20 குழந்தைகளை சுமந்து வந்த டாடா இண்டிகா... ஓர் 'அடடே' வீடியோ!!
புதிய காரை தேர்வு செய்யும்போது, அந்த காரின் இடவசதி குறித்து அலசி ஆராய்ந்து பின்னர்தான் முடிவுக்கு வருவோம். அதிலும், குட்டிக் கார்கள் ஒன்றிற்கு இரண்டு மூன்று முறை அந்த காரின் இடவசதியை பார்த்த பின்னரே பலர் முடிவுக்கு வருகின்றனர்.
அந்த விதத்தில், இடவசதியில் டாடாவின் ஹேட்ச்பேக் கார்கள் எப்போதுமே முன்னிலை வகிக்கின்றன. பொதுவாக ஹேட்ச்பேக் கார்களில் 4 பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும் என்பதே உண்மை. ஆனால், ஒல்லியான தேகம் கொண்டவர்கள் பின்வரிசையில் மூன்று பேர் என 5 பேர் வரை செல்லாம். ஆனால், டாடா இண்டிகா கார் எப்போது சிறப்பான இடவசதியை அளிக்கும் என்பதை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.

ஆச்சரியம்
அமெரிக்காவை சேர்ந்த ஆன்ட்ரூ ஸிம்மர்ன் என்பவர் சமீபத்தில் ஹைதராபாத்திற்கு தனது டிவி நிகழ்ச்சிக்காக ஷூட்டிங் நடத்த வந்திருந்தார். கோல்கோண்டா கோட்டையில் அவர் ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

இண்டிகா கார்
அப்போது, அங்கு வந்த டாடா இண்டிகா கார் ஒன்று அவரை ஆச்சரியப்படுத்தியது. காரின் அழகை கண்டு மயங்கிவிட்டாரா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.

குட்டீஸ் பட்டாளம்
அந்த டாடா இண்டிகா காரிலிருந்து ஐந்தல்ல, பத்தல்ல, 20 குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறங்கியது. இதை பார்த்தவுடன் ஆன்ட்ரூவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

வீடியோவாக பதிவு
அந்த குட்டீஸ் பட்டாளம் காரிலிருந்து இறங்குவதை பார்த்து வியந்த ஆன்ட்ரூ, உடனே தன்னிடம் இருந்த மொபைல்போன் கேமராவில், அப்படியே வீடியோவாக பதிவு செய்தார். கோல்கோண்டா கோட்டையை சுற்றி பார்க்க அந்த குட்டீஸ் பட்டாளம் வந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம்
அந்த இண்டிகா காரிலிருந்து 20 குழந்தைகள் வந்து இறங்குவதை வீடியோவாக பதிவு செய்து ஃபேஸ்புக்கில் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார்.

இந்தியாவில்தான் மட்டும்தான்
"இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே, 20 குழந்தைகளும், ஒரு காரும்" என்ற தலைப்புடன் அவர் இந்த வீடியோவை வெளியிட்டார்.

வைரலாகிய வீடியோ
இந்த வீடியோ இதுவரை 9 மில்லியன் பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும், தொடர்ந்து இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ
ஆன்ட்ரூவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும், அந்த வீடியோவை காண க்ளக் செய்க.


Click it and Unblock the Notifications








