அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

300 விலை உயர்ந்த வாகனங்களை திருடிய 2 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

கார்களில் தற்போது பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. ஆனால் அதற்கேற்ப கொள்ளையர்களும் வேகமாக அப்டேட் ஆகி கொண்டுள்ளனர். இதனால் கார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்த சூழலில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 கொள்ளையர்களை டெல்லி காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இவர்கள் 2 பேரும் அதிகம் படித்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இவர்களில் ஒருவர் பிஹெச்டி முடித்தவர் ஆவார். மற்றொருவர் டெல்லி பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மணிப்பூரில் இருந்து 12 விலை உயர்ந்த கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

கொள்ளையர்களில் ஒருவரின் பெயர் மெஹ்டாப் என்பது தெரியவந்துள்ளது. இவர்தான் பிஹெச்டி படித்தவர் ஆவார். மற்றொருவரின் பெயர் டட்ரிஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர் டெல்லி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தொடர்ந்து விலை உயர்ந்த கார்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதன் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர். கார்கள் மட்டுமல்லாது விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களையும் அவர்கள் திருடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக மணிப்பூரில் இருந்து விமானத்தில் வருவதை அவர்கள் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

திருடப்பட்ட வாகனங்களை மணிப்பூருக்கு அவர்களே ஓட்டி செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. சுமாராக 300 வாகனங்களை இந்த கும்பல் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. திருடப்பட்ட வாகனங்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து மணிப்பூரில் அவர்கள் விற்பனை செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மணிப்பூரில் இயங்கி வரும் கிளர்ச்சியாளர்களுக்கும் கூட அவர்கள் வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் இந்த வாகன திருட்டு கும்பலில் இரண்டு பேர் மட்டுமே தற்போது பிடிபட்டுள்ளனர்.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க மணிப்பூரில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்காக மணிப்பூர் காவல் துறையினருடன், டெல்லி காவல் துறையினர் கூட்டணி அமைத்துள்ளனர். என்னென்ன கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அத்தனையும் விலை உயர்ந்தவை... 300 வாகனங்களை திருடிய 2 பேர் கைது... யார்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஆனால் காவல் துறையினர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், டொயோட்டா பார்ச்சூனர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களை பார்க்க முடிகிறது. இவை அனைத்துமே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
2 Vehicle Thieves Arrested: Fortuner, Creta, Scorpio, Vitara Brezza SUVs Recovered. Read in Tamil
Story first published: Friday, July 2, 2021, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X