மத்திய அரசு இந்த முறை எதையெல்லாம் குறி வைத்திருக்கோ... 2024-25 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை!!

3வது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக அரசு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 23ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை வெளியிட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் இந்த பொது பட்ஜெட் ஆனது 2024-25ஆம் நிதியாண்டிற்கானது ஆகும். மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் குறுகிய காலத்தில் வெளிவரும் பட்ஜெட்டாக இது இருப்பினும், இதற்குமுன் ஆட்சியில் இருந்ததும் இதே கட்சி தான் என்பதால், மிக முக்கியமான அறிவிப்புகள் 2024-25 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, வருமான வரி குறித்த திட்டங்களை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேபோல், பழைய வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்கும் விதமான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. 2024-25 பொது பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை தொடர்பாக என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்பதை கீழேயுள்ள வீடியோவில் விரிவாகவும், எளிமையாகவும் விளக்கி கூறியுள்ளோம்.

கார்பன் மாசற்ற போக்குவரத்திற்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரது கருத்தாக உள்ளது. இதன் வெளிப்பாடாகவே 2019ஆம் ஆண்டில் ஃபேம்-2 திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மானியங்களை பெற்று வருகின்றன. ஆனால், கடந்த 2023 ஜூன் மாதத்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான மானியம் சற்று குறைக்கப்பட்டது.

2024-25 budget automobile sector expectations

இதனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் சற்று அதிகரிக்கப்பட்டதை கடந்த ஆண்டில் பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி, ஃபேம்-2 திட்டத்தில் அதன்பின் பெரியதாக எந்த மேம்பாடுகளும் கொண்டுவரப்படவில்லை. இதனால், இந்த பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம். ஆனால், ஃபேம்-3 இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுப்பக்கம், சிஎன்ஜி வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், அதுகுறித்த அறிவிப்பு எதாவது பட்ஜெட்டில் இருக்குமா என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 8:00 [IST]
English summary
2024 25 budget expectations of automobile sector explain video in tamil
மேலும்... #union budget #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+