரை, ஹெல்மெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 1.16 லட்சம் பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 11 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

பதிவான வழக்குகளின் எண்ணிக்கையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட டிரான்ஸ்போர்ட் சேவை வாகன டிரைவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக 18,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 62 சதவீத ஆட்டோ டிரைவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தியுள்ளனர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

அதே சமயம் மூன்றாவது இடத்தை நம்பர் பிளேட் விதிமுறை மீறல்கள் தொடர்பான வழக்குகள் பிடித்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் ட்ரிபிள் ரைடிங் உள்ளது. ஆனால் ட்ரிபிள் ரைடிங் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தவில்லை. வெறும் 41 சதவீதம் பேர் மட்டுமே அபராதத்தை செலுத்தியுள்ளனர்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?

அதே சமயம் நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்தி விதிமீறலில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் அபராத தொகையை செலுத்தியுள்ளனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அபராத தொகைகளை செலுத்திய பிறகே விடுவிக்கப்படுகின்றன. எனவே இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தி விடுகின்றனர்'' என்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
2.80 Lakh Bike Riders Booked For Not Wearing Helmets In Vijayawada. Read in Tamil
Story first published: Saturday, October 19, 2019, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X