பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..

பைக்கின் பின்னால், 'சும்மா' உட்கார்ந்து கொண்டு பயணித்த 2 ஆயிரம் பேருக்கு, போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

பைக்கின் பின்னால், 'சும்மா' உட்கார்ந்து கொண்டு பயணித்த 2 ஆயிரம் பேருக்கு, போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான், சாலை விபத்துக்களினால் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

கார் போன்ற இதர வாகனங்களில் பயணம் செய்பவர்களுடன் ஒப்பிடுகையில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு, ஹெல்மெட்டை தவிர சொல்லிக்கொள்ளும் படி பெரிய அளவிலான பாதுகாப்பு அம்சங்கள் கிடையாது.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

எனவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவருடன் சேர்த்து, பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

நமது நாட்டின் அனைத்து பகுதிகளிலும், இந்த உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதே இல்லை. முடி கொட்டுகிறது, வியர்க்கிறது என்பது போன்ற காரணங்களை கூறி, ஹெல்மெட் அணிய அவர்கள் மறுத்து விடுகின்றனர்.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க முடியவில்லை. எனவே ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இந்த சூழலில், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் என எந்த வகையான இரு சக்கர வாகனத்தில் பயணித்தாலும், இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் சேர்த்து, பின்னால் அமர்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்தாலும், இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு, போலீசாருக்கு உத்தரவு போட்டது. விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

கடந்த 10ம் தேதியே (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. எனினும் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியவில்லை.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

எனவே உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனின் பல்வேறு பகுதிகளில், கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும், போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சிபியூ (CPU) எனப்படும் சிட்டி பேட்ரல் யூனிட்டுடன் இணைந்து இந்த வாகன தணிக்கை மேற்கொள்ளபட்டது.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

இதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டும், இரு சக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணம் செய்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு போலீசார் அபராதம் விதித்து, அதற்கான ரசீதை வழங்கினர்.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

மோட்டார் வாகன சட்டம் 1988ன் செக்ஸன் 129ன் படி அவர்கள் தண்டிக்கப்பட்டனர். இதுதவிர 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

பைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு தண்டனை.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

தமிழகத்திலும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் சிலரே, ஹெல்மெட் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Monday, August 13, 2018, 18:26 [IST]
English summary
2,000 Pillion Riders Fined By Dehradun Police-Here is Why. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+