21 வருஷம் கழிச்சும் கல்லு மாதிரி நிற்கும் டாடா கார்!! ஷோரூமில் எடுத்த மாதிரியே இப்போதும் ரன்னிங்கில்...

21 வருடங்கள் பழமையான டாடா இண்டிகா (Tata Indica) கார் ஒன்று இப்போதும் அதே புத்துணர்ச்சியான தோற்றத்தில் அதன் உரிமையாளரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எந்த ஊரில் இந்த 21 வருடங்கள் பழைய டாடா இண்டிகா பயன்படுத்தப்பட்டு வருகிறது? அதன் தற்போதைய நிலை என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகவும் தரமான கார்களுள் ஒன்று டாடா இண்டிகா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால்தான், கார்கள் உற்பத்தியில் இறங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலாவதாக களமிறக்கிய மாடல் இண்டிகா ஆகும். 1998இல் அறிமுகம் செய்யப்பட்ட டாடா இண்டிகா காரை அந்த சமயத்தில் பலரும் போட்டிப் போட்டு வாங்கினர். ஆனால், 25 வருடங்களாகி விட்டதால் பெரும்பாலானோரிடத்தில் டாடா இண்டிகா கார் இப்போது இல்லை.

2003 tata indica still running

சில வருடங்களுக்கு முன்னரே பலர் தங்களது இண்டிகா காரை ஸ்க்ராப் செய்துவிட்டனர். சிலரிடத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இப்போதும் இண்டிகா கார் உள்ளது. மிகவும் சிலரிடத்தில் மட்டுமே டாடா இண்டிகா கார் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. ஆதலால், ஒரு காலத்தில் சாலையெங்கிலும் தென்பட்ட டாடா இண்டிகா இப்போது ஓர் அரிதான காராக மாறிவிட்டது. அவ்வாறான ஒரு அரிதான இண்டிகா காரை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இந்த டாடா இண்டிகா கார் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 2003ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட டாடா இண்டிகா வி2 கார் ஆகும். கடந்த 21 வருடங்களில் 1.4 லட்ச கிமீ தொலைவிற்கு இந்த இண்டிகா கார் ஓடி உள்ளது. 21 வருடங்களில் 1.4 லட்ச கிமீ என்பது கொஞ்சம் குறைவாக தோன்றலாம், ஆனால் இதன் காரணமாகவே இப்போதும் இந்த இண்டிகா கார் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

2003 tata indica still running

இன்னும் சொல்லப் போனால், டாடா நிறுவனம் தொழிற்சாலையில் அடித்து கொடுத்த இளம் நீல நிற பெயிண்ட் மற்றும் க்ளட்ச் பிளேட் தான் இப்போதும் இந்த இண்டிகா காரில் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த 21 வருடங்களில் இந்த கார் அதன் உரிமையாளருக்கு பெரியதாக எந்த செலவையும் வைக்கவில்லை. ஒருமுறை, 3வது மாடியில் இருந்து ஒரு செங்கல் தவறி இந்த காரின் மீது விழுந்துள்ளது. இந்த 21 வருடங்களில் அதற்கு தான் கொஞ்சம் அதிகமாக செலவு செய்ததாக இந்த காரின் ஓனர் தெரிவித்துள்ளார்.

இந்த இண்டிகா கார் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இந்த காரின் உரிமையாளரை காணலாம். ஆனால், இவர் இந்த காரை வாங்கியவர் கிடையாது. 2003ஆம் ஆண்டில் இவரது குடும்பத்தில் ஒருவர் இதனை வாங்கினார். சில வருடங்கள் பயன்படுத்திய பின்னர், இந்த இண்டிகா காரை டாக்ஸிக்கு பயன்படுத்த இந்த குடும்பத்தினர் திட்டமிட்டனர். ஆனால், இப்போது வரையில் இவர்களது குடும்ப போக்குவரத்துக்காக மட்டுமே இந்த கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2003 tata indica still running

2003ஆம் ஆண்டு சமயத்தில், மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் டாடா இண்டிகா கார் விற்பனை செய்யப்பட்டது. இதில் எண்ட்ரீ-லெவல் டி.எல் வேரியண்ட்டில் பெரியதாக எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை. அதற்கடுத்த டி.எல்.இ வேரியண்ட்டில் ஏசி வழங்கப்பட்டது. இது அந்த சமயத்தில் கஸ்டமர்கள் பலரால் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அந்த டி.எல்.இ வேரியண்ட் தான் இந்த செய்தியில் நாம் பார்க்கும் இண்டிகா கார் ஆகும்.

இதற்கடுத்து டி.எல்.எஸ் வேரியண்ட்டில் ஏசி, பவர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பேசஞ்சர் சைடு மிரர் என அந்த சமயத்தில் ஆச்சிரியமாக பார்க்கப்பட்ட பல வசதிகள் வழங்கப்பட்டன. டாடா இண்டிகாவின் டாப் வேரியண்ட்டான டி.எல்.எக்ஸ்-இல் காரின் உடல் நிறத்தில் பம்பர்கள், ஆடியோ சிஸ்டம், செண்ட்ரல் லாக் & வீல் கேப்கள் உள்ளிட்டவையும் கூடுதலாக கிடைத்தன.

2003 tata indica still running

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 21 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட காரில் துருப்பிடித்தல் கூட ஏற்படவில்லை என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். டாடா கார்களின் தரத்தை வெளிக்காட்டுவதற்கு இதை விட சரியான உதாரணம் இருக்க முடியாது என நினைக்கிறோம். ஏனெனில், ஒரு சில கார்கள் தொடர்ந்து பராமரித்து வந்தால் நீடித்து உழைக்கும். ஆனால், இந்த காரில் பெரிய பராமரிப்பு பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என அதன் உரிமையாளர் கூறுகிறார். ஆதலால், இது காலத்தை கடந்த இயந்திரம் என்றே கூற வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 11:49 [IST]
English summary
2003 tata indica v2 hatchback car still in good condition check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X