இன்னும் டெஸ்ட்டிங்கே முடியல, அதுக்குள்ள... விபத்தில் முட்டிக்கொண்டு நின்ற 2023 டாடா ஹெரியர் கார் -காரணம் என்ன?

இன்னும் சோதனையே முடிவடையவில்லை, அதற்குள் இப்படியா? என கேட்கும் வகையில் சோதனை ஓட்டத்தில் இருந்த 2023 டாடா ஹெரியர் கார் ஒன்று பொது சாலையில் மாருதி சுஸுகி எர்டிகா உடன் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பதை பற்றியும், புதிய ஹெரியர் காரில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களையும் இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'புலி மூக்கு வாகனம்' எனப்படும் அதன் பிரபலமான ஹெரியர் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் பணிகள் ஈடுப்பட்டு வருகிறது. நடப்பு 2023ஆம் வருடத்தின் இறுதியில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை மாதிரிகளை சமீப காலமாக அடிக்கடி சாலையில் பார்க்க முடிகிறது.

சோதனை ஓட்டத்தின்போது விபத்தில் சிக்கிய 2023 டாடா ஹெரியர்!!

அந்த வகையில் சமீபத்தில் 2023 ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரின் மாதிரி ஒன்று குர்கான் நகரத்திற்கு அருகே மற்ற வாகனங்களும் இயங்கும் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட நிலையில், சாலையில் தனக்கு முன்பாக சென்று கொண்டிருந்த மாருதி சுஸுகி எர்டிகா காரின் பின்பக்கத்தில் 2023 ஹெரியர் சோதனை கார் மோதியுள்ளது. இதில் மோதலுக்கு உள்ளான மாருதி எர்டிகா கார் டாக்ஸி சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

மாருதி எர்டிகா காரின் பின்பக்கத்தில் மோதிய வேகத்தில் ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வலதுப்பக்க முன்பக்கம் அப்பளம் போல் அழுத்தப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், வலதுப்பக்க முன் சக்கரம் விபத்திற்குள்ளான எர்டிகா காரின் பின்பக்க பம்பரில் மோதி நின்றுள்ளது. இந்த சம்பவத்தில், 2023 ஹெரியர் சோதனை காரின் முன் பம்பரும், சம்பந்தப்பட்ட எர்டிகா பின் பம்பரும் நேரெதிராக மோதிக்கொண்டுள்ளன.

இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம். இரண்டு கார்களுக்குமே மோதலினால் ஆன சேதாரங்கள் குறைவாகவே உள்ளன. காரின் ஃபெண்டர்கள் மற்றும் மற்ற பேனல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால் இவை இரண்டும் சற்று குறைந்த வேகத்திலேயே மோதி கொண்டிருக்க வேண்டும். மற்றப்படி இந்த மோதல் குறித்து பெரியதாக எந்த விபரமும் நமக்கு கிடைக்க பெறவில்லை.

டாடா ஹெரியர் சோதனை மாதிரியை ஓட்டிய டிரைவர் காரின் அடாஸ் வசதிகளை சோதித்து பார்த்த சமயத்தில் இந்த விபத்து நடந்து இருக்கலாம். இந்த மோதலினால் எவரொருவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. டாடா ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் மட்டுமே குறிப்பிடத்தக்க அப்கிரேட்களை டாடா நிறுவனம் கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது.

2023 ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்து தற்போதுவரையில் கிடைத்துள்ள ஸ்பை படங்களில் கார் முழுவதுமாக மறைப்பால் மூடியுள்ளது. இருப்பினும், ஹெரியரின் பிளவுப்பட்ட டிசைனிலான ஹெட்லேம்ப் தற்போதைய மாடலில் இருந்து அப்படியே தொடரப்பட உள்ளது. முன்பக்க பம்பர் தற்போது விற்பனையில் ஹெரியர் காரில் இருப்பதை காட்டிலும் கூடுதல் கூர்மையான வடிவில் வழங்கப்படலாம். அதேபோல் முன்பக்கத்தில் க்ரில் அமைப்பின் டிசைனும் மாற்றப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

அடாஸை சோதனை செய்தபோதுதான் கார் விபத்தில் சிக்கி இருக்கும் என்பதை நாங்களாக ஓர் யூகமாகவே கூறுகிறோமே தவிர்த்து, உண்மையில் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை. இதனால் இந்த விபத்திற்கு காரணம் எந்த கார் ஓட்டி என்பதையும் உறுதியாக கூற இயலவில்லை. எந்த கார் ஓட்டுனர் மோதலை ஏற்படுத்தி இருப்பார் என உங்களுக்கு தோன்றுகிறது. கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 16:51 [IST]
English summary
2023 tata harrier test mule craches into maruti suzuki ertiga video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+