உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
இந்தியா முழுவதும் ஹோலி (Holi) பண்டிகை சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக ஹோலி கொண்டாட்டங்களின்போது, வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் நொய்டா (Noida) நகரில் நடைபெற்றுள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தின்போது, ஸ்கூட்டர் ஒன்றில் 2 இளம்பெண்கள் ரொமான்ஸ் (Romance) செய்துள்ளனர். ஆண் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, அந்த 2 இளம்பெண்களும் பின்னால் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்தபடி பயணித்துள்ளனர். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.

இந்த இளம்பெண்களின் மொத்தம் 2 வைரல் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன. இதில் ஒரு வைரல் வீடியோவில் அவர்கள் ரொமான்ஸ் செய்வதை பார்க்க முடிகிறது. பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்க, அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர். மற்றொரு வீடியோவில் நாம் பார்ப்பதும் அதே பெண்கள்தான்.
ஆனால் 2வது வீடியோவில் நாம் பார்ப்பது ரொமான்ஸ் அல்ல. அது ஸ்டண்ட். முதல் வீடியோவில் நாம் பார்த்த இளம்பெண்களில் ஒருவர் (கருப்பு உடை அணிந்தவர்) ஸ்கூட்டரில் நின்று கொண்டே பயணம் செய்கிறார். இம்முறை ஸ்கூட்டரை ஓட்டுவது வேறு ஒரு ஆண். ஆனால் அந்த இளம்பெண்ணால் நீண்ட நேரத்திற்கு நின்று கொண்டே பயணம் செய்ய முடியவில்லை.

சிறிது தூரத்திலேயே அவர் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. இந்த 2 வீடியோக்களிலும் நாம் பார்க்கும் காட்சிகள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல. ஏனெனில் பொது சாலைகளில் அவர்கள் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். அத்துடன் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அவர்கள் அணியவில்லை.
எனவே காவல் துறை அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். டூவீலரை ஆபத்தான முறையில் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியது மற்றும் பொது சாலைகளில் உரிய அனுமதி பெறாமல் ஸ்டண்ட் செய்தது போன்ற பல்வேறு காரணங்களுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இவர்கள் அனைவரும் வைரல் வீடியோக்கள் மூலம் சமூக வலை தளங்களில் பிரபலமாக முயற்சி செய்து வருபவர்கள் போல் தெரிகிறது. சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் தற்போது இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் இது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. நல்ல விஷயங்கள் மூலம் சமூக வலை தளங்களில் பிரபலமானால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் இது போன்ற செயல்கள் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அத்துடன் இது போன்ற செயல்பாடுகள் சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








