சேலையில் பைக் ரைடிங்... இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த இளம்பெண்கள்!! வீடியோ ரிப்பீட் மோடில் போகுது!

சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும், கமெண்ட்ஸையும் பெறுவதற்காக நிறைய பேர் விசித்திரமான செயல்கள் செய்வதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், இரு இளம்பெண்கள் சேலையில் பைக் ஓட்டி அசத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் செய்த இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்படி என்ன செய்தார்கள்? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம் இந்தியாவில் பெண்கள் கார் & ஆட்டோ ரிக்‌ஷாக்களை ஓட்டுவது கடந்த 10 வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சிக் கண்டுள்ளது. இருப்பினும், 2-வீலர்கள் என்று பார்த்தால், ஸ்கூட்டரை மட்டுமே ஓட்டுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், இளம்பெண்கள் பைக் ஓட்டுவதை எப்போதாவது அரிதாக பார்க்க முடியும்.

young women rides dirt bikes

ஆனால், வெளிநாடுகளில் பெண்கள் பரவலாக பைக் ஓட்டுகின்றனர். அந்த வகையில், நேபாளத்தில் இரு இளம்பெண்கள் பைக் ஓட்டி அசத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று நேபாளத்தை தாண்டி இந்தியாவிலும் வைரலாகி வருகிறது. சேலை அணிந்துக் கொண்டு பைக் ஓட்டுவது மிகவும் சிரமம். இதன் காரணமாகவே, சேலையை பாரம்பரியமாக கொண்டுள்ள நம் இந்தியாவில் பெண்கள் பலர் பைக் ஓட்டுவது இல்லை.

ஆனால், நேபாளத்தில் இரு இளம்பெண்கள் சேலையில் அசால்ட்டாக பைக் ஓட்டியுள்ளனர். இதற்காகவே சேலை உடன் சேர்த்து பேண்ட் அணிந்துள்ளனர். சேலையில் பைக் ஓட்டியதை விட ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இவர்கள் ஓட்டியது டெர்ட் பைக்ஸ் (Dirt Bikes) எனப்படும் சகதி பைக்குகள் ஆகும். இந்தியாவில் டெர்ட் பைக்குகள் பொது சாலையில் ஓட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

young women rides dirt bikes

அதிக டார்க் திறனை விரைவாக வழங்கும் திறன் கொண்டவையாக இருப்பதால், சாலை பாதுகாப்பு கருதி டெர்ட் பைக்குகளை பொது சாலையில் ஓட்ட இந்திய மோட்டார் வாகன சட்டம் தடை விதிக்கிறது. டெர்ட் பைக்கை ஓட்ட விரும்புகிறீர்கள் என்றால், மூடிய வளாகத்திற்குள் தனிப்பட்ட இடத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும். நேபாளத்திலும் டெர்ட் பைக்குகளுக்கு தடை உள்ளது.

ஆனால், அதையும் தாண்டி இந்த இளம்பெண்கள் இத்தகைய பைக்கை ஓட்டியுள்ளனர். இதற்காக இவர்கள் மீது அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில், இந்த இளம்பெண்கள் ஓட்டியது ஹோண்டாவின் சி.ஆர்.எஃப் டெர்ட் பைக்குகளை ஆகும். இந்த பைக்குகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ஜப்பானில் டெர்ட் பைக் சாகசங்களில் ஈடுப்படும் பெரும்பாலானோர் சி.ஆர்.எஃப் பைக்குகளையே வாங்குகின்றனர்.

young women rides dirt bikes

இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள இளம்பெண்கள் இருவரும் சேலையை அணிந்திருக்கவில்லை. ஒருவர் அணிந்திருப்பது சேலை, மற்றொருவர் அணிந்திருப்பது சாண்டல்ஸ் என கூறப்படுகிறது. டெர்ட் பைக்குகளை சாதாரணமாக ஓட்டுவதே கடினம். இதில் இந்த இளம்பெண்கள் இவ்வாறான உடையில் ஓட்டி அசத்தியுள்ளனர். ஆகையால், நிச்சயமாக இவர்கள் டெர்ட் பைக்குகளை ஓட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதே சந்தேகத்துடன், சம்பந்தப்பட்ட பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பார்த்ததில், அவர்களது இன்ஸ்டாகிராம் டைம்லைனில் டெர்ட் பைக் சம்பந்தமான நிறைய பதிவுகளை பார்க்க முடிகிறது. சில பதிவுகளில், அவர்கள் டெர்ட் பைக்கை ஓட்டும் படங்களும், வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. சில வீடியோக்களில் அவர்கள் பைக் வீலிங் செய்யும் காட்சிகளும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சேலையில் டெர்ட் பைக் ஓட்டி, ஓர் அசாத்தியமான காரியத்தை இந்த இளம்பெண்கள் செய்துள்ளனர். ஆனால், அதற்காக இவர்கள் செய்ததை நாம் ஊக்கப்படுத்த கூடாது. ஏனெனில், டெர்ட் பைக்கை பொது சாலையில் ஓட்டுவது முதலில் தவறு. இரண்டாவது, சேலையில் பைக் ஓட்டுவது ஆபத்தானது ஆகும். சேலை பைக்கின் ஏதேனும் ஒரு பகுதியில் சிக்கிக் கொண்டால், பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 17:11 [IST]
English summary
2 young women rides dirt bikes in saree in nepal viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X