ஒரு ஆண்டு அபராத வசூல் மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா? டாஸ்மாக் தோத்துடும் போலயே!
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் குறித்த விரிவான ரிப்போர்ட்டை மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு என மோட்டார் வாகன சட்டம் அமலில் இருக்கிறது. வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த சட்டத்தை பின்பற்றி தான் சாலையில் வாகனங்களை ஓட்ட வேண்டும் இந்த சட்டத்தை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படியாக கடந்த 2022 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அபராதங்கள் குறித்த விரிவான விபரத்தை மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு மொத்தம் 4.73 கோடி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அபராத தொகையை கணக்கிட்டால் மொத்தம் ரூபாய் 4654.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பார்த்தால் மிகப் பெரிய அளவிலான தொகையாக இருக்கும். அரசுக்கு இந்த அபராதம் மூலம் மட்டுமே மிகப் பெரிய அளவிலான வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விதிக்கப்படும் அபராதங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் சாலையில் விபத்துகளும் அதிகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன இதன்படி இந்தியாவில் எந்தெந்த சாலை விதிமுறைகள் விதிமுறை மீறலுக்கு அதிகமான அபராதங்கள் விதிக்கப்படுகிறது என இங்கே காணலாம்.

மாசுகட்டுப்பாட்டு சான்று: இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் வாகனங்கள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் நாளடைவில் அதிகமான மாசுவை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால் வாகனம் வாங்கப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வாகனத்திற்கான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கிறது.
இதன் மூலம் அரசு இந்தியாவில் மாசு கட்டுப்பாட்டை கொண்டு வர முடியும் என நம்புகிறது. அதன்படி இந்த 2023-ம் ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி வரையில் மட்டும் மொத்தம் 1.5லட்சம் வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்படியாக மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை அபராதம் மிக்க மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் இடம் இருக்கிறது.

காலாவதியான பதிவு சான்றிதழ்: புதிதாக ஒரு வாகனத்தை வாங்கும் போது அதை அரசின் போக்குவரத்து துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான சான்றிதழ் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதி ஆகும்.இப்படியாக காலாவதி ஆகும் சான்றிதழ்களை கொண்ட வாகனங்கள்
அந்த நேரத்தில் மீண்டும் தகுதி ஆய்வு செய்யப்பட்டு அதற்கான சான்று நீட்டிப்பு வழங்கப்படும். சான்று நீட்டிப்பு வழங்கப்படாத வாகனங்களை சாலையில் இயக்குவது குற்றமாகும். இப்படியாக சாலையில் இந்த வாகனங்கள் இயங்கினால் அது சட்டப்படி குற்றமாகும். இதற்காக ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவது: இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணம் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டிக்கொண்டு இருப்பது தான். இப்படியாக மது போதையில் வாகனம் ஓட்டினால் அதிகமான விபத்து ஏற்பட்டு அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.
வாகன ஓட்டி ஒருவர் மது போதையில் வாகனம் ஓட்டும்போது போலீசாரிடம் சிக்கினால் முதன்முறை ரூபாய் 10,000 மீண்டும் அந்த தவறை செய்யும் போது ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து இதை தவறை செய்யும் நபர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அவசரகால வாகனத்திற்கு வழி விடாமல் இருப்பது: இந்திய மோட்டார் வாகன சட்டப்படி தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகள் வழி விட வேண்டும் என்பது விதிமுறை. இப்படியாக வழி விடாத வாகனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெரும்பாலும் இந்தியாவில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வாகன ஓட்டிகள் வழி விட்டாலும் சிலர் இதை மதிப்பதில்லை. இப்படியாக அவசரகால வாகனத்திற்கு வழி விடாமல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 25,000 வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க மோட்டார் வாகன சட்டத்தில் இடம் இருக்கிறது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல்: இந்தியாவில் வாகனம் ஓட்ட வாகன உரிமம் பெற வேண்டும் வாகனம் உரிமம் பெற ஒருவர் 18 வயதை கூட்டி அடைந்திருக்க வேண்டும். இப்படியாக 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அது இந்திய மோட்டார் வாகன சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்காக அவர்களுக்கு ரூபாய் 25,000 அபராதம் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அபராத தொகை எல்லாம் சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்களுக்கு தான் இந்திய மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி இந்தியாவில் வாகனம் ஓட்டினால் நிச்சயம் பாதுகாப்பாக வாகன ஓட்ட முடியும். இதனால் நீங்கள் இனி சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடாமல் வாகனம் ஓட்டுங்கள்.


Click it and Unblock the Notifications
