சீறிப்பாய்ந்து வியக்க வைத்த மவுண்டெயின் பைக் சாகச வீரர்
அமெரிக்காவின் ஸியோன் தேசிய பூங்கா அருகே உள்ள மலைப்பகுதியில் ரெட்புல் ரேம்பேஜ் பைக் சாகச போட்டி நடத்தப்படுகிறது. ஆபத்தும், அபாயகரமும் நிறைந்ததாக அமைக்கப்பட்டிருக்கும் ஏற்றம் இறக்கம் மிகுந்த குறுகிய வழித்தடத்தில் பைக்கை செலுத்தி வருவதே போட்டியின் சாரம்சம். வழியில் இருக்கும் பள்ளங்களில் ஒரு குட்டிக் கரணமும் அவ்வப்போது போடுவது போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான போட்டியில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த மெக்காரி 72 அடி நீள இடைவெளி கொண்ட பாதாளத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட மேடையின் வழியாக குட்டி கரணம் அடித்து தாண்டி அனைவரையும் அதிசயிக்க வைத்தார். அத்துடன் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். மயிர்க்கூச்செரியும் விதத்தில் அவர் பைக்கை செலுத்தும் காட்சியை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/x76VEPXYaI0?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








