விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே, உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் நேற்று (மே 3) நடைபெற்ற கொடூரமான சாலை விபத்து ஒன்று, கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. சென்னை பாடி மேம்பாலத்திற்கு கீழே அன்னை சத்யா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு சர்வீஸ் சாலை ஒன்று செல்கிறது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இந்த சர்வீஸ் சாலையில், நேற்று காலை 9 மணியளவில், டொயோட்டா இன்னோவா கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையில் அங்கும், இங்கும் தாறுமாறாக ஓட தொடங்கியது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு உண்டானது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

அந்த நேரத்தில் ஆதிலட்சுமி என்பவர் (50), சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர். இதனிடையே தாறுமாறாக ஓடிய டொயோட்டா இன்னோவா கார், ஆதிலட்சுமி மீது பயங்கரமாக மோதியது. இதனால் கீழே விழுந்த ஆதிலட்சுமி படுகாயம் அடைந்தார்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய டொயோட்டா இன்னோவா காரை, அனைவரும் சேர்ந்து விரட்டி சென்றனர். பொதுமக்கள் ஒன்று திரண்டு விரட்டியதால், விபத்திற்கு காரணமான அந்த கார் முன்பை காட்டிலும் இன்னும் வேகம் எடுத்தது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

அந்த நேரத்தில் சரசா (60) என்ற பெண்ணும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவரும் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர்தான். அப்போது இன்னும் தாறுமாறாக ஓடிய கார், சரசாவின் மீதும் மோதியது. இதில் துரதிருஷ்டவசமாக நிகழ்விடத்திலேயே சரசா பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இதனால் கூடுதல் அதிர்ச்சிக்கு ஆளான பொதுமக்கள் காரை பிடித்தே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் துரத்தினர். ஆனால் அந்த கார் நிற்பதாக மட்டும் இல்லை. தொடர்ந்து தாறுமாறாக ஓடி கொண்டேதான் இருந்தது. அந்த நேரத்தில்தான் இன்னும் ஒரு விபரீதம் அரங்கேறியது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

நிற்காமல் ஓடி கொண்டே இருந்த அந்த டொயோட்டா இன்னோவா கார், மூன்றாவதாக மோகன் (52) என்பவர் மீது மோதியது. இவரும் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர்தான். இதனால் மோகனும் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். அத்துடன் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

அந்த நேரத்தில் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மீது மோதி ஒரு வழியாக கார் நின்றது. அப்போது காரை விரட்டி சென்ற பொதுமக்களும் சரியாக அங்கு வந்து சேர்ந்து விட்டனர். பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால், காரில் இருந்தவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

ஆனால் பொதுமக்களை மீறி அந்த நபரால் அங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இந்த விபத்தால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அப்போது விபத்திற்கு காரணமான நபர், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இதன் காரணமாகதான் அவர் காரை தறிகெட்டு ஓட்டி கோர விபத்தை ஏற்படுத்தியிருந்தார். முன்னதாக விபத்தில் படுகாயம் அடைந்திருந்த ஆதிலட்சுமி மற்றும் மோகன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

ஆனால் அவர்கள் இருவரில், மோகன் துரதிருஷ்டவசமாக உயிரிழந்து விட்டார். அதே சமயம் ஆதிலட்சுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டியதால், 2 அப்பாவி பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இந்த சூழலில், காண்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இந்த கோர விபத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சி பதிவாகியிருந்தது. முகிலன் சந்திரகுமார் என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த விபத்து எவ்வளவு கோரமானது என்பதை இந்த வீடியோ காட்சி நமக்கு உணர்த்துகிறது. முன்னதாக விபத்திற்கு காரணமான நபரை, சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதன்பின் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இதில், அவர் பெயர் தேவேந்திரன் (54) என்பதும், வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் திமுக பிரமுகர் ஆவார். தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான திமுக பிரமுகர்கள் பலர் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இந்த சூழலில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக தேவேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய சாலைகள் நாளுக்கு நாள் அபாயகரமானவையாக மாறி வருகின்றன.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

குடிபோதையில் வாகனங்களை இயக்குவவே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. குடி போதையில் வாகனங்களை இயக்கும் நபர்களால், எவ்வித தவறும் செய்யாத அப்பாவி பாதசாரிகளும், இதர வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

பொதுவாக இந்தியாவில் மது அருந்துவதற்கு என குறிப்பிட்ட வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை எட்டாதவர்கள் மது அருந்துவது சட்ட விரோதம். ஆனால் இந்தியாவில் மது அருந்துவதற்கான வயது வரம்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

ஒரு சில மாநிலங்களில் 18 வயதை எட்டியவர்கள் கூட மது அருந்தலாம். ஆனால் வேறு சில மாநிலங்களில் மது அருந்துவதற்கான வயது வரம்பு 21ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்னும் சில மாநிலங்களில் 25 வயதை எட்டியவர்கள்தான் மது அருந்த முடியும்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இந்த விதிமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்றால், அதற்கு உறுதியான பதில் எதுவும் இல்லை. ஆனால் சட்டம் இவ்வாறுதான் சொல்கிறது. இதுதவிர ரத்தத்தில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் இருப்பதையும் இந்திய சட்ட திட்டங்கள் அனுமதிக்கின்றன.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இதன்படி 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 0.03 சதவீதம் ஆல்கஹால் இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 30 மில்லி கிராம் ஆல்கஹால் இருக்கலாம். இந்த அளவு ஆல்கஹால் உடன் வாகனங்களை இயக்கினால் சட்டப்படி அது குற்றமாக கருதப்படாது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

ஆனால் அரசு நிர்ணயித்துள்ள இந்த ஆல்கஹால் அளவை கடந்தால், அது சட்ட விரோதமாக கருதப்படும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிய இந்தியாவில் Breathalyzer சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ரத்தத்தில் அதிக அளவு ஆல்கஹால் கலந்திருப்பது Breathalyzer சோதனையில் உறுதி செய்யப்பட்டால், 2,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அல்லது 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

அல்லது இந்த 2 தண்டனைகளையும் சேர்த்தே அனுபவிக்க நேரிடலாம். இரண்டாவது முறையும் இதே தவறை செய்தால் (முதல் முறை செய்ததில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாக), 3,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். அத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

மேற்கண்ட தண்டனைகள் அனைத்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்கானது மட்டும்தான். ஒரு வேளை நீங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதன் காரணமாக யாராவது பாதிக்கப்பட்டால், தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இதன்படி நீங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டி யாரேனும் பாதிக்கப்பட்டால், உங்கள் மீது ஐபிசி செக்ஸன் 308ன் கீழ் வழக்கு தொடரப்படும். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த குற்றத்திற்கு பெயில் வழங்கப்படாது.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

அத்துடன் உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியது வரும். ஒருவேளை விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்து விட்டால், ஐபிசி செக்ஸன் 304 (II)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி

இந்த குற்றத்திற்காக நீங்கள் 10 ஆண்டுகளை சிறை கம்பிகளுக்கு பின்னால் கழிக்க வேண்டியது வரலாம். எனவே நீங்கள் குடிபோதையில் இருந்தால், டாக்ஸி பிடித்து வீடு போய் சேர்வதே சிறந்தது. அல்லது மது அருந்தாமல் உள்ள உங்கள் நண்பர் யாரையேனும் வாகனத்தை இயக்குமாறு உதவி கேட்கலாம். இதை காட்டிலம் மது அருந்தாமல் இருப்பது இன்னும் நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
2 Killed In Car Accident In Chennai - DMK Man Arrested: Drink And Drive Laws, Fines Punishments. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X