இன்றைய வீடியோ... 2014 செவர்லே கார்வெட் ஸ்டிங்ரேவின் ஜாலம்

2014 மாடல் செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே காரை ட்யூனிங் செய்து அறிமுகம் செய்துள்ளது ஹென்னிஸி. சாதாரண 2014 கார்வெட் ஸ்டிங்ரே கார் 460 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், அந்த காரை 1000 எச்பி ஆற்றல் கொண்டதாக மாற்றித் தருவதாக ஹென்னிஸி அறிவித்துள்ளது.

மேலும், எச்பிஇ500 என்ற பெயரில் 507 எச்பி ஆற்றல் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்ட பேஸ் பெர்ஃபார்மென்ஸ் மாடல் ஸ்டிங்ரே காரை அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அத்தோடு, அந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும் என்பதையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது. 0- 96 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட ஸ்டிங்ரே காரின் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2014 Chevy Corvette Stingray

ஸ்டிங்ரே காரின் சைலென்சர் சப்தம் மிக அலாதியாக இருக்கும் வகையில் ஹென்னிஸி விசேஷமாக ட்யூனிங் செய்துள்ளது. இதுபோன்று ட்யூனிங் செய்யப்படும் 2014 செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 58,000 கிமீ.,க்கான வாரண்டிடயையும் ஹென்னிஸி வழங்குகிறது. ஹெட்போனுடன் இந்த காரின் பெர்ஃபார்மென்ஸை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/ik7sD8wvqrY?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X