புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு கிடுக்குப்பிடி போட்ட சென்னை காவல்துறை..!!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு கிடுக்குப்பிடி போட்ட சென்னை காவல்துறை..!!
2017 விடைபெற்று, 2018 புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகன ஓட்டிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை சென்னை காவல்துறை பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கோவா, மும்பை, பெங்களூருவிற்கு பிறகு சென்னை நகரமும் முன்னிலை பெறுகிறது.
மெரீனா கடற்கரையில் மொத்த சென்னை வாசிகளும் கூடி, பட்டாசுகளை வெடித்து, கேக்குகளை வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

அப்போது, மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பல இளைஞர்கள், தங்களது பைக்குகளில் சென்று சாலையில் கண்னில் படும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டே வேகமாக செல்வார்கள்.

ஒருசிலர், பைக் ரேஸிங் மற்றும் ஸ்டெண்டுகளிலும் ஈடுபடுவார்கள். ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் இதுபோன்ற நிகழ்வுகளால் சாலை விபத்துகள் மற்றும் பொது மக்கள் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

முறைகேடுகளாக நடைபெறும் இதுபோன்ற சாலை விதிமீறல்களை தடுக்க, பல ஆண்டுகளாக சென்னை காவல்துறையும் புத்தாண்டு இரவில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

வரும் ஞாயிறன்று நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்றால், பாஸ்ப்போர்ட் பெற காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Trending On Drivespark Tamil:
Recommended Video


சென்னை காவல்துறை உதவி ஆணையாளர் அருணின் உத்தரவுப்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து காவல்துறை வழக்கத்தைவிட, கடும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

அதன்படி, புத்தாண்டு இரவில் விபத்து ஏற்படுவதை தடுக்க, பந்தயம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது வழக்கும் போடப்படும். ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை முழுவதும் சுமார் 176 இடங்களில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுவார்கள்.

குற்றங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், சோதனை சாவடிகள் அமைப்பது தொடர்பான எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை காவல்துறைக்கு சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 இரவு 11 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 3 மணி வரை அன்றைய தினம் முழுவதும் விடிய, விடிய போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும்.
தவிர சென்னையின் மையப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என மொத்தம் 3500 இடங்களில் காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
Trending On Drivespark Tamil:

இதுதவிர மெரீனா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் மெரீனாவை ஓட்டியுள்ள பள்ளி & கல்லூரி, கல்லூரி விடுதிகளில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

சென்னை காவல்துறை விதித்துள்ள இந்த கட்டுபாடுகளை பின்பற்றாமல், முறைகேடுகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் மீது கடுமையான சட்டங்கள் பாயும் என போலீஸ் எச்சரித்துள்ளது.

அதன்படி, குடிபோதையில் வகான ஓட்டினாலோ அல்லது அதிவேகமாக வாகனத்தில் சென்றாலோ வழக்கு தொடரப்படும்.
வழக்கில் சிக்கியவர்களுக்கு பாஸ்போர்ட் பெற போலீஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எப்போதுமே பாஸ்போர்ட் பெற முடியாத வகையில் உத்தரவுகள் பிறபிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
புத்தாண்டு இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை இந்த விதிகள் பொருந்தும். குற்றச்செயல்களை தடுக்கவே இதுபோன்ற கடுமையான உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








