எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

மஹாரஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள பிம்ப்ரி சவான்த் (Pimpri Chinchwad) காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன்படி அதிக சத்தம் எழுப்பும் இரு சக்கர வாகனங்களின் சைலென்சர்களுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதால் அந்த வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைககள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

கடந்த 6 நாட்களில் மட்டும் இதுபோன்ற 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''நாங்கள் மாடிபிகேஷன் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் சைலென்சர்களுக்கு எதிராக அபராதம் மட்டும் விதிக்கவில்லை.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

அபராதம் விதிப்பதுடன், அந்த இரு சக்கர வாகனங்களின் சைலென்சர்களையும் நாங்கள் பறிமுதல் செய்கிறோம். எனவே அவர்களால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது'' என்றனர். குடியிருப்பு பகுதிகளிலும், பொதுவான சாலைகளிலும் இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்தி, மக்களுக்கும், மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''இரு சக்கர வாகனங்களில் சைலென்சர்களில் மாடிஃபிகேஷன் செய்து தரக்கூடாது என மெக்கானிக் ஷாப்கள், கராஜ்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக அதனை செய்து கொண்டே உள்ளனர். எனவே மெக்கானிக் ஷாப்கள் மற்றும் கராஜ் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றனர். எனவே வரும் காலங்களில் இதுபோன்ற இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என நாம் எதிர்பார்க்கலாம்.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ''மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களால் எங்களுக்கு ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்கள் அதிக ஒலி எழுப்பி கொண்டு செல்வதால், எங்கள் வீட்டில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டுள்ளன.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

எனவே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றனர். கடந்த காலங்களில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு எதிராக காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதாவது பறிமுதல் செய்யப்படும் சைலென்சர்களை பொக்லைன் கொண்டு அழிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

இருப்பினும் இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர். குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை பயன்படுத்துபவர்களை இத்தகைய நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் மாடிஃபிகேஷன் செய்வதற்கு மிகவும் ஏற்றவையாக இருக்கின்றன. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை குறி வைத்தும் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து விட்டனர். தொடர்ச்சியாக அவர்கள் எடுத்து கொண்டும்தான் இருக்கின்றனர்.

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க... பைக் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை... ஏன் தெரியுமா?

ஆனால் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காவல் துறையினரின் நடவடிக்கைககள் கடுமையாகி கொண்டுள்ளதே இதற்கு மிக முக்கியமான காரணம். உங்கள் வாகனத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்கள் பொருத்தப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள். இது உங்களை காவல் துறையினரின் அபராதங்களில் இருந்து பாதுகாக்கும். அத்துடன் நீங்கள் சுற்றுச்சூழலுக்கும், மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கும் நன்மை பயப்பீர்கள் ஆவீர்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
200 bikers fined by police here is the reason why
Story first published: Wednesday, December 29, 2021, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X