2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு என்ன இடம்..?

செல்போன் செயலி மூலம் செயல்பட்டு வரும் கால் டாக்ஸி நிறுவனங்களில் ஒன்றான ஊபர் 2019ம் ஆண்டில் தனது சேவையை அதிகம் பயன்படுத்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இந்தியாவின் பெரு நகரங்களில் பொதுத்துறை வாகனங்களைக் காட்டிலும் அதிகளவில் தனியார் வாடகை வாகனங்களின் ராஜ்ஜியமே அதிகளவில் காணப்படுகின்றது. ஏன், சில இரண்டாம் நிலை நகரங்களின் சாலைகளையும் வாடகை வாகனங்களே ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

அதிலும், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் இந்திய வாடைக வாகன சந்தையில் தனிக் காட்டு ராஜவாக செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் வருகையால், உள்நாட்டு நிறுவனங்களான ஃபாஸ்ட் ட்ராக் உள்ளிட்ட ஒரு வாடகை வாகன நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் பின் தங்கிவிட்டன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இந்நிலையில், கால் டாக்ஸி சேவையில் ஜாம்பவானாக இருந்து வரும் ஊபர் நிறுவனம், நடப்பு 2019ம் ஆண்டில் அதன் சேவையை அதிகம் பயன்படுத்திய ஐந்து முக்கிய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேலையில் அனைத்துத்துறை சார்ந்த நிறுவனங்களும் அவைசார்ந்த பிரத்யேக தகவலை வெளியிட்டு வருகின்றன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இதனடிப்படையில், ஊபர் நிறுவனமும் அதன் சேவையை இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் நகரங்கள் போன்ற ஒரு சில தகவலை வெளியிட்டுள்ளது. இதில், எந்தெந்த நகரங்கள் எந்தெந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன என்பது பற்றிய தகவலை கீழே காணலாம்.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

ஊபர் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் டெல்லியே அதிகம் அதன் சேவையை பயன்படுத்தும் நகரங்களில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதையடுத்து, பெங்களூரு, ஹைதராபாத் கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இதுமட்டுமின்றி, ஊபர் நிறுவனம் ஊபர்பூல் என்ற பகிர்ந்து செல்லும் பயணம் சேவையையும் செய்து வரகின்றது. ஊபரின் இந்த சேவையையும் அதிகம் பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலிலும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அதிகளவில் புக்கிங் நடைபெற்ற நாள் மற்றும் பண்டிகை, இரவு நேரங்களில் அதிகம் புக்கிங் செய்யும் நகரங்கள் என பல தகவல்களை அது வெளியிட்டிருக்கின்றது.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இதன்படி, ஊபர்பூலை அதிகம் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் டெல்லியும் இருக்கின்றது. தொடர்ந்து, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இதேபோன்று, ஊபரில் அதிகம் புக்கிங் செய்யப்பட்ட நாளில் டிசம்பர் 7ம் தேதி முதன்மை இடத்தில் இருக்கின்றது. தொடர்ந்து, டிசம்பர் 6, நவம்பர் 30, நவம்பர் 29 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளிலும் அதிகளவு புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

மேலும், தூங்கா நகரங்களாக அதாவது இரவு 2 முதல் விடியற்காலை 5 மணி வரை புக்கிங் செய்யப்படும் பட்டியலில் மும்பை, சூரத், அஹமதாபாத், புனே மற்றும் கேரளாவின் கொச்சி உள்ளிட்ட நகரங்கள் பிடித்திருக்கின்றன. இதையடுத்து, அதிகம் புக்கிங் நடைபெற்ற திருவிழா நட்களாக ஹோலி, தஷேரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் காணப்படுகின்றன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

ஊபரின் இந்த தகவலில் சென்னை எந்தவொரு இடத்தையும் பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

தொடர்ந்து, ஊபருக்கு இணையாக பல்வேறு கால் டாக்ஸி சேவைகள் இந்தியாவில் களமிறங்கி வருகின்றன். ஆனால், வந்த தடம் தெரியமால் வந்த வேகத்திலேயே பின் வாங்கிச் செல்கின்றன.

2019ல் ஊபரை அதிகம் பயன்படுத்திய நகரம் எது தெரியுமா... இதில் சென்னைக்கு எந்த இடம்..?

இருப்பினும், தற்போது புதிதாக டி டாக்ஸி என்ற புதிய செயலி ஊபர் மற்றும் ஓலா ஆகிய இரண்டிற்கும் போட்டியாக களமிறங்கியுள்ளது. இது, கமிஷன் இல்லாமல் கட்டணம் முழுவதும் ஓட்டுநர்களுக்கே திட்டத்தில் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 28, 2019, 17:57 [IST]
English summary
2019 Top Uber Using Cities In India. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+